Published:Updated:

இயற்கை கொடுத்த விருது!

இயற்கை கொடுத்த விருது!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை கொடுத்த விருது!

விருதுஜெ.மகிழ்

இயற்கை கொடுத்த விருது!

விருதுஜெ.மகிழ்

Published:Updated:
இயற்கை கொடுத்த விருது!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை கொடுத்த விருது!

பல்வேறு துறைகளில் சாதனை படைத்துச் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விகடன் குழுமத்தின் ஓர் அங்கமான அவள் விகடன் சார்பில் ‘அவள் விருதுகள்’ கடந்தாண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டாமாண்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 24-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ‘பசுமைப் பெண்’ பிரிவில் சிறந்த பெண்ணாக இந்தாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் திருவள்ளூர் மாவட்டம், அத்திமாஞ்சேரியில் இயற்கை விவசாயம் செய்து வரும் சித்தம்மா.

இயற்கை கொடுத்த விருது!

ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த அரங்கில் விவசாயத்துக்காக கொடுக்கப்பட்ட இந்த விருது பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்தியது. சித்தம்மாவுக்குத் திரைப்பட நடிகைகள் விஜி சந்திரசேகர், குட்டி பத்மினி ஆகியோர் விருது வழங்கினர். விருது பெற்றுக்கொண்ட பின் பேசிய அவர், “இந்த விருது வாங்குறதுக்கு முன்ன பல கஷ்டங்களை என் வாழ்கையில அனுபவிச்சிருக்கேன். என்னோட பூர்வீகம் கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்துல இருக்கிற சிவகங்கா. எங்கப்பா தனியார் கம்பெனிக்குப் புகையிலையைப் பயிர் செஞ்சு கொடுக்கிறதுக்காக, அதிகப் பரப்பளவுல கடன உடன வாங்கி, ரசாயன உரங்கள கொட்டி விளைவெச்சு கொடுத்தாரு. அனுப்புன புகையிலை கப்பல்ல எங்கோ கொட்டி விபத்துக்குள்ளாயிடுச்சு. அதனால, பணத்த கொடுக்காம கைவிரிச்சுடுச்சு கம்பெனி. போட்ட மொத்த முதலும் முழுங்கிட்டதால, எங்கப்பா தற்கொலை செய்யப் போனாரு. போனவர தடுத்து, இருந்த நிலங்கள வித்துக் கடன அடைச்சோம். விவசாயமே வேண்டாம்னு தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கே இருளர் மக்களுக்கான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்திட்டு இருந்தேன். அந்தச் சமயத்துலதான் நம்மாழ்வார் ஐயா இயற்கை விவசாயப் பிரசாரத்துல ஈடுபட்டுட்டு இருந்தாரு. அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்குப் போய் அவருடைய பேச்சைக்கேட்ட பிறகுதான் விவசாயத்து மேல ஒரு நம்பிக்கை வந்துச்சு. இந்த ரசாயனம்தான் விவசாயிகளை இந்த இழிநிலையில வெச்சிருக்குனு நினைச்சு விவசாயிகள்கிட்ட ரசாயன உரம் போடாதீங்கனு போய்ச் சொன்னேன். யாரும் கேக்கல. நம்மாழ்வார் ஐயாவ சந்திச்சு ‘விவசாயிககிட்ட ரசாயன உரங்கள போடாதீங்கன்னு சொன்னா, யாரும் கேக்க மாட்டேங்குறாங்க’னேன். ‘நீ நடத்தி காட்டு நம்புவாங்க’னு சொன்னார்.

இயற்கை கொடுத்த விருது!

அப்படி நம்மாழ்வாரோட ஆலோசனையில அத்திமாஞ்சேரியில கரடுமுரடா இருந்த, 13 ஏக்கர் நிலத்தை வாங்குனேன். இந்த நிலத்தைத் திருத்தி, செப்பனிட்டு நெல், துவரை, மானு சாகுபடி செஞ்சிட்டு வர்றேன். அதுவும் நெல்லுல ஒற்றை நாற்று நடவு முறையில நெல் சாகுபடி செஞ்சிட்டு வர்றேன். முன்ன ஒரு ஏக்கருக்கு 25 கிலோ நெல்லை நாத்து விடுவேன். ஒற்றை நாற்று நடவு முறையில 2.5 கிலோ நெல் போதுமானதா இருக்கு. நடும்போது வேலை சுலபமா முடியுங்கறகிறதுக்காக 3 வரிசை கயிறு கட்டி நடவு செஞ்சிட்டு வர்றேன். இந்த முறையைப் பல விவசாயிகளுக்குச் சொல்லி கொடுத்துட்டு வர்றேன். அவங்களும் வேலையைச் சுலபமாக்கிகிட்டு நல்ல மகசூல் எடுத்துட்டு வர்றாங்க. வேளாண் துறை அதிகாரிங்ககூட வந்து பாத்துட்டு பாராட்டிட்டு போறாங்க. இதோடு வேளாண் துறை நடத்துற ஒற்றை நாற்று நடவு பத்தி பயிற்சி கொடுக்கிறதுக்கும் போய்ட்டிருக்கேன். இதுமூலமா நூத்துக்கணக்கான விவசாயிகள் ஒற்றை நாற்று நடவுக்கு மாறியிருக்காங்க.

இயற்கை கொடுத்த விருது!

என் பண்ணையில 20 வருஷமா இயற்கை விவசாயம்தான். பசுமை விகடனோடு சேர்ந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சியெல்லாம் கொடுத்திருக்கோம். இன்னைக்கும் என்னோட பண்ணைக்கு இயற்கை விவசாயத்த கத்துக்கிறதுக்கு நிறைய பேர் வந்துட்டு இருக்காங்க. விவசாயமே வேண்டாம்னு ஒதுங்கிபோன என்ன விவசாயத்துக்கு அழைச்சிட்டு வந்து அத எப்படிச் செய்யணும்னு கத்துகொடுத்தவர்  
‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். அவருக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்” என்று பேசி முடித்தபோது அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.  நடிகை குட்டி பத்மினி பேசும்போது, “நானும் காஞ்சிபுரம் பக்கத்துல இயற்கை விவசாயம் செஞ்சிட்டு வர்றேன். ஆனா, எங்களுக்கு வருமானத்துக்குத் திரைப்படத் துறை இருக்கு. சித்தம்மா மாதிரியான பெண்களுக்கு விவசாயம்தான் பிரதானம். அதுவும் தனியொருத்தியாக நின்று இத்தனை வருஷம் இயற்கை விவசாயம் செஞ்சு, அதுல வர்ற வருமானத்த வெச்சு வாழ்ந்துட்டு இருக்காங்கன்னா அது பெரிய விஷயம். அவங்களுக்குத் தலைவணங்குறேன்” என்றார் நெகிழ்ச்சியாக.

நடிகை விஜி சந்திரசேகர் பேசும்போது, “சின்ன வயசிலேயே கரடி தாக்கி முகம் சிதைந்த நிலையிலும், தனக்கு ஒன்று இப்படி நிகழ்ந்துவிட்டதே என்று கண்கலங்கி ஓரமா ஒக்காராம, ஓடியாடி பல இடங்களுக்குப் போயி விவசாயத்த கத்துகிட்டு, மத்தவங்களுக்கும் சொல்லி கொடுத்துகிட்டு, இன்னைக்குக் கௌரவமான இயற்கை விவசாயியா நிமிர்ந்து நிக்கறாங்க சித்தம்மா. இவங்கதான் உண்மையான அழகி... அழகு தேவதை... இவங்களதான் நாம கொண்டாடணும். அழகு என்பது முகத்துல இல்ல. செயல்லதான் இருக்கு. பசுமை விகடன் மாதிரியான புத்தகங்கள் இவங்கள அடையாளப்படுத்திட்டு இருக்கு. இதற்கும் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்” என்றார் பெருமையோடு.

இயற்கை கொடுத்த விருது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism