Published:Updated:

இன்குலாப் ஜிந்தாபாத்! மோடி சர்க்கார் முர்தாபாத்! - டெல்லியை அதிர வைத்த போராட்டம்

இன்குலாப் ஜிந்தாபாத்! மோடி சர்க்கார் முர்தாபாத்! - டெல்லியை அதிர வைத்த போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
இன்குலாப் ஜிந்தாபாத்! மோடி சர்க்கார் முர்தாபாத்! - டெல்லியை அதிர வைத்த போராட்டம்

போராட்டம்

டந்த நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், தலைநகர் டெல்லியில் நடந்த விவசாயிகள் விடுதலைப் போராட்டம், தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ‘அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’ (AIKSCC) என்ற பெயரில்... இந்தியா முழுவதிலுமிருந்து 210 விவசாய அமைப்புகள் ஒன்று சேர்ந்து இப்போராட்டத்தை நடத்தியுள்ளன. ‘கடனிலிருந்து நிரந்தர விடுதலை’, ‘உற்பத்தி விலையிலிருந்து 50% கூடுதல் விலை (C2+50%)’ ஆகிய கோரிக்கைகளை  முன்வைத்து நடந்த இப்போராட்டத்தில் ஒரு லட்சம் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இன்குலாப் ஜிந்தாபாத்! மோடி சர்க்கார் முர்தாபாத்! - டெல்லியை அதிர வைத்த போராட்டம்

பத்திரிகையாளர் பி.சாய்நாத் அவர்களின் முன்னெடுப்பில், ‘விவசாயிகளுக்கான தேசம்’ (Nation for Farmers) என்ற பெயரில் விஞ்ஞானிகள், மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். நவம்பர் 29-ம் தேதி, ராம்லீலா மைதானத்துக்குப் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். ‘இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வெல்லட்டும்!), மோடி சர்க்கார் முர்தாபாத் (மோடி அரசு வீழட்டும்!)’ என்ற முழக்கங்களில் மாநகரமே அதிர்ந்தது.

யோகேந்திர யாதவ், அவிக்சா, கவிதா குருகந்தி, அசோக் தவாலே, கிரண் விசா, சாய்நாத், வி.என்.சிங் போன்ற பல தலைவர்கள், பேரணியில் இறுதிவரை நடந்து வந்து, தங்கள் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். அன்று இரவு, ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் பிரச்னை குறித்த நாடகங்கள், பிற கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்குலாப் ஜிந்தாபாத்! மோடி சர்க்கார் முர்தாபாத்! - டெல்லியை அதிர வைத்த போராட்டம்
இன்குலாப் ஜிந்தாபாத்! மோடி சர்க்கார் முர்தாபாத்! - டெல்லியை அதிர வைத்த போராட்டம்

மறுநாள், பாராளுமன்ற வீதியில் முழுநாள் போராட்டமும் கூட்டமும் நடந்தது. கூட்டத்தின் பிற்பகுதியில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ராகுல் காந்தி, அர்விந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா போன்ற முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

வேட்டவலம் மணிகண்டன், காளிராஜ், தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெருமாள், வாழ்க விவசாயிகள் சங்கம் மற்றும் ஏ.ஐ.கே.எஸ்.சி.சி-யின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் போன்ற விவசாயிகள் சங்கத்தலைவர்களின் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.

இந்த இரண்டு நாள் போராட்டத்தின் மூலம்... விவசாயிகள் பிரச்னை, அகில இந்திய பிரச்னையாக விவாதிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.  

- க.சரவணன்

தேர்தல் வாக்குறுதி என்னவானது?

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் 20 விவசாயிகளோடு சென்று கலந்து கொண்டு திரும்பியிருந்த தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் நம்மிடம் பேசினார்.

“நாட்டின் 24 மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தை வெவ்வேறு முறையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் போராட்டத்தை முடக்குவதிலேயே குறியாக இருந்தது மத்திய அரசு. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ‘எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவோம், விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவிகித விலை என்பதை நடைமுறைபடுத்துவோம்’ என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது பா.ஜ.க. இந்தக் கோரிக்கையை வைத்து வெற்றி பெற்று, பதவியேற்று 5 ஆண்டுகள் முடிந்து, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னும் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அதைப் பிரதமர் மோடிக்கு நினைவுப்படுத்துவதற்காகத்தான் இவ்வளவு விவசாயிகள் கூடினோம். வரும் தேர்தலிலாவது விவசாயிகளின் கோரிக்கை பேசப்படும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism