Published:Updated:

இலவச மின் இணைப்பை துண்டித்தால் கையை வெட்டுவோம் : விவசாய சங்கம் எச்சரிக்கை

இலவச மின் இணைப்பை துண்டித்தால் கையை வெட்டுவோம் :  விவசாய சங்கம் எச்சரிக்கை
இலவச மின் இணைப்பை துண்டித்தால் கையை வெட்டுவோம் : விவசாய சங்கம் எச்சரிக்கை

திருச்சி: இலவச மின்சாரம் தொடர வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பை துண்டிக்க வரும் மின்வாரிய ஊழியர்களின் கையை வெட்டுவோம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணைய கூட்டத்தில் விவசாய சங்கத் துணை தலைவர் இப்படி பேசியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் ஆணையத்தின் செயலாளர் எஸ்.குணசேகரன், உறுப்பினர்கள் கே.வேணுகோபால், நாகல் சாமி ஆகியோர் தலைமையில் திருச்சியில் இன்று கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும், மின் கட்டணத்தை மாற்றி அமைக்க கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

##~~##
இதனிடையே, கூட்டத்தில் பேசிய பாரதிய கிஷான் விவசாய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ஐய்யாகண்ணு, இலவச மின் இணைப்பு தொடர வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பை துண்டிக்க வரும் அலுவலர்களின் கையை துண்டிப்போம் என்று ஆவேசமாக கூறினார்.
இதனால், கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாதிக் பாட்சா