Published:Updated:

புயலில் சாய்ந்த தென்னை மரங்கள்... என்ன செய்ய வேண்டும் விவசாயிகள்?

புயலில் சாய்ந்த தென்னை மரங்கள்... என்ன செய்ய வேண்டும் விவசாயிகள்?
பிரீமியம் ஸ்டோரி

ஜா புயலில் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான தென்னை மரங்கள் சாய்ந்துவிட்ட நிலையில், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள். அவர்களுக்கான தீர்வை சொல்கிறார் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத் தலைவர் செந்தூர்குமரன்.

பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளைப் பற்றிய கவலையுடன் சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் ஜூ.வி-யைத் தொடர்புகொண்டார். “பேராவூரணி பகுதியில் தென்னை விவசாயிகள் அதிகளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தோப்பில் சாய்ந்து நிற்கும் தென்னை மரங்களைக் காப்பாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா?” என்று கேட்டார் அவர்.

உடனே, குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரனை, பேராவூரணிப் பகுதிக்கு அழைத்துச் சென்றோம். பேராவூரணிக்கு அருகில் தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களைப் புயலுக்குக் காவுகொடுத்துவிட்டுக் கதிகலங்கித் தவிக்கிறார். அவர், ‘‘தென்னை மரங்கள்தான் எங்க குடும்பத்துக்கு ஓரே வாழ்வாதாரம். இனி, என்ன செய்யப்போறோம்னு தெரியலை. விழுந்து கிடக்குற மரங்களைக் கழிக்க ஆள்கூட கிடைக்கலை. கரன்ட் வர்றதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகும்னு சொல்றாங்க...” என்று வெடித்து அழத்தொடங்கினார். அவருக்கு ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினோம். இப்படி பாதிக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ணன், பாலசுப்ரமணி, பிரகதீஸ்வரன் ஆகிய தென்னை விவசாயிகளுக்கு செந்தூர்குமரன் ஆலோசனைகளை வழங்கினார். 

புயலில் சாய்ந்த தென்னை மரங்கள்... என்ன செய்ய வேண்டும் விவசாயிகள்?

“காற்றில் சிக்கி, கீழ்நோக்கித் தொங்கிக்கொண்டிருக்கும் அனைத்து மட்டைகளையும் வெட்டிவிடாதீர்கள். உடைந்து தொங்கும் மட்டைகளை மட்டும் வெட்டுங்கள். உடையாமல் தொங்கும் மட்டைகள் இன்னும் சில நாள்களில் நிமிர்ந்துவிடும். ஒடிந்து தொங்கும் மட்டைகளை ஓர் அடி தள்ளி, ‘கட்டர்’ மூலம் சீராக வெட்டுங்கள். அரைத்த குப்பைமேனி இலை, பசுஞ்சாணம், பஞ்சகவ்யா கலந்து, பசைபோலத் தயார் செய்து மட்டையில் பூச வேண்டும். வெட்டும்போது குருத்துக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 75 சதவிகிதத்துக்கு மேல் குருத்து ஒடிந்திருந்தால், அந்த மரத்தைக் காப்பாற்றுவது கடினம். ஓரளவு மட்டும் பாதிப்பு இருந்தால்... இரண்டு, மூன்று மாதங்களில் புதுக் குருத்து உருவாகிவிடும். ஒருவேளை குருத்து சாய்ந்திருந்தால், மூன்று குச்சிகளை வைத்து முக்கோண வடிவில் கட்டிவைக்க வேண்டும் தோப்புகளில் கிடக்கும் மட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அவற்றைத் தோப்புக்குள் மூடாக்காகப் போடலாம். ஒடிந்த தென்னை மரங்களை நிமிர்த்தி மீண்டும் மறு நடவு செய்தால், பெரிய பலன் கிடைக்காது. ஓரளவு சாய்ந்த நிலையில் உள்ள மரங்களை வேண்டுமானால் நிமிர்த்தி வைக்கலாம். எனவே, விழுந்த மரங்களை அப்புறப்படுத்திவிட்டுப் புதிய கன்றுகளை நடவு செய்வதுதான் சிறந்தது’’ என்றார் செந்தூர்குமரன்.

அவரது ஆலோசனைகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட தென்னை விவசாயிகள், தங்கள் பகுதி விவசாயிகளுக்கு இதற்கான பயிற்சியை அளிக்க முடியுமா என்ற நம்மிடம் கேட்டனர். விரைவில் ‘பசுமை விகடன்’ அந்தப் பகுதி விவசாயிகளுக்கு நேரடி செய்முறை விளக்கப் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கையை எடுத்துவருகிறது.

- ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

பயிற்சி மற்றும் ஆலோசனை தேவைப்படும் விவசாயிகள் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்: 9940651073