‘‘இயற்கைக் காய்கறிகளைச் சாப்பிட்டு உடம்பை ஆரோக்கியமா வெச்சுக்கணுங் கிறதுக்காக

மாடித்தோட்டம் அமைச்சேன். அது மனசுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுத்துட்டுருக்கு” என்று சிலாகிக்கிறார், சென்னை, கோபாலபுரத்தைச் சேர்ந்த பத்மபிரியா. ஒரு விடுமுறை நாளில் மாடித்தோட்டச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த பத்மபிரியாவிடம் பேசினோம்.

“மத்தவங்க வீட்டுல இருக்குற செடிகளோட புகைப்படங்களை எனக்கு வாட்ஸ்அப்புல அனுப்புவாங்க. அதைப் பார்க்கப் பார்க்க எனக்கும் மாடித்தோட்டம் அமைச்சு, வீட்டுத்தேவைக்கான இயற்கைக் காய்கறிகளை விளைவிக்கணும்னு ஆசை வந்துச்சு. அப்புறம், அண்ணா நகர்ல இருக்குற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்துல மாடித்தோட்டம் அமைக்கிறதுக்கான பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

அடுத்து ஆன்லைன்ல தேடிப்பிடிச்சு மாடித்தோட்டம் அமைக்கிறதுக்கான பொருள்களை வாங்கிப் பத்து தொட்டிகளோட ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துலதான், ‘ஆர்கானிக் கார்டன் பவுண்டேஷன்’ங்கிற மாடித்தோட்டக் குழுவோட அறிமுகம் எனக்குக் கிடைச்சது. அந்தக்குழு மூலமா நடத்துற கூட்டங்கள்ல கலந்துக்கிட்டு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்.

அங்க செலவு குறைச்சலான முறைகளைச் சொல்லிக்கொடுக்குறதால, ரொம்ப உபயோகமா இருக்கு. இந்த மூணு வருஷத்துல 100 தொட்டிகளை வெச்சு மாடித்தோட்டத்தை விரிவுபடுத்திப் பராமரிச்சுட்டுருக்கேன்” என்ற பத்மபிரியா செடிகளைக் காட்டிக்கொண்டே பேசினார்.

“இங்க பூச்சிகளுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. இயற்கை முறையில நன்மை செய்யும் பூச்சிகளால செடிகள் பாதுகாப்பா இருக்கு. கத்திரிக்காய், வெண்டைக்காய், புடலை, தக்காளி, பச்சை மிளகாய், பீர்க்கங்காய், பசலைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, ரோஜா, செம்பருத்தி, தாமரைனு நிறையச் செடிகள் இருக்கு. நான் வேலைக்குப் போய்க்கிட்டுருக்கிறதால தினமும் காலையில ஒருமணிநேரம் மட்டும்தான் பராமரிப்பு வேலைகளைச் செய்வேன். லீவு நாள்கள்ல குடும்பத்தோடு சேர்ந்து வேலைகளைச் செய்வோம். செடிகள்ல நோய் தாக்கியிருந்தா, அந்தப் பகுதியை மட்டும் கிள்ளி எடுத்துடுவோம். நிறைய பூச்சிகள் வந்து பாதிப்பு ஏற்படுத்துனா இஞ்சி பூண்டுக் கரைசல் அல்லது வேப்பெண்ணெய்க் கரைசல் தெளிப்பேன். இலைதழைகள், மண்புழு உரம், காய்கறிக்கழிவுகள்னுதான் உரமாகக் கொடுக்குறேன்” என்றார், பத்மபிரியா.

நிறைவாகப் பேசிய பத்மபிரியா, “சீசனுக்குத் தகுந்த மாதிரியான காய்கறி விதைகளை விதைப்பேன். இயற்கையா நம் கண் முன்னால வளர்ற செடிகள்ல காய்க்குற காய்களைப் பறிச்சு சாப்பிடுறப்போ ரொம்பச் சந்தோஷமா இருக்கும்.

இயற்கையில விளையுற காய்களோட சுவையையும் நல்லா உணர முடியுது. என் குடும்பமே இப்போ ஆரோக்கியமா இருக்கு. மாடித்தோட்டத்துல வேலை செய்றதால தனியா உடற்பயிற்சியும் தேவையில்லை. மனச்சோர்வும் சரியாயிடும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு

பத்மபிரியா,
செல்போன்: 99401 16760

- துரை.நாகராஜன், படங்கள்: பெ.ராக்கேஷ்

அதிக தண்ணீர் வேண்டாம்!

மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் குறித்து பத்மபிரியா சொன்ன தகவல்கள்...

கடைகளில் கிடைக்கும் செடி வளர்ப்புப் பைகள் அல்லது தொட்டிகளை வாங்கிக்கொள்ள வேண்டும். செம்மண், மாட்டு எரு, மண்புழு உரம், இலைதழைகள், வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து தொட்டிகளில் நிரப்ப வேண்டும். அடுத்து, தேவையான காய்கறி விதைகளை எடுத்து ஒரு தொட்டிக்கு மூன்று விதைகள் என்ற விகிதத்தில் விதைக்க வேண்டும். ஒவ்வொரு தொட்டிக்கும் ஓர் அடி இடைவெளி கொடுத்து வரிசையாக வைக்க வேண்டும்.

காய்கறிச் செடிகளுக்கு மண் காயாத அளவுக்குத் தண்ணீர் கொடுத்து வர வேண்டும். அதே நேரத்தில் அதிகத் தண்ணீரும் கொடுக்கக்கூடாது. அதிகத்தண்ணீர் கொடுத்தால் மண்ணில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கலந்து வெளியேறிவிடும். மேலும் வேர் அழுகல் நோயும் வர வாய்ப்புண்டு.

அதிக வெயில் அடிக்கும் சமயங்களில் இரண்டு வேளைகள் தண்ணீர்விட வேண்டும். காய்கறிச் செடிகளுக்கு வெயில் அவசியம். தேவைப்படும் சமயங்களில் இஞ்சி பூண்டுக் கரைசல் தெளிக்கலாம். காய்கறிக்கழிவுகளைச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். காய்ப்பு முடிந்த பிறகு, அந்தத் தொட்டியில் சுழற்சி முறையில் வேறு விதைகளை விதைக்கலாம்.

தண்ணீர் தேங்கி தரைதளம் பாதிக்காத அளவில்... பலகைகளை வைத்து அதன்மீது தொட்டிகளை வைக்க வேண்டும். தொட்டிகள், பைகள்தான் என்றில்லாமல் வாளிகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றிலும் செடிகளை வளர்க்கலாம். கோடைக்காலங்களில் அதிக வெயில் இருந்தால் நிழல்வலை அமைத்துக்கொள்ளலாம்.