ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக வளர்க்கப்படும் காளைகள், பலரது வீடுகளில் பெற்ற பிள்ளைகளாகவே பாவிக்கப்படுகின்றன. அவற்றில் உயிரிழந்த காளைகளுக்குக் கல்லறைகள், நினைவிடம், கோயில்கள், மணிமண்டபம் என அமைத்து வணங்கி வருகிறார்கள். இந்நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில், ஆரப்பாளையம் பகுதியில் 8,00,000 ரூபாய் செலவில்... ஜல்லிக்கட்டு மாட்டினை வீரர் ஒருவர் அடக்குவது போன்ற சிலை வைக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஷ் சேகரிடம் பேசினோம். “தமிழர் பண்பாடு, கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றில் மதுரைக்குத் தனிச்சிறப்பு உள்ளது. தூய்மையான புராதன நகரங்களுக்கான சிறப்புத் திட்டத்தின்கீழ் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து முக்கியச் சந்திப்புகளில்... பாரம்பர்யத்தைப் பறை சாற்றும் விதமாகவும், கலாசாரத்தை அடுத்தத் தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாகவும் சிற்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மதுரை ஆரப்பாளையம் முதல் தத்தனேரி வரையுள்ள உயர்மட்டப்பாலம், ஆரப்பாளையத்தில் வைகை ஆற்றின் அருகே இணைகிறது. இந்த இணைவிடத்தில் பெரிய ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானாப் பகுதியில் வீரவிளையாட்டில் முதன்மை மாவட்டமாக இருக்கும் மதுரையின் பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டுக் காளையை மாடுபிடி வீரர் அடக்குவதுபோலச் சிலை அமைக்கப் பட்டுள்ளது.

பாத்திமா கல்லூரி ரவுண்டானாவில் சித்திரைத் திருவிழாவின் சிறப்பை உணர்த்தும் விதமாக மீனாட்சி அம்மன் தேர் அமைக்கப்பட்டுள்ளது. பழங்காநத்தம் ரவுண்டானாவில் பத்துத் தூண்கள் சிறப்புச் சிற்பமும், திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயிலை அடிப்படையாக வைத்துச் சிற்பம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுச் சிலைக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

மதுரைக்கு வரும் பலரும் இந்தச் சிலைக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டை நினைவுகூறும் வகையில் சிலை வைத்தது வரவேற்கத்தக்கது.

உழவனுக்குப் பெருமை சேர்க்கும் இலங்கை

இலங்கை கிழக்கு மாகாணப் பகுதியிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், வந்தாறுமூலை எனும் கிராமத்தில் உள்ள அம்பலத்தடி சந்திப்பகுதியில்... ‘வந்தாறுமூலை மேற்கு கிராம மக்கள் அபிவிருத்தி சங்கம்’ மற்றும் ‘வந்தாறுமூலை டைமண்ட் விளையாட்டுக் கழகம்’ ஆகியவற்றின் சார்பில் ஆறு அடி உயரத்தில் உழவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாட்ஸ்அப் மூலமாக நம்மிடம் பேசிய வந்தாறுமூலை மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் மணிவண்ணன், “இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள வந்தாறுமூலை, விவசாயம் செழிக்கும் பகுதி. நெல் விவசாயம்தான் பிரதானம். இங்கு ஆயிரத்து ஐந்நூறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதனால்தான் உழவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக உழவன் சிலை வைத்து, பொங்கல் சமயங்களில் வழிபாடு செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

ஆறு அடி உயரத்தில் நின்றபடியே, வலது கையில் மண்வெட்டியைப் பிடித்தது போலவும், இடது தோளில் கலப்பையைச் சுமந்தபடியும் சிலையை அமைத்தோம். பீடத்தின் உயரம் நான்கு அடி சேர்த்து மொத்த உயரம் பத்து அடி. கடந்த 2016-ம் ஆண்டு இச்சிலையைத் திறந்தோம். எங்கள் பகுதியில் வயலில் கிடைத்த நாகர், யக்கர் காலத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகளையும் சிலைக்குக் கீழ் வைத்திருக்கிறோம்.

தைப்பொங்கலுக்குப் பிறகு சங்கத்தின் உறுப்பினர்கள், விவசாயிகள் என அனைவரும் சேர்ந்து ஒருநாளைத் தேர்வு செய்து, அந்த நாளில் நல்ல நேரத்தில் உழவன் சிலைக்கு மஞ்சள் தண்ணீரால் அபிஷேகம் செய்வோம். பிறகு சந்தனப்பொட்டு வைத்து மலர் மாலை அணிவித்துப் பொங்கல் வைத்துப் படைப்போம்.

தொடர்ந்து, ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற பாரம்பர்யக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அடுத்ததாக, பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகள் கொடுப்போம். தைப்பொங்கல் சமயத்தில் விவசாயிகள் ஒன்றுகூடி, உழவனுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்படி ஒரு விழாவை நடத்தி வருகிறோம்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

- இ.கார்த்திகேயன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்