இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார், ஊர் ஊராகச் சென்று இயற்கை விவசாயம் குறித்த பிரசாரத்தை மேற்கொண்டார். அவரது கனவு கொஞ்சம் கொஞ்சமாகத் தற்போதுதான் நனவாகிக் கொண்டிருக்கிறது. அதை மெய்ப்பித்திருக்கிறது, சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டியில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடைபெற்ற நம்மாழ்வார் நினைவுக் கருத்தரங்கு. தமிழ்நாடு அரசு வேளாண்துறை, ‘பசுமை விகடன்’ ஆகியவை இணைந்து... ‘இனியெல்லாம் இயற்கையே’ என்ற பெயரில் நடத்திய இக்கருத்தரங்கில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் செ.சௌந்தரராஜன், “ஒரு காலத்தில் நம்மாழ்வார் மட்டும்தான் தனிமனிதனாக இயற்கை விவசாயத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இன்று அரசே பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் இயற்கை விவசாயத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

அவர் சொன்ன அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி போன்ற இயற்கை இடுபொருள்கள்தான் திட்டத்தின் மூலம் பரிந்துரைக்கப் படுகின்றன. இடுபொருள்கள் தயாரிப்பதற்கான ‘டிரம்’மைக்கூட மானியத்தில் வழங்கி வருகிறோம். விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். தொடர்ந்து கூட்டத்துக்கு வந்திருந்த ரசாயன விவசாயிகளுக்குச் சில அறிவுரைகளைச் சொன்னார், சௌந்தரராஜன், “நீங்கள் பூச்சிக்கொல்லி விஷத்தைச் செடிகளுக்குப் பகலில் தெளிக்க வேண்டாம். மாலை வேளைகளில் தெளித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், பகலில் தெளிக்கும்போது அயல்மகரந்தச் சேர்க்கை நடத்த வரும் தேனீக்கள் அழிந்து போகக்கூடும். அல்லது அவை உங்கள் வயலுக்கு வராமல் சென்று விடக்கூடும்.

இதனால், இயல்பான மகரந்தச் சேர்க்கை தடைப்பட்டு மகசூல் அளவு குறையும். மானாவாரியில் பயிர் செய்பவர்கள் பயிர்களுக்கு வேம் (VAM) என்ற உயிர் உரத்தைக் கொடுங்கள். இது வேர்களை வலுவாக்கி, பூஞ்சணத் தாக்குதலிலிருந்து காக்கும். வேர்களானது ஆழத்துக்குச் சென்றாலும் சரி, பக்கவாட்டில் கிளைத்தாலும் சரி மண்ணிலுள்ள சத்துக்களைக் கிரகித்துக் கொள்வதோடு, வேர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்ள உதவும்” என்றார்.

சேலம் மாவட்ட வேளாண் துணை இயக்குநர், மத்திய திட்டம் (பொறுப்பு) ர.பன்னீர்செல்வம், “மூன்றாண்டுத் திட்டமான பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டம், 2015-ம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ், 25 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் மூலம் 1,250 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் பலனை உணர்ந்து மேலும் பல குழுக்கள் உருவாக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ஆத்தூர் வட்டார வேளாண்மை அலுவலர் பொ.வேல்முருகன், “தனிநபர் மானியத்தைக் குறைத்துக் கூட்டாக இணைந்து செயல்படும் திட்டங்களுக்குத்தான் தற்போது மானியம் அதிகமாகக் கிடைத்து வருகிறது. அதன்படி, பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் முதல் ஆண்டில் இடுபொருள் தயாரிப்பு மற்றும் நிலத்தை அங்கக வேளாண்மைக்கு மாற்ற ஏக்கருக்கு 4,800 ரூபாயும், இரண்டாம் ஆண்டில் 4,000 ரூபாயும், மூன்றாம் ஆண்டில் 3,644 ரூபாயும் வழங்கப்படும். இயற்கை விவசாயப் பயிற்சி பெற ஒரு குழுவுக்கு 20,000 ரூபாயும் விதைகளுக்காக ஏக்கருக்கு 500 ரூபாயும் வழங்கப்படும்” என்றார். சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி ‘அபிநவம்’ ஜெயராமன், “கணக்கிட்டு விவசாயம் செய்தால் கணிசமாக லாபம் பார்க்கலாம் என்று நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வார். அதைப் பின்பற்றித்தான் நான் இயற்கை விவசாயம் செஞ்சுட்டுருக்கேன்” என்றார். அடுத்து சுவையான மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ‘வீட்டுக்குள் விவசாயம்’ என்ற தலைப்பில் அல்லி ஆரண்யா வீட்டுத்தோட்டம் குறித்து விளக்கினார். இயற்கை இடுபொருள் தயாரிப்புக் குறித்துப் பி.பாஸ்கரன் ஆலோசனை வழங்கினார். மலர்ச் சாகுபடி குறித்துப் பேசினார், வெங்கடாசலம். தொடர்ந்து பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் வெற்றிபெற்ற விவசாயிகள் அண்ணாதுரை, சங்கர், வி.சுதா ஆகியோரும் இயற்கை விவசாயிகள் வி.பழனிசாமி, ஜெகதீசன் ஆகியோரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இறுதியாக காடையாம்பட்டி, வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.கோவிந்தராஜன் நன்றியுரை ஆற்றினார்.

- ஜெ.லெவின், படங்கள்: க.தனசேகரன்