Published:Updated:

இயற்கைப் பாடம்!

இயற்கைப் பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கைப் பாடம்!

இயற்கைப் பாடம்!

இயற்கைப் பாடம்!

இயற்கைப் பாடம்!

Published:Updated:
இயற்கைப் பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கைப் பாடம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

இயற்கைப் பாடம்!



ஜா புயலின் கோரத்தாண்டவம், டெல்டா விவசாயிகளின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. ‘கற்பக தரு’ என்று விவசாயிகளால் அழைக்கப்படும் தென்னை மரங்கள், கஜா புயல் பயணித்த பாதையில் பிடுங்கி எறியப்பட்டுள்ளன. ஆனால், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் கிராமத்தைச் சேர்ந்த சீனு என்ற விவசாயியின் தென்னந்தோப்பு, குறைந்த சேதங்களோடு தப்பியுள்ளது. அதாவது, கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் அதிக அளவில் தென்னை மரங்களைப் பறிகொடுத்த கிராமங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இவருடைய தோப்பில் மட்டும் 200 தென்னை மரங்கள் கஜாவுக்குத் தலைசாயாமல், கம்பீரமாக நிற்கின்றன. சுற்றுவட்டார மக்கள், தினந்தோறும் இவரது தென்னந்தோப்பை வந்து பார்வையிட்ட வண்ணம் உள்ளனர்.

‘‘கடந்த சில வருஷமாவே பள்ளிக்கூட வாத்தியார் செல்வகுமார் சொல்ற வானிலை செய்திகளைக் கேட்டு, அதுக்கேத்தபடிதான் சாகுபடி செய்றேன். பலமான புயல் அடிக்கப்போவுதுனு சில நாள்களுக்கு முன்னாடியே சொன்னாரு. சேதத்தை எப்படிக் குறைக்கலாம்னு நிறைய ஆலோசனைகளும் சொன்னாரு. தென்னை மரத்தோட தலைக்கனத்தைக் குறைச்சிட்டா, மரங்களை ஓரளவு காப்பாத்த முடியும்னாரு. உடனே, தேங்காய், குரும்பை, மரத்துக்கு 10 மட்டைனு வெட்டி தள்ளினேன்.

இதைப்பார்த்ததும், எனக்குக் கிறுக்குப் புடிச்சிடுச்சின்னு சுத்தி உள்ளவங்க சிரிச்சாங்க. ஆனா, இப்போ நான் செய்த வேலையைப் பார்த்துப் பாராட்டுறாங்க’’ என்று புயலில் மீண்ட கதையை அனைவருக்கும் பாடமாகச் சொல்லி வருகிறார், சீனு.

இது டெல்டா விவசாயிகள் மட்டுமல்ல, உலகில் வாழும் ஒட்டுமொத்த விவசாயிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய இயற்கைப் பாடம். இயற்கையை வெல்ல முடியாது. ஆனால், இணைந்து வாழமுடியும். இதைத்தான் அனைவருக்கும் சீனு வாயிலாக மீண்டும் உணர்த்தியிருக்கிறது இயற்கை!

- ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism