Published:Updated:

தெளிவு தந்த தென்னைப் பயிற்சி... நம்பிக்கை கொடுத்த விகடன்!

தெளிவு தந்த தென்னைப் பயிற்சி... நம்பிக்கை கொடுத்த விகடன்!

பயிற்சி

தெளிவு தந்த தென்னைப் பயிற்சி... நம்பிக்கை கொடுத்த விகடன்!

பயிற்சி

Published:Updated:
தெளிவு தந்த தென்னைப் பயிற்சி... நம்பிக்கை கொடுத்த விகடன்!

“அதை ஞாபகப்படுத்தாதீங்க. தென்னந்தோப்புப் பக்கம் போனாலே நெஞ்சு பதறுது. முடிஞ்சவரைக்கும் தோப்புக்குப் போறதையே நாங்க தவிர்த்துக்கிட்டு இருக்கோம்”- கஜா புயலில் தென்னையை இழந்த விவசாயிகள் இப்படிதான் விரக்தியின் உச்சத்தில் முடங்கிக் கிடந்தார்கள். பல விவசாயிகள் செய்வதறியாமல் குழம்பி இருந்தார்கள்.

‘வார்த்தைகளால் மட்டும் விவசாயிகளை ஆற்றுப்படுத்த முடியாது. அவர்களைக் கரம்பிடித்து அழைத்து வந்து, இதயத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் வெளிச்சம் பாய்ச்சினால்தான் அவர்கள் மீண்டு வர முடியும்’ என முடிவு செய்தது, விகடன் குழுமம். தொடர்ந்து, கஜா புயலில் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கான சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது, ‘பசுமை விகடன்’.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து மதுக்கூர் செல்லும் சாலையில் உள்ள ஆத்திக்கோட்டையில் பவானி என்ற தென்னை விவசாயியின் தோட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி மிகவும் எளிமையான முறையில் ஒரு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெருமழை கொட்டித் தீர்த்த போதிலும்... ‘திக்குத் தெரியாமல் தவிக்கும் தங்களுக்குக் கண்டிப்பாக ஏதேனும் துடுப்பு கிடைக்கும்’ என்ற நம்பிக்கையோடு நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

தெளிவு தந்த தென்னைப் பயிற்சி... நம்பிக்கை கொடுத்த விகடன்!

விவசாயிகள் எந்தக் கேள்வியையும் கேட்காமலேயே அவர்களின் மனதில் புதைந்து கிடந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கினார், விவசாயிகள் எண்ண ஓட்டங்களைத் தெளிவாக அறிந்து வைத்திருந்த செந்தூர்குமரன். குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரான செந்தூர்குமரன், விஞ்ஞான வார்த்தைகளைக் கொண்டு விரிவுரையாற்றாமல், விவசாயிகளின் மொழியிலேயே எளிமையாக விளக்கமளித்தார்.

“முக்கோண முறையில் நடவு செய்தது, குறைவான இடைவெளிவிட்டது, கேரளா மற்றும் பொள்ளாச்சிப் பகுதிகளுக்குரிய மேற்குக் கடற்கரை நெட்டை ரகங்களை இப்பகுதியில் நடவு செய்தது, குறைவான ஆழத்தில் குழி எடுத்து நடவு செய்தது... போன்ற காரணங்களால்தான் தென்னை மரங்கள் இவ்வளவு பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன” என்ற செந்தூர்குமரன், கன்றுகளைத் தேர்வு செய்யும் விதம், நடவு செய்யும் விதம், பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை மீட்டெடுக்கும் விதம், விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை மட்க வைக்கும் விதம் போன்றவை குறித்து விரிவாக விளக்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவு தந்த தென்னைப் பயிற்சி... நம்பிக்கை கொடுத்த விகடன்!

டிசம்பர் 23-ம் தேதி பேராவூரணி அருகிலுள்ள தென்னங்குடி கிராமத்தில் சோம.சிவக்குமார் என்ற விவசாயியின் தோட்டத்தில் பயிற்சி நடைபெற்றது. “வாயு புத்திரனான ஹனுமான், இலங்கையை அழித்த பிறகு, பெருந்தச்சன் என்ற சிற்பி இலங்கையைச் சீரமைத்ததாகப் புராணங்களில் சொல்லப்படுவதுண்டு. கஜா புயல் என்ற வாயுவால், சீரழிக்கப்பட்ட இப்பகுதியின் தென்னை விவசாயத்தைப் பசுமை விகடன் என்ற பெருந்தச்சன் சீரமைத்து, மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது” என நெகிழ்ந்தார், விவசாயி ஆதிநாராயணன்.

“என்ன செய்றதுனு தெரியாமல் தவிச்சிக் கிடந்தோம். இனிமே தென்னையே வேண்டாங்கிற அளவுக்கு விரக்தியில இருந்தோம். இந்தப் பாதிப்பு எதனாலனு அறிவியல்பூர்வமாக உணர வெச்சிட்டீங்க. மறுபடியும் அதே தவறுகளைச் செய்யாமல், வெற்றிகரமாகத் தென்னைச் சாகுபடி செய்றதுக்கான ஆலோசனைகள் கிடைச்சுருக்கு” என்று நம்பிக்கையோடு நன்றி தெரிவித்தார், வாட்டக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால்.

“தென்னை விவசாயிகளோட பாதிப்புகளை விகடன்தான் வெளியுலகத்துக்குக் கொண்டு போனது. விரல்களுக்கு இடையில் தென்னை மரத்தை வரைஞ்சி, மீட்டெடுக்க நாங்க இருக்கோம்னு விகடன்தான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது” என உணர்வுகளை உதிர்த்தார், பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த வீரசேனன்.

- கு.ராமகிருஷ்ணன், படங்கள்: க.சதீஷ்குமார், ஏ.எஸ்.ஈஸ்வர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism