‘அதிகப் பால், அதிக வருமானம்’ என்று ஆசை காட்டிய காரணத்தால்... நமது பொக்கிஷங்களான நாட்டு

மாடுகளை ஒதுக்கிவிட்டு, வெளிநாட்டுப்பசுக்களையும் கலப்பினப்பசுக்களையும் வளர்க்க ஆரம்பித்தனர், விவசாயிகள். கொஞ்சமாகப் பால் கொடுத்தாலும் உழவு செய்ய, வண்டி இழுக்க, கமலை இறைக்க, விதைக்க எனப்பல வேலைகளுக்கு உதவி வந்தன, நாட்டு மாடுகள்.

முக்கியமாக மண்ணை வளப்படுத்துவதில் நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றின் பங்கு அளவிட முடியாதது. கலப்பின மாடுகளின் வருகையால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறையக்குறைய விவசாயத்தில் ரசாயனப் பயன்பாடு அதிகரித்தது. உழவு உள்ளிட்ட வேலைகளுக்கு எந்திரங்கள் புகுத்தப்பட்டன. வெண்மைப்புரட்சி, பசுமைப்புரட்சி ஆகியவற்றால் கடனாளியான விவசாயிகள்தான் அதிகம்.

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார், ‘ஜீரோபட்ஜெட் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் போன்றோரின் தொடர் பிரசாரத்தால் மீண்டும் பாரம்பர்ய முறை விவசாயத்துக்கு மாறி வருகிறார்கள், ஏராளமான விவசாயிகள். இப்படி இயற்கைக்கு மாறும் விவசாயிகள் பலர், இடுபொருள் தயாரிப்புக்காக நாட்டு மாடுகளைத் தேடி வாங்க ஆரம்பித்துள்ளனர்.

காங்கேயம், உம்பளச்சேரி, புலிகுளம், பர்கூர்... எனப்பல நாட்டு மாடு இனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘ஆலம்பாடி’ இன நாட்டு மாடுகள். இவை, தர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரம், ஒகேனக்கல் மலைப்பகுதிகள் தொடங்கி... கர்நாடக மாநிலத்தின் எல்லையில் உள்ள ஆலம்பாடி, கோபிநத்தம், செங்கப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளிலும், சேலம் மாவட்டத்தின் கோவிந்தவாடி, கொளத்தூர் ஆகிய வனப் பகுதிகளிலும் இயற்கையாகவே வாழ்ந்து வருகின்றன.

சாதுவான குணம் கொண்ட இவற்றை விவசாயிகளும் வளர்த்து வருகின்றனர். வறண்ட சூழலில் வளரும் தன்மை கொண்ட இந்த இன மாடுகளைப் பெருக்கும் வகையில்... பிரத்யேகமாக ஒரு கால்நடை ஆராய்ச்சி மையத்தை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது, தமிழக அரசு. வனங்களை ஒட்டிய பல கிராமங்களில் பட்டி அமைத்து ஆலம்பாடி மாடுகள் வளர்க்கப் படுகின்றன.

அப்படிப் பட்டி அமைத்து மாடுகள் வளர்க்கப்படும் பகுதிகளில் முக்கியமானது, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதி. இப்பகுதியில் அடர்ந்த வனங்கள் இருப்பதால், நாட்டு மாடு வளர்ப்பு இன்னும் உயிர்ப்போடு இருந்து வருகிறது. ‘பசுமை விகடன்’ பொங்கல் சிறப்பிதழுக்காக... ஆலம்பாடி மாடுகளை வளர்த்து வருபவர்களைச் சந்திக்கப் பென்னாகரம் பகுதியில் வலம் வந்தோம்.

முதலில் நாம் சந்தித்த நபர், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அடுத்தச் சுஞ்சல்நத்தம் கிராமத்தில் பட்டிமாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ராமு.

“இருபத்தஞ்சு வருஷமா காட்டுல மாடு மேய்ச்சுட்டுருக்கேன். எங்கிட்ட 60 ஆலம்பாடி ரக மாடுகளும் 15 காங்கேயம் மாடுகளும் இருக்கு. மாடுகளைக் காலையில காட்டுக்குள்ள ஓட்டிவிட்டா, மதியம் 3 மணிக்கு மேல காட்டவிட்டு இறங்கி வரும். அப்புறம் தண்ணி காட்டிட்டு 5 மணி வாக்குல பட்டில அடைச்சிடுவோம். குளம், குட்டை, ஓடைகள்ல தேங்கியிருக்குற தண்ணியைத்தான் மாடுகள் குடிக்கும். பொட்டைக்கன்னுகளை வளர்க்கறதுக்காக வெச்சுக்கிட்டு... காளைக் கன்னுகளை மட்டும் அப்பப்போ வித்துடுவோம். இந்த மாடுகள்ல நாங்க பால் கறக்கமாட்டோம். மொத்தப்பாலும் கன்னுக்குட்டிகளுக்குத்தான். அதனால, நல்ல திடகாத்திரமா குட்டிகள் வளரும். எங்ககிட்ட இருக்குற மொத்த மாடுகளையும் நான் ஒருத்தன்தான் பாத்துக்கிறேன்.

காட்டுக்குள்ள மேய்ச்சலுக்கு அனுப்பும் போது, மத்தவங்க மாடுகளோட சேர்ந்து மேய்ஞ்சாலும்... திரும்பி வர்ற நேரத்துல நம்ம மாடுகள் தனியா பிரிஞ்சு வந்து சேர்ந்துடும். பெரும்பாலும் மூணு மணிக்கு இறங்க ஆரம்பிச்சுடும். சில சமயங்கள்ல மாடுகள் வராட்டி, உள்ள போய்ச் சத்தம் கொடுத்து கூப்பிட்டுட்டு வந்துடுவோம். மழைக்காலத்துல காணி பக்கத்திலேயே மேய்ச்சுக்குவோம். காட்டுக்குள்ள அனுப்பமாட்டோம். நல்ல தீவனம் கிடைச்சா வருஷம் தவறாம மாடுகள் கன்னு போட்டுடும். ஒரே வருஷத்துல மாடுகளோட எண்ணிக்கை ரெண்டு மடங்காகிடும்.

அப்பப்போ கன்னுகளை விற்பனை செய்வோம். அதே மாதிரி வயசான மாடுகளையும் அப்பப்போ கழிச்சுடுவோம். ஒரு கன்னு 10,000 ரூபாய்ல இருந்து 20,000 ரூபாய் வரை விலைபோகும். பந்தயம், ஜல்லிக்கட்டுக்குப் பழக்கத்தான் நிறையபேர் வாங்குறாங்க.

அதனாலதான் காளைக்கன்னுக்கு நல்ல விலை கிடைக்குது. சந்தைக்குக் கொண்டு போய் விக்க மாட்டோம். மாடு தேவைப்படுறவங்க பட்டிக்கே வந்து வாங்கிக்குவாங்க. மாடுகள் மூலமா வருஷத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது” என்றார் மகிழ்வுடன். பென்னாகரம் அடுத்தக் கூத்தப்பாடி கிராமத்தில்... மாரியப்பன், சேகர், கீழுர் சேகர், செந்தில், நாகராஜ் உள்ளிட்ட 50 நபர்கள் பட்டிமாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக இவர்கள் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாடு வளர்ப்புக் குறித்துப் பேசிய சேகர், “மாடு மேய்க்கிறதுதான், எங்க கிராமத்துக்காரங்களுக்குப் பரம்பரைத் தொழில். விவசாயம், இரண்டாம்பட்சம்தான். இப்போ மாடு வளர்ப்பு குறைஞ்சு போச்சு. நிறையப் பேர் வேற தொழில்களுக்கு மாறிட்டாங்க. முன்னாடி ஊர்ல அத்தனை பேரும் மாடுகளை வளர்த்துட்டுருந்தாங்க. இப்போ மாடு வளர்ப்பு குறைஞ்சு போனதால 50 குடும்பங்கள் மட்டும்தான் மாடுகளை வளர்க்குறோம். எங்கிட்ட 10 மாடுகள் இருக்கு. அதுல 4 மாடுகள உழவுக்குப் பழக்கிருக்கேன். எல்லோரும் சேர்ந்து மாடுகளை ஒட்டிட்டுப்போய்க் காட்டுக்குள்ள ஒரு குறிப்பிட்ட தூரத்துல விட்டுட்டு வருவோம். மாடுகள் மேய்ஞ்சுட்டு மறுநாள்தான் திரும்பி வரும். எங்க மாடுகள், ஒகேனக்கல்லைச் சுற்றியிருக்கிற காடுகள்லதான் மேயுதுக” என்றார்.

அதே ஊரில் உழவு வேலைகளுக்காக ஆலம்பாடி மாடுகளை வளர்த்து வரும் வேலு, “எனக்கு மூணு ஏக்கர் நிலமிருக்கு. டிராக்டர்ல உழவு ஓட்டி கட்டுபடியாகலை. மூணு வருஷத்துக்கு முன்னாடி, 45,000 ரூபாய் விலை கொடுத்து ஒரு ஜோடி மாடுகளை வாங்கி உழவுக்குப் பழக்கியிருக்கேன். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்கூடச் சளைக்காம இந்த மாடுகள் வேலை செய்யுது. தீவனத்துக்கும் பெரிய செலவில்லை. ரொம்பச் சாதுவா இருக்குறதால, பொம்பளைங்ககூடப் புடிக்கலாம். காளை மாடுகளுக்குக் கொஞ்சம் பாய்ச்சல் இருக்கும். அதனாலதான், எருதுக்கட்டுக்கு வாங்கிட்டு போறாங்க. கன்னு போட்டா ஒரு நாளைக்கு 2 லிட்டர் பால் கறக்கலாம்” என்று கணக்குகளைச் சொன்னார்.

ஒகேனக்கல் பகுதிகளில் சாலையோரங்களிலேயே ஆலம்பாடி மாடுகள் மேய்வதைக் காண முடிகிறது. ஒகேனக்கல் பகுதியில் காவிரியாற்றின் அக்கரையில் கர்நாடக எல்லையில் உள்ள கோபிநத்தம், செங்கப்பாடி, ஆலம்பாடி ஆகிய ஊர்களிலும் பட்டிமாடுகள் அதிகம் இருக்கின்றன. இவற்றில் ஆலம்பாடி மாடுகள்தான் அதிகம். செங்கப்பாடிதான் சந்தன மர வீரப்பனின் சொந்த ஊர். பரிசல் மூலம் ஆற்றைக் கடந்து ஆலம்பாடிக்குச் சென்றோம். அந்த மாலை நேரத்தில், மேய்ச்சல் முடிந்து ஆடுகளும் மாடுகளும் பட்டிக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பேசினோம்.

“என் பேரு சேவிக்கவுண்டர். ஆலம்பாடிதான் ஊரு. எங்க தாத்தா காலத்திலிருந்தே காட்டுல மாடுகள் மேய்க்கிறதுதான் எங்களுக்குத் தொழில். எங்கிட்ட 40 மாடுகள் இருக்கு. எல்லாமே நாட்டு மாடுகள்தான். போன வருஷம் அதிகாரிகள் வந்து, ‘ஆலம்பாடி மாடு இருக்குதா’னு கேட்டாங்க. ‘நாங்க அப்படியெல்லாம் பிரிச்சுப் பார்க்கிறதில்ல. எங்களைப் பொறுத்தவரை எல்லாமே நாட்டு மாடுகள்தான்’னு சொன்னேன். பிறகு அவங்க சில அடையாளங்களைச் சொல்லி எங்ககிட்ட இருந்த ஒரு மாட்டை ஆலம்பாடி ரகம்னு சொன்னாங்க.

அதோட, ரத்தத்தையும் எடுத்துட்டுப் போனாங்க. ஓசூர், தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டினு நிறைய ஊர்கள்ல இருந்து எங்க கிராமத்துக்கு வந்து ஜல்லிக்கட்டுக்குப் பழக்குறதுக்காக மாடுகளை வாங்கிட்டுப் போறாங்க. இப்போ உழவுக்கும் அதிகமா வாங்குறாங்க. 2 பல்லுல இருந்து 4 பல் போடுற வயசுக்குள்ள வாங்கிட்டுப்போய் உழவுக்கோ, ஜல்லிக்கட்டுக்கோ பழக்க ஆரம்பிச்சுடணும். அதுக்கு மேல வயசாகிட்டா பழக்குறது சிரமம்” என்று நுட்பமாக சொல்லிமுடித்தார்.

ஆலம்பாடி மாடுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஹரியானா மாநிலம், கர்னலில் உள்ள தேசிய கால்நடை மரபுவள கழகத்தின் (National Bureau of Animal Genetic Resources) விஞ்ஞானி டாக்டர் கே.என்.ராஜாவிடம் பேசினோம். “இந்தியாவில் 43 நாட்டு மாட்டினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 4 நாட்டு மாட்டினங்களும் அடங்கும். இதைத்தவிர தமிழ்நாட்டில் 8 செம்மாறியாட்டு இனங்களும், 3 வெள்ளாட்டு இனங்களும், 2 எருமையினங்களும் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தற்போது ஆலம்பாடி நாட்டு மாட்டினம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். கடந்தாண்டு இரண்டு முறை தமிழகம் வந்து ஆலம்பாடி மாடுகள் வாழும் பென்னாகரம், ஆலம்பாடி, கொளத்தூர் பகுதிகளில் இருக்கும் மாடுகளை ஆய்வு செய்தோம்.

ஆலம்பாடி மாட்டினம் குறித்து எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, ஆலம்பாடி என்கிற ஊர் அன்றைய மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்தது. 1909-ல் கன்(Gunn) என்ற ஆங்கிலேயேர் ஆலம்பாடி என்ற ஊரில் இந்த வகையான மாடுகள் இருக்கின்றன என்ற ரிப்போர்ட்டை எழுதி வைத்திருக்கிறார். அதன்பிறகு 1936-ல் லிட்டில் வுட் (Little Wood) என்ற ஆங்கிலேயர் ஆலம்பாடி மாடுகள் குறித்து எழுதி வைத்திருக்கிறார்.

நாங்கள் விசாரித்து அறிந்த தகவலின்படி ஆலம்பாடி என்கிற ஊரின் வழியாக பல ஊர்களிலிருந்து மாடுகளைச் சந்தைக்கு அழைத்துக் கொண்டு செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது ஆலம்பாடியில் பட்டி போட்டு தங்கி செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படி பல்வேறு மாடுகளின் கலப்பாக ஒரு புதிய இனம் தோன்றியிருக்கலாம். இன்னொன்று ஆலம்பாடி என்கிற ஊர் பாறைகளும் அடர்ந்த வனங்களும் இருக்கும் பகுதி. இந்தப் பகுதிகேற்ற ஒரு மாட்டினம் இங்கு இருந்திருக்கலாம்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்த மாட்டைப் பற்றி எந்த ஆய்வுகளும் நடத்தப்படவில்லை. காரணம் ஆலம்பாடி என்கிற ஊர் கர்நாடக மாநில எல்லையில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் இந்த ஊர் இருப்பதால் யாரும் கண்டுகொள்ளாமல் போய்விட்டது. இந்நிலையில், கடந்தாண்டு இரண்டு முறை இந்தப் பகுதிக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம். இன்னும் ஒருமுறை வருகை தந்து ஆய்வு நடத்த வேண்டியிருக்கிறது. ஆலம்பாடி மாடுகளைப் பொறுத்தவரை தற்போது வரை இந்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆய்வுப் பணியில்தான் இருக்கிறது. தமிழக அரசு ஆலம்பாடி மாடுகளுக்கான ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்க அறிவித்துள்ளது. கடைசியாக அந்தியூர் மலைப்பகுதியில் உள்ள பர்கூர் இன எருமை மாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதன்படி இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது 184 ஆடு, மாடு உள்ளிட்ட இந்திய கால்நடை இனங்கள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. அடுத்து ஆலம்பாடி மாடுகளும் அங்கீகரிக்கப்படுமா என்பது ஆராய்ச்சியின் முடிவில்தான் தெரிய வரும்” என்றார்.

தொடர்புக்கு,

செல்போன் எண்கள்:

ராமு: 90471 59433
சேகர்: 94444 37607
ஜெகன்: 97874 49685
மாயன்: 94430 53896

- த.ஜெயகுமார், படங்கள்: எம்.விஜயகுமார்

ஆலம்பாடி மாடுகளைப் பாதுகாக்க வேண்டும்!

நாட்டு மாடு ஆர்வலரான, ‘பென்னாகரம் ஜெகன்’ என்கிற ஜெகநாதன், இப்பகுதியில் ஆலம்பாடி இன மாடுகள் கணக்கெடுப்புப் பணியில் பங்கெடுத்தவர். அவரிடம் பேசியபோது, “தர்மபுரி மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று ஆலம்பாடி இன மாடு. ஆனால், இங்கு பலர் ஆலம்பாடி மாடுகள் என்று தெரியாமலே அவற்றை வளர்த்து வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, ஆலம்பாடி இன மாடுகளைக் கணக்கிடும் பணியை மேற்கொண்டது. அதில் நானும் பங்கெடுத்தேன். என் அனுபவத்தில் பென்னாகரம், கொளத்தூர், ஆலம்பாடி, ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் 30,000 மாடுகள் வரை இருக்கின்றன. இவற்றிலிருந்து ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள், கால்நடை விஞ்ஞானிகள். 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆலம்பாடி மாடுகள் அடையாளப்படுத்தப்பட்டன. ஆனால், அப்போதே இந்த இனக் காளைகளிலிருந்து விந்தணுவை எடுத்துப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். அதனால், கர்நாடகா மாநிலத்தின் ‘ஹல்லிக்கர்’ இன மாடுகளோடு இந்த இனம் கலந்துவிட்டது. ஆலம்பாடி மாடுகள் கறுப்பு, செம்பழுப்பு, சாம்பல் ஆகிய நிறங்களில் இருக்கும். கறுப்பு மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்காததால், வெள்ளை நிறமுள்ள ஹல்லிக்கர் மாடுகளோடு கலப்புச் செய்துவிட்டனர். இருந்தாலும், தூய ஆலம்பாடி மாடுகள் இன்னமும் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு இம்மாடுகளைப் பெருக்கிப் பாதுகாக்க வேண்டும்.

அதோடு, விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டத்தில்... தார்பார்க்கர், சிந்தி, கிர், சாஹிவால் போன்ற அதிகப் பால் கொடுக்கக்கூடிய நாட்டு மாடுகளைக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். மேலும், நாட்டு மாட்டுப்பாலை ஆவின் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

சத்தான பாலும் கிடைக்கும்!

பென்னாகரம் பகுதி உதவி கால்நடை மருத்துவர் மாயன், ஆலம்பாடி மாடுகள் குறித்துச் சில விஷயங்களைச் சொன்னார். “இந்த ரக மாடுகள் உழவுக்கு ஏற்றவை. இம்மாடுகள் தினமும் 1-3 லிட்டர் வரை பால் கொடுக்கக்கூடியவை. ஊட்டச்சத்து மிக்கத் தீவனம் கொடுத்து வளர்த்தால், ஒரு நாளைக்கு ஆறு லிட்டர் வரை பால் கறக்க முடியும். இந்த இன மாடுகளைப் பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பதில்லை. இன்னமும் இவை காட்டுமாடுகளாகத்தான் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலும் கலப்பு ஏற்பட்டுவிட்டது.

தருமபுரியில் உள்ள குண்டலப்பட்டி கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஆலம்பாடி மாடுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆலம்பாடி மாடுகளின் குணாதிசயங்கள் முழுமையாகக் கண்டறியப்பட்டு, பிறகு தனியே பிரித்தெடுக்கப்பட உள்ளது.

காட்டுமாடாக இருப்பதால், இவற்றின் உடல் முறுக்கேறி திமிலும் நன்றாக உள்ளது. இந்த ரக மாடுகளுக்கு ஒரு நாளுக்குப் பத்து கிலோ முதல் பதினெட்டு கிலோ அளவில் தீவனம் கொடுத்தாலே போதுமானதாக இருக்கிறது. இம்மாடுகள், வெயில், மழை என அனைத்துச் சூழ்நிலைகளையும் தாங்கி வளரக்கூடியவை.

கொட்டகைக்கூடத் தேவைப்படாது. காட்டில் மூலிகைகளைத் தேடி மேயும் தன்மை கொண்டவை இந்த மாடுகள்.

நாட்டு ரக மாடுகளின் பாலில் அதிகச்சத்துகள் உள்ளன. தற்போது பென்னாகரம் உதவி கால்நடை மருத்துவமனையில் காங்கேயம், சிவப்பு சிந்தி போன்ற ரக மாடுகளின் விந்தணுக்கள் உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில், ஆலம்பாடி மாடுகளின் விந்தணுக்களையும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார் தெளிவாக.

ஆலம்பாடி மாடுகளின் அடையாளங்கள்!

ஆலம்பாடி மாடுகள் கறுப்பு, சாம்பல், வெள்ளை நிறத்தில் இருக்கும். இதோடு மாடுகளின் முகம், தாடை, கண்களைச் சுற்றி வெள்ளைத் தழும்புகளும் புள்ளிகளும் இருக்கும். மாடுகளின் உடல் நீளமாக இருக்கும். இதன் திமிலும், வாலும் லேசான கறுப்பு நிறத்தில் இருக்கும்.

ஆலம்பாடி மாடுகளின் கொம்புகள் நீண்டு முனையில் வளைந்து இருக்கும். சில மாடுகளில் கொம்புகள் விரிந்து இருக்கும். காடுகளில் மேயும் மாடுகள் என்பதால், புதர்களை விலக்கி தீவனம் எடுக்கவும், கிளைகளில் மோதிக்கொள்ளாமல் இருக்கவும் கொம்புகள் உதவுகின்றன.

கால் குழம்புகள், மான்களின் கால்களை ஒத்துச் சிறியதாக இருக்கும். அதனால், எளிதாகப் பாறைகள், குன்றுகளில் ஏறி இறங்க முடியும். இவ்வகை மாடுகள் மனிதர்களைக் கண்டால் மிரண்டு துள்ளி ஓடும் தன்மை கொண்டவை. காதுகள் எப்போதும் தூக்கிக் கொண்டே இருக்கும். சின்ன சத்தம் என்றாலும் உஷாராகிவிடும்.

காட்டு மாடுகளுக்குத் தண்ணீர்!

“பென்னாகரம், கொளத்தூர் போன்ற பகுதிகளில் காடுகளில்தான் அதிக அளவிலான மாடுகள் மேய்ந்து வருகின்றன. இவற்றுக்கு மழைக்காலத்தைத் தவிர மற்ற காலங்களில் தண்ணீர் கிடைப்பது பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. 10, 20 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, காவிரியாற்றில்தான் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையில் மாடுகள் உள்ளன.

இவற்றுக்குக் காடுகளிலேயே தொட்டி கட்டி மாடுகள் தண்ணீர் குடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாகப் பென்னாகரம் பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைந்திருக்கும் பகுதியில் தொட்டி கட்டினால் மாடுகளுக்கு உதவியாக இருக்கும்” என்று கோரிக்கை விடுக்கிறார்கள், இப்பகுதி மக்கள்.

பட்டிப்பொங்கல்!

பென்னாகரம் பகுதியில் உள்ள ஊர்களில் கோயில்களுக்கு எதிரே வரிசையாகக் கற்கள் நடப்பட்டுள்ளன. இவற்றைக் ‘கோவுகல்லு’ என்கிறார்கள், இப்பகுதி மக்கள். பொங்கல் திருநாளில் மாடுகளைச் சிங்காரித்து, வடக்கயிறு மூலம் கட்டி அழைத்து வந்து, இந்தக் கோவுகல்லில் கட்டி வைத்து பூஜை செய்து கோயிலை மூன்று முறை சுற்றி வருகிறார்கள். பிறகு, வடக்கயிற்றை அவிழ்த்து மாடுகளைக் காட்டுக்குள் ஓட விடுகிறார்கள்.

மாட்டுப்பொங்கலன்று இப்பகுதியில் பட்டிப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு வீட்டாரும் தங்களுடைய மாடுகள் அனைத்தையும் ஓரிடத்தில் சேர்த்து மஞ்சள், குங்குமம் வைத்து... ஒரு மண் குடுவையில் இளநீரை ஊற்றி கஸ்தூரி மஞ்சளைப் போட்டு வேப்ப இலையால் மந்திரித்து, பிறகு மாடுகளின் மீது தெளிக்கிறார்கள். இதனால், மாடுகளுக்கு வரும் நோய்கள் தடுக்கப்படுவதோடு, மாடுகள் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து போகாமல் இருக்கவும் இந்த வழக்கம் உதவுவதாகச் சொல்கிறார்கள்.