Published:Updated:

மேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்!

மேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
மேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்!

நாட்டு நடப்பு

மேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்!

நாட்டு நடப்பு

Published:Updated:
மேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
மேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்!

காவிரி நதி விவகாரத்தில், கர்நாடக மாநிலம் செய்யும் அழிச்சாட்டியங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடக எல்லைக்குள் உள்ள மேக்கேதாட்டூ பகுதியில் அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறது, கர்நாடகா. சமீபத்தில் மத்திய நீர்வள ஆணையம், அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ளும் விரிவான வரைவுத் திட்டத்துக்கு அனுமதி அளித்திருப்பது, தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளும் நீர்வள ஆணையத்தின் செயல்பாட்டுக்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன. வரைவுத் திட்டத்துக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது, தமிழக அரசு.

இவ்விவகாரம் குறித்து, தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீரப்பன் சில தகவல்களை நம்மிடம் சொன்னார். “தொழில்நுட்பம் தொடர்பான ‘தடையில்லாச் சான்றிதழ்’ வழங்குவதுதான் மத்திய நீர்வள ஆணையத்தின் பணி. அணை கட்டுவதற்கான விரிவான வரைவுத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டியது, மத்திய நீர்வளத்துறைதான். ஆனால், மத்திய நீர்வள ஆணையம் இதற்கு அனுமதி கொடுத்திருப்பது, கேலிக்கூத்து” என்ற வீரப்பன் தொடர்ந்தார்...

மேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்!

“காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி உத்தரவில், தமிழகத்துக்குத் தரப்படும் காவிரி நீரின் அளவில் 14.75 டி.எம்.சி அளவு தண்ணீரை, பெங்களூருவின் குடிநீர்த் தேவைக்காகக் கொடுக்கச் சொல்லியிருக்கிறது. மொத்தமுள்ள 192 டி.எம்.சி தண்ணீரில் 14.75 டி.எம்.சி அளவை எடுத்துக் கொள்கிறது, கர்நாடகா. அதன் பிறகும், குடிநீருக்காக மேக்கேதாட்டூவில் அணை கட்டுகிறோம் என்று கர்நாடகா அரசு சொல்வது சுத்த ஏமாற்றுவேலை. இதற்குத் தமிழக அரசு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்.

கடந்த டிசம்பர் 3-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், ‘இது அடிப்படையான விஷயத்துக்குக் கொடுக்கப்பட்ட அனுமதியே தவிர, அணை கட்டுவதற்குக் கொடுக்கப்பட்ட அனுமதி அல்ல’ என்று தெரிவித்து இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்!

அவர் இந்தப் பிரச்னையை எளிதாக எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பிரச்னையின் ஆழம் அவருக்குத் தெரியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இதேநேரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி இருப்பது சரியான முடிவு.

தமிழக எதிர்க்கட்சிகள் டிசம்பர் 4-ம் தேதி, பெரிய அளவில் போராட்டத்தை நடத்தியிருப்பதும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும் வரவேற்கத்தக்கது. மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதை அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் முழுமையாக எதிர்க்க வேண்டும். கர்நாடகா, மேக்கேதாட்டூவில் அணை கட்டி மைசூரு, மண்டியா, பெங்களூரு ஆகிய நகரங்களுக்குக் குடிநீர் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நகரங்களுக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிருஷ்ணராஜசாகர் அணையில் தண்ணீர் எடுக்காமல்... 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதிலிருந்தே கர்நாடகாவின் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்” என்ற வீரப்பன் நிறைவாக, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களோடு ஆலோசிக்காமல் காவிரியில் எந்த ஒரு அணையையும் கர்நாடகம் கட்டக்கூடாது.

எனவே, தமிழக அரசு கண்துடைப்புக்காக அல்லாமல், தீவிரமான சட்டப் போராட்டத்தில் இறங்க வேண்டும். அனைத்துக் கட்சியினரிடம் ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக மக்கள் ஒரே அணியில் திரண்டு, எதிர்ப்புக் காட்ட வேண்டும்” என்றார் உறுதியுடன்.

- த.ஜெயகுமார்

மேக்கேதாட்டூ- ஒரு பார்வை

தமிழ்நாட்டு எல்லையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், ராம்நகர் மாவட்டம் கனகபுராவுக்கு அருகே அமைந்துள்ளது, மேக்கேதாட்டூ. பெங்களூரு நகரத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5,912 கோடி ரூபாயில் மேக்கேதாட்டூவில் அணைகட்ட திட்டமிட்டது, கர்நாடகா. கடந்த 2015-ம் ஆண்டு, சித்தராமையா தலைமையில் அமைந்திருந்த காங்கிரஸ் ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கைப் பணிகளுக்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் காவிரி நதிநீர்ப்பங்கீடு தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே மேக்கேதாட்டூ அணை விவகாரத்தைக் கிளப்பி வழக்கைத் திசைதிருப்ப கர்நாடகா முயற்சி செய்தது. ஆனால், அப்போது தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சியைக் கைவிட்டது. தற்போது, ‘தமிழ்நாட்டுக்கு முறையாகத் தண்ணீர் கொடுக்கவும், பாசனத்துக்காகவும் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த இருக்கிறோம்’ என்று சொல்லி வருகிறார், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்.

மேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்!

தலைக்காவிரியிலிருந்து தமிழக எல்லை வரை ஹாரங்கி (8 டி.எம்.சி கொள்ளளவு), ஹேமாவதி (35 டி.எம்.சி கொள்ளளவு), கிருஷ்ணராஜசாகர் (45 டி.எம்.சி கொள்ளளவு), கபினி (15 டி.எம்.சி கொள்ளளவு) ஆகிய நான்கு அணைகளைக் காவிரியின் குறுக்கே கட்டியிருக்கிறது, கர்நாடகா. இதன்மூலம் 103 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இதைத்தவிர்த்து மேக்கேதாட்டூவில் கட்டப்படவிருக்கும் அணையின் மூலம் 67 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்க திட்டமிட்டிருக்கிறது கர்நாடகா. மேற்கண்ட அணைகளில்  சேமித்தது போக மீதியைத்தான் தமிழகத்துக்குக் கொடுக்கிறது.

‘கடந்த தென்மேற்குப் பருவமழையின்போது 346 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறோம். அதில் 200 டி.எம்.சி தண்ணீரைத் தமிழகம் கடலில் கலக்கவிட்டிருக்கிறது. அதனால்தான் உபரியான தண்ணீரைச் சேமிக்க நாங்கள் அணை கட்டுகிறோம்’ என்று தமிழகத்தின் மீது பழியைப் போட்டு, அணை கட்டுவதற்கான நியாயத்தைச் சொல்கிறார், கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி.
 
தமிழ்நாட்டில் காவிரி நீரைச் சேமிக்க 93 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை மட்டுமே இருக்கிறது. ‘மேட்டூருக்குக் கீழே தடுப்பணைகள் மட்டுமே கட்ட முடியும். அணை கட்ட முடியாது’ என்கிறார்கள், தமிழகப் பொதுப்பணித்துறை பொறியாளர்கள். தற்போது ‘தமிழக எல்லையிலுள்ள ராசிமணல், ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் அணை கட்டலாம்’ என்று ஆலோசனை சொல்கிறார்கள்.

‘மேக்கேதாட்டூவில் அணை கட்டினால், ஆற்றில் வரும் தண்ணீரின் வேகம் தடைப்படும் என்றும், தமிழகத்துக்கு முழுமையான தண்ணீர் கிடைக்காது என்றும், அதிக மழையின்போது தமிழகத்துக்குக் கிடைத்துவரும் உபரிநீர் முற்றிலும் கபளீகரம் செய்யப்படும்’ என்று எச்சரிக்கிறார்கள், பொறியாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism