Published:Updated:

“கார்ப்பரேட்டுக்காக எங்களைக் காவு வாங்குகிறார்கள்!” - கொந்தளிக்கும் விவசாயிகள்

“கார்ப்பரேட்டுக்காக எங்களைக் காவு வாங்குகிறார்கள்!” - கொந்தளிக்கும் விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி

கோவை, திருப்பூர் உட்பட 13 மாவட்டங்களில்  விளைநிலங்கள் வழியாக மின்கோபுரங்கள் அமைக்கப்படும் திட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் மேற்கு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.   

“கார்ப்பரேட்டுக்காக எங்களைக் காவு வாங்குகிறார்கள்!” - கொந்தளிக்கும் விவசாயிகள்

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பதற்காக தமிழகத்தின் 13 மாவட்டங்கள் வழியாக, மின் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நியூ புகளூர் என்ற இடத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய துணை மின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும், லட்சக்கணக்கான தென்னை மரங்களை வெட்ட வேண்டியிருக்கும் என்றும் கூறி விவசாயிகள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனாலும் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாரை வைத்து விவசாயிகளை மிரட்டி மின்கோபுரங்களை அமைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

“கார்ப்பரேட்டுக்காக எங்களைக் காவு வாங்குகிறார்கள்!” - கொந்தளிக்கும் விவசாயிகள்

தனியார் லாபம் சம்பாதிப்பதற்காகச் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு, தங்களின் ஒப்புதலைப் பெறாமலே விளைநிலங்களில் வழியாக மின்சாரத்தைக் கொண்டு செல்லவும், மின்கோபுரங்கள் அமைப்பதையும் ஏற்க முடியாது என்று விவசாயிகள் போராடுகின்றனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாள்களாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கான சர்வே பணிகள் நடைபெற்றன. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகளில் ஆறு பேரை போலீஸார் கைது செய்து, கோவை மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்து மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாள ரான ராஜாமணியிடம் பேசினோம். “விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளைக் கைது செய்துவிட்டால், அந்தப் பகுதியில் வசிக்கும் மற்ற தரப்பினரைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கிறது மாவட்ட நிர்வாகம். விளைநிலங்களில் மின்கோபுரங்களை அமைத்துவிட்டால், பிறகு அந்த இடத்தில் விவசாயமே செய்ய முடியாது. இதனால், 13 மாவட்டங்களில் உள்ள மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப் படுவார்கள். மின்கோபுரம் அமைப் பதற்குப் பதிலாக, நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் தரை வழியாக கேபிள் அமைத்து மின்சாரம் கொண்டு சென்றால் பிரச்னையே இல்லை. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முனுசாமி, “விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், எப்படியாவது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று துடிக்கிறார்கள். நியூ புகளூரிலிருந்து கேரளத்தின் திருச்சூருக்குச் செல்லும் தடங்களில், கேரளப் பகுதிகளில் மின் கேபிள் பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இங்கே மின்கோபுரங்களைத்தான் அமைப்போம் என்று பிடிவாதம் செய்கிறார்கள்’’ என்றார் ஆவேசத்துடன்.

“கார்ப்பரேட்டுக்காக எங்களைக் காவு வாங்குகிறார்கள்!” - கொந்தளிக்கும் விவசாயிகள்

விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் ஈசன், “திறந்த வெளியில் மின்சாரம் சென்றால் மின் கசிவின் மூலமாக இழப்பு ஏற்படும். மின் கேபிள் அமைத்தால், விளை நிலங்களுக்கும் பாதிப்பு இருக்காது, மின்சாரமும் வீணாகாது. மொத்தம் 11 திட்டங்கள் மூலமாக, சுமார் 5,000 மின் கோபுரங்களை விவசாய நிலங்களில் நடவிருக்கிறார்கள். இதனால், வருங்காலத்தில் நிலத்துக்கு மதிப்பே இல்லாமல் போய்விடும். உயர்மின் கோபுரங்களுக்கு அடியில் வசிப்பவர்களுக்கு மின் காந்த அலைகளின் தாக்கத்தினால் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் உருவாகும் என்று உலகச் சுகாதார நிறுவனமே சொல்லியிருக்கிறது. ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் விளைநிலங்களின் பரப்பளவு குறைந்துகொண்டேவருகிறது. ‘ரோடு போடுறேன், டவர் போடுறேன்’ என்று இருக்கும் நிலங்களையும் எடுத்துக்கொண்டால் எதிர்காலத்தில் விவசாயம் செய்ய நிலமே இருக்காது” என்றார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் பேசினோம்.

“நிலத்தை சர்வே செய்ய அனுமதித்தால் தான் எவ்வளவு பாதிப்பு, எவ்வளவு இழப்பீடு தர வேண்டும் என அறிக்கையை அரசுக்கு அனுப்ப முடியும் என்று அவர்களிடம் சொன்னேன். ஒரு வாரத்துக்கு மேலாகியும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. எனவே, சர்வே பணி நடைபெற்றது. 70 சதவிகித விவசாயிகள் இத்திட்டத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். பல மாநிலங்களைக் கடந்துவரும் இத்திட்டத்தை, ஒரு மாவட்டத்தில் மட்டும் தடுத்து நிறுத்த முடியாது. தரை வழியாக கேபிள் அமைப்பதற்குத் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். நெய்வேலியில இருந்து மின்கோபுரங்கள் மூலமாகதான் மின்சாரம் கொண்டுவருகிறோம். அங்கு இருக்கிற விவசாயிகள் இதுமாதிரி சொன்னால் நமக்கு மின்சாரம் கிடைக்குமா? நெய்வேலியில் உள்ளவர்களுக்கு எல்லாம் கேன்சர் வந்ததா?” என்றார்.

- நவீன் இளங்கோவன்

படங்கள் : ரமேஷ் கந்தசாமி