அனைவருக்கும் பசுமை வணக்கம்!

அண்மையில் வெளியான இரண்டு செய்திகள், விவசாயத்தைத் தாண்டியிருப்பவர்களையும் தற்போது ஆழமாக ஆராய்ச்சி செய்ய வைத்துக் கொண்டுள்ளன.

‘தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் இருக்கும் நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை-51 (ADT-51) என்கிற புதியரக நெல்லை உருவாக்கியுள்ளது. இது அதிக மகசூல் தரும் நெல் ரகம். ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கிலோ வரை மகசூல் தரக்கூடியது. இதற்குப் பூச்சிக்கொல்லி தெளிக்கத் தேவையில்லை. இயற்கையாகவே பூச்சிகளை எதிர்கொள்ளும் சக்தி உண்டு. பாரம்பர்ய ரகமான பொன்னி ரகத்திலிருந்து இது உருவாக்கப்பட்டுள்ளது.’

-இது, ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்தி.

‘பி.டி (மரபணு மாற்றம் செய்யப்பட்டது) பருத்தி, இந்தியாவில் தோல்வியடைந்துவிட்டது என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் அவருடைய ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் விஞ்ஞானி பி.சி.கேசவன் இருவரும் இணைந்து எழுதிய ஆய்வுக்கட்டுரை உறுதி செய்துள்ளது.’

-இது ‘கரன்ட் சயின்ஸ்’ என்கிற ஆங்கில இதழில் வெளியான செய்தி.

இரண்டு செய்திகளையும் உற்று நோக்கினால், மெல்லிய நூலிழை பின்னியிருப்பதைக் காணமுடியும்.

‘ஒரு பக்கம், பாரம்பர்ய நெல் விதைக்குப் பெருமை. இன்னொரு பக்கம், மரபணு மாற்று விதைக்கு அடி’ என்பதுதான் அந்த நூலிழைப் பின்னல். அதேசமயம், ‘இந்தப் பின்னலின் பின்னால் இருக்கும் உண்மைகள், விவாதத்துக்கும் ஆய்வுக்கும் உரியவை’ என்கிற பேச்சுகளும் ஒருபக்கம் கிளம்பிக்கிடக்க... ‘அந்த ஆய்வுக் கட்டுரையில் நான் சிறிதளவுதான் பங்களித்துள்ளேன். மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் சிறந்தது. அதை நான் ஆதரிக்கிறேன்’ என்றொரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டு, வழக்கம்போல விஷயத்தை வேறெங்கயோ திருப்பிவிட்டிருக்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன்!

விவாதமும் ஆய்வுகளும்தான் உண்மையை வெளிக்கொணர வேண்டும்!

-ஆசிரியர்