Published:Updated:

‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி?

‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி?

ஆலோசனை

‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி?

ஆலோசனை

Published:Updated:
‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி?

ஜா புயலில் தங்களது தென்னை மரங்களை இழந்த விவசாயிகள் பெரும் துயரத்தில் தவிக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அதிராமபட்டினம் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் தென்னைச் சாகுபடி நடைபெற்று வந்தது. இங்குள்ள விவசாயிகளுக்குத் தென்னை மட்டுமே பிரதானமான வாழ்வாதாரமாக இருந்து வந்தது.

நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும்கூட கணிசமான அளவு தென்னை, பயிர் செய்யப்பட்டு வருமானம் கொடுத்துக் கொண்டிருந்தது. புயலில் தென்னையைப் பறிகொடுத்த விவசாயிகள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். வருமானத்திற்கு வேறு வழியில்லாததால் இவர்களில் பெரும்பாலானோர் உடனடியாக மீண்டும் தென்னை நடவு செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர், முனைவர் கார்த்திகேயன் தென்னை விவசாயிகளுக்குச் சில முக்கிய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார். 

‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி?

“தோப்பில் உள்ள தென்னை மரங்களைத் தற்போது அகற்றுவது மிக முக்கியம். தொடர்ந்து புதிய கன்றுகளை நடவு செய்ய தை மாதம் வரை பொறுத்திருக்க வேண்டும். தற்போது மழை பெய்து வருவதால், லேசாகப் பாதிப்புக்குள்ளான மரங்கள் சாய்வதற்கு வாய்ப்புள்ளது. மேலும் மட்டைகள், குரும்பைகள் உதிரவும் வாய்ப்புள்ளது. அதனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இளம் மரங்களில் முறிந்திருக்கக்கூடிய குருத்துகளை அடியோடு வெட்டினால், புதிய குருத்துகள் வேகமாகவும் தரமானதாகவும் வளர்ந்துவிடும். பழைய குருத்து நீக்கப்பட்ட இடத்தில் குருத்துப் புழுக்கள் உருவாகாமல் தடுக்க, பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை இட வேண்டும். வயதான மரங்களில் குருத்து முறிந்திருந்தால், பிழைப்பது கடினம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி?

புதிய தென்னங்கன்றுகளைத் தை மாதம் தொடங்கி மாசி மாதம் 15-ம் தேதி வரை நடவு செய்யலாம். கோடைக்காலம் துவங்கிய பிறகு, கன்றுகள் நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பிறகு ஆடி மாதத்தில் தென்னை நடவு செய்யலாம். மரங்களுக்கிடையில் 25 அடி இடைவெளி இருக்க வேண்டும். பழைய மரம் இருந்த இடத்திலிருந்து ஆறு அடி தள்ளித்தான் புதிய கன்றுகளை நடவு செய்ய வேண்டும். பழைய மரங்களின் வேர்கள் மண்ணுக்குள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டியதில்லை. அவை காலப்போக்கில் தானாகவே மட்கிவிடும்.

பெரிய பரப்பளவிலும் அதிக ஆழத்திலும் குழி (3 அடி சதுரம், 3 அடி ஆழம்) எடுத்து நடவு செய்த மரங்கள் புயலில் சாயாமல் தாக்குப்பிடித்து நிற்கின்றன. எங்கள் ஆராய்ச்சி மையத்தில் புயலால் சாயாமல் இருக்கும் மரங்களே இதற்குச் சாட்சி. வேர்கள் நன்கு ஆழமாகச் சென்றால், மரத்தின் உறுதித்தன்மை அதிகரிக்கிறது.

‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி?

குழியில் செம்மண், மணல், மட்கிய தொழுவுரம் மூன்றையும் சம அளவு கலந்து, ஒன்றரையடி உயரம் வரை நிரப்ப வேண்டும். குழியில் அரைக்கிலோ கல் உப்பைப் போட்டால், கறையான்கள் தாக்குதல் இருக்காது. பிறகு நடுவில் பள்ளம் பறித்து, கன்றை நடவு செய்து மண்ணை நன்கு அழுத்திவிட வேண்டும். குழியின் மேற்பகுதியில் ஒன்றரையடி உயரத்துக்கு வெற்றிடமாகவே இருக்க வேண்டும். தென்னை மரங்கள், சல்லி வேர்களை உடையவை. ஆணி வேர்கள் இருக்காது. குழியின் மேற்பகுதியில் மண் இருந்தால், வேர்கள் மேல்நோக்கி வந்துவிடும். இதனால் உறுதித்தன்மை பாதிக்கப்படும்” என்று வழிகாட்டினார் கார்த்திகேயன்.

தொடர்புக்கு: தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

தொலைபேசி: 04373 260205, 260124

- கு.ராமகிருஷ்ணன்,  படங்கள்: ம.அரவிந்த்

கன்றுகள் கவனம்!

தென்னங்கன்றுகளில் 9-12 மாத வயதுடைய கன்றுகளைத்தான் நடவு செய்ய வேண்டும். கன்றில் 5-6 இலைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கன்றின் கழுத்துப்பகுதி தடிமனாகவும் 8-10 சென்டி மீட்டர் சுற்றளவும் இருக்க வேண்டும்.

ரகங்கள்!

டெல்டா மாவட்டங்களுக்குக் கிழக்கு கடற்கரை நெட்டை, வேப்பங்குளம்-2, வேப்பங்குளம்-3, வேப்பங்குளம்-4 ஆகிய ரகங்கள் ஏற்றவை. வறட்சியான பகுதிகளுக்கு வேப்பங்குளம்-5 ஏற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை; நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள மல்லியம்; புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள வெள்ளாளவிடுதி ஆகிய பகுதிகளில், வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் தென்னை நாற்றங்கால் மையங்கள் உள்ளன. இங்கு தரமான கன்றுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism