Published:Updated:

வாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்!

வாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்!
பிரீமியம் ஸ்டோரி
வாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்!

மதிப்புக்கூட்டல்

வாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்!

மதிப்புக்கூட்டல்

Published:Updated:
வாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்!
பிரீமியம் ஸ்டோரி
வாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்!

‘தங்களது விளைபொருள்களில் ஒரு பகுதியையாவது விவசாயிகள் மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் நல்ல லாபம் ஈட்ட முடியும்’ என்று விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் காலங்காலமாகச் சொல்லி வருகிறார்கள். பல விவசாயிகள் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசன். இவர், தான் விளைவிக்கும் வாழைப்பழங்களை மதிப்புக்கூட்டி, நல்ல லாபம் ஈட்டி வருகிறார். திருநெல்வேலி மாவட்ட வாழைச் சாகுபடி விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும், திருச்சி, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.

ராஜபாளையம் அருகில் உள்ள தளவாய்புரம் பகுதியில் உள்ள ஜெகதீசனின் வீட்டில் அவரைச் சந்தித்தோம். “தாத்தா காலத்துல இருந்தே டெக்ஸ்டைல் பிசினஸ் செஞ்சுட்டுருக்கோம். இதோட விவசாயமும் செஞ்சுட்டுருக்கோம். நான் தலையெடுத்த பிறகு... பிசினஸையும், விவசாயத்தையும்  கவனிச்சுக்க ஆரம்பிச்சேன். முன்னாடி நானும் ரசாயன உரங்களைப் போட்டுதான் விவசாயம் செஞ்சுட்டுருந்தேன். அதுல கட்டுபடியாகாததால் பாரம்பர்ய முறைக்குத் திரும்பிட்டேன். எட்டு வருஷமா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கேன்.

வாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்!

மொத்தம் 40 ஏக்கர் நிலம் இருக்கு. இதுல 12 ஏக்கர்ல மட்டும் தென்னை இருக்கு. அதுல ஊடுபயிராகச் செவ்வாழை, நேந்திரன், ஏலக்கி, நாட்டுவாழைனு சாகுபடி செஞ்சுக்கிட்டுருந்தேன். இப்போ தனியா வாழையைச் சாகுபடி செய்யலாம்னு நிலத்தைத் தயார் செஞ்சு வெச்சிருக்கேன்.

நான், இயற்கை முறையில் சாகுபடி செஞ்சுமேகூட வாழைக்குச் சரியான விலை கிடைக்கலை. குறிப்பா இந்தப்பக்கம் மாம்பழ சீசன் ஆரம்பிச்சுட்டா வாழைச் சாகுபடி சுத்தமா அடி வாங்கிடும். பழத்துக்கு விலையே கிடைக்காது. அதனாலதான் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம்னு முடிவு செஞ்சேன். மதுரை வேளாண்மைக் கல்லூரியில் வாழைக்காய் பவுடர் தயாரிக்கப் பயிற்சி எடுத்துக்கிட்டு அதைத் தயாரிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல விற்பனை செய்ய திண்டாடினாலும், போகப்போக விற்பனை வாய்ப்பு அதிகமாச்சு. அதனால, அடுத்தகட்டத்துக்குப் போகலாம்னு முடிவு செஞ்சு... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல வாழைப்பழ சாக்லெட் தயாரிக்கப் பயிற்சி எடுத்துக்கிட்டு அதுல இறங்கினேன். கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தின் வணிக மேம்பாட்டு இயக்கத்தில் உறுப்பினராவும் சேர்ந்துருக்கேன்” என்ற ஜெகதீசன், வாழை மதிப்புக்கூட்டல் குறித்துச் சொல்லத் தொடங்கினார்.

“பவுடர் தயாரிக்க நேந்திரன், செவ்வாழை, நாட்டு வாழை போன்ற வகைகள் ஏற்றவை. தாரிலிருந்து வாழைக்காய்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து நன்கு கழுவி, சில்வர் பாத்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும். நன்கு வெந்தபிறகு தோலை உரித்து, காய்களைச் சிப்ஸ் போல நறுக்கி ‘சோலார் டிரைய’ரில் 3 நாள்கள் காய வைத்துப் பிறகு, அறவை எந்திரம் மூலம் பொடிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்!

நேந்திரன் வாழைக்காய் பவுடர், மிகவும் சத்துக் கொண்டது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் இதைப் பாலில் கலந்து பருகி வந்தால், தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நேந்திரன் வாழைப்பழ பவுடரை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

செவ்வாழை பவுடர், ரத்தச் சிவப்பு அணுக்கள் மற்றும் உயிரணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. நாட்டு வாழைக்காய் பவுடர், இன்சுலின் சுரப்புக் குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது. நாட்டு வாழை பவுடர், கைகுத்தல் அரிசி, உளுந்து மாவு, நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு பாயசம் தயாரித்துப் பருகி வந்தால், உடல் சோர்வு நீங்கும்.

சாக்லெட் தயாரிக்க ஏலக்கி ரகம் ஏற்றது. ஏலக்கி ரகப் பழங்களின் தோலை உரித்துச் சோலார் டிரையரில் மூன்று நாள்கள் உலர வைத்து சிறிய துண்டுகளாக வெட்டி... தேனில் ஒருநாள் முழுவதும் ஊற வைத்து எடுத்து இரண்டு நாள்கள் சோலார் டிரையரில் காய வைக்க வேண்டும். பிறகு அவற்றைச் சாக்லெட் கலவையில் முக்கி எடுத்து, குளிர்பதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து தாள் சுற்றி விற்பனைக்கு அனுப்பலாம். இயற்கைச் சீற்றங்களில் வாழை மரங்கள் சரிந்து விழும் சூழ்நிலையில், அவற்றிலிருந்து பிஞ்சுக்காய்கள் இருந்தால், அவற்றின் மூலம் தொக்கு தயார் செய்யலாம். அனைத்து வகை வாழைக்காய்களிலிருந்தும் தொக்குத் தயாரிக்கலாம். ஆனால், பிஞ்சுக்காயாக இருக்க வேண்டும். முற்றிய காயாக இருந்தால் பவுடர் தயாரிப்புக்குப் பயன்படும்.

வாழைப்பிஞ்சுகளைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து வேகவைத்து தோலை நீக்கி மசிக்க வேண்டும். அந்த மசியலுடன் உப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், மிளகாய்ப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து தொக்குத் தயாரிக்கலாம்” என்ற ஜெகதீசன், வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“தற்போது நேந்திரன் வாழை பவுடர், நாட்டுவாழை பவுடர் தயாரிச்சு விற்பனை செஞ்சுட்டுருக்கேன். ஒரு மாசத்துக்கு 200 கிலோ நாட்டுவாழை பவுடர், 200 கிலோ நேந்திரன் வாழை பவுடர், 100 கிலோ சாக்லெட் தயாரிக்கிறேன்.

வாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்!

ஒரு கிலோ வாழை பவுடர் 500 ரூபாய்ங்கிற கணக்குல 400 கிலோ வாழை பவுடர் விற்பனை மூலம் 2,00,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்குது. அதுல உற்பத்திச் செலவுகள் எல்லாம் சேர்த்து 80,000 ரூபாய் போக, 1,20,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். 400 கிலோ பவுடர் தயாரிக்க 1,600 கிலோ வாழைக்காய்த் தேவைப்படும். இந்த அளவு காயைச் சந்தையில விற்பனை செஞ்சா 30,000 ரூபாய் வரைதான் வருமானம் கிடைக்கும்.

அதையே மதிப்புக்கூட்டும்போது, பல மடங்கு லாபம் கிடைக்குது. ஒரு கிலோ 750 ரூபாய்னு மாசத்துக்கு 100 கிலோ சாக்லெட் விற்பனை மூலமா 75,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கிறது. இதுல மொத்த உற்பத்திச் செலவு 30,000 ரூபாய் போக, 45,000 ரூபாய் லாபமா நிக்கும். 100 கிலோ சாக்லெட் உற்பத்தி செய்ய 600 கிலோ வாழைப்பழங்கள் தேவை. இதே அளவு பழத்தைச் சந்தையில விற்பனை செஞ்சா 6,000 ரூபாய்தான் வருமானம் கிடைக்கும்.

மதிப்புக் கூட்டும்போது பல மடங்கு லாபம் கிடைக்குது” என்ற ஜெகதீசன் நிறைவாக, “வாழையை மதிப்புக்கூட்ட விரும்புறவங்க முறையான பயிற்சி எடுக்க வேண்டியது அவசியம். அதோட ஏற்கெனவே மதிப்புக்கூட்டல் செய்ற விவசாயிகளைச் சந்திச்சு அனுபவங்களையும் தெரிஞ்சுக்கணும். அடுத்து விற்பனை வாய்ப்பையும் உறுதி செஞ்சுக்கணும். அதுக்கப்புறம் மதிப்புக்கூட்டல்ல இறங்கினா, வாழை மூலமா கண்டிப்பா நல்ல லாபம் பார்க்க முடியும்” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு

ஜெகதீசன்,
செல்போன்: 94439 62191

இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

ஒவ்வொரு வாரமும் பயிற்சி...

மதிப்புக்கூட்டல் பயிற்சி குறித்து கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் தலைவர் முனைவர் தங்கவேலுவிடம் பேசினோம், “உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல் முதல் மதிப்புக்கூட்டல் வரை அனைத்துக்கும் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், முருங்கை, காளான் உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருள்களை மதிப்புக்கூட்டுவதற்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் வாழை உள்ளிட்ட பழங்களில் மதிப்புக்கூட்டல் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோன்ற பயிற்சிகள் ஒவ்வொரு வாரமும் 2 நாள்கள் நடைபெறுகின்றன. பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் இந்தப் பயிற்சிகளில், ஒவ்வொரு வாரமும் என்னென்ன தலைப்பில் பயிற்சி நடைபெறுகிறது, எந்த தேதிகளில் நடைபெறுகிறது என்ற அறிவிப்புகளை நாளிதழ்கள் மூலமாகவும், வேளாண் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலமாகவும் வெளியிடப்படுகிறது. இந்தப் பயிற்சிகளுக்கு கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பயிற்சி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை-641003.

தொடர்புக்கு: 0422 6611268

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism