இறைச்சிக்கான கால்நடை வளர்ப்பில் முக்கிய இடத்தில் இருப்பது, கோழி வளர்ப்பு. கோழி இறைச்சிச்

சந்தையில் பிராய்லர் கோழி இறைச்சியே அதிக இடம் பிடித்து இருந்தாலும்... நாட்டுக் கோழிகளுக்கும் தனியாகச் சந்தை வாய்ப்பு இருந்து வருகிறது. இயற்கையாக மேய்ச்சல் முறையில் விட்டு வளர்க்கப்படும் கோழிகளின் இறைச்சிதான் உண்மையில் உடலுக்கு நலம் கொடுக்கக் கூடியவை.

இப்படி வளர்க்கப்படும் கோழிகளுக்குச் சந்தையில் நல்ல விலையும் கிடைத்து வருகிறது. பெரும்பாலானோர், நாட்டுக்கோழிகளைக் கொட்டகைகளில் அடைத்து கம்பெனித் தீவனத்தைக் கொடுத்து வளர்த்து வருகிறார்கள். இப்படி வளர்க்கப்படும் கோழிகளுக்கு விலை கிடைப்பதில்லை. அதே சமயத்தில், மேய்ச்சல் முறையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து நல்ல வருமானம் ஈட்டக் கூடியவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான், அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரைச் சேர்ந்த தங்க.சரவணன்.

‘பசுமை விகடன்’ ஆண்டுச் சிறப்பிதழுக்காக, ஒரு காலைப் பொழுதில் சரவணனைச் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேசினார், சரவணன்.

“டிப்ளமோ படிப்பு முடிச்சுட்டு வெளிநாட்டில் சில வருஷம் வேலை பார்த்தேன். அப்புறம், சொந்த ஊர்லயே ஏதாவது தொழில் செய்யலாம்னு இங்க வந்துட்டேன். எனக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா மேல ஈர்ப்பு உண்டு. அவரோட கருத்துக்களைக் கேட்டதால இயற்கை விவசாயம் மேல ஆசை வந்தது. தொடர்ந்து ‘பசுமை விகடன்’ புத்தகத்தையும் படிச்சுக்கிட்டுருக்கேன். எங்களுக்கு விவசாயம் பண்ற அளவுக்கு நிலம் இல்லை. அதனால, விவசாயம் சார்ந்த தொழில் பண்ணலாம்னு முடிவு செஞ்சேன். பசுமை விகடன்ல நாட்டுக்கோழி வளர்ப்பு பத்தி நிறையச் செய்திகள் வந்துருக்கு. அதுல நல்ல வருமானம் எடுக்க முடியும்னு ஒரு நம்பிக்கை வந்ததால, அதுல இறங்கிட்டேன். இப்போ சிறுவிடை ரக நாட்டுக்கோழிகள்ல 60 பெட்டையும் 8 சேவலும் வெச்சுருக்கேன். அது மூலமாகக் கிடைக்கிற குஞ்சுகளை ஆறேழு மாசம் வளர்த்து வெடைக் கோழிகளா விற்பனை செய்துட்டு இருக்கேன்” என்ற சரவணன், கோழிகளுக்கான கொட்டகையைச் சுற்றிக் காட்டிய படியே பேசினார்.

“பண்ணையோட மொத்தப் பரப்பு 25 சென்ட். அதுல 50 அடி நீளம், 25 அடி அகலத்தில் கொட்டகை அமைச்சிருக்கேன். நான்கு பக்கமும் மூங்கில் சட்டத்தால் தடுப்பு இருக்கு. ஆனா, முழுமையான அடைப்புக் கிடையாது. கோழிகள் சுலபமா கொட்டகையை விட்டு வெளியேற முடியும். ‘ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்’டால் மேற்கூரை அமைச்சு, அதுக்குக் கீழே கீற்றுகளை வேய்ஞ்சிருக்கேன். கோழிகள் முட்டை இட்டு, அடை காக்கிறதுக்கு வசதியா அங்கங்க இருட்டான சூழல்ல அலமாரிகள் இருக்கு. அதேபோலக் கோழிகள் உட்கார வசதியா மூங்கில் குச்சிகளைச் சாய்த்து வெச்சிருக்கோம். உயரத்தில் இப்படி உக்காந்துருக்குறதால, இரவு நேரங்கள்ல பிராணிகளால பாதிப்பு இருக்காது.

இயற்கையான சூழல்ல வளர்த்தால்தான் ஆரோக்கியமா இருக்கும்கிறதால, மேய்ச்சல் முறையில்தான் வளர்க்கிறேன். பண்ணையில மின் விளக்குகள்கூடக் கிடையாது. ராத்திரி நேரத்தில் முழு இருட்டாத்தான் இருக்கும். அதனால, ராத்திரியில கோழிகள் நல்லாத் தூங்குது.

அதேசமயம் கோழிகளுக்குள்ள சண்டை இருக்காது. காலையில சூரியன் உதித்ததும், கோழிகள் தானா மேய்ச்சலுக்கு வெளியே வந்துடும். மேய்ச்சலை முடிச்சுட்டு தானா வந்து அடைஞ்சுக்கும். இங்க வளர்ந்துருக்குற மூலிகைகள், செடிகள், புழு, பூச்சிகள்னு தனக்குத் தேவையானதைத் தேடி சாப்பிட்டுக்கும். இயற்கையா மேய்ச்சல் முறையில் தீனி எடுக்குறதால, தற்காப்புக்கான எச்சரிக்கை உணர்வு அதிகமா இருக்கும். அதனால, கழுகு, கீரிப்பிள்ளை, பாம்பு மாதிரியான எதிரிகளிடம் இருந்து சுலபமாகத் தப்பிச்சுடும்.

கோழி எச்சத்தோட வாசனைக்குப் பாம்புகள் வரும். அதனால, நாங்க வாரத்துக்கு ரெண்டு முறை கொட்டகையைச் சாணம் தெளிச்சி மெழுகிடுவோம். அதனால, பாம்புகள் வர்றதில்லை. இருந்தாலும் பாம்புகள் வந்தா விரட்டியடிக்கிறதுக்காக எட்டு கின்னிக் கோழிகளையும் வளர்க்கிறேன். நாட்டுக்கோழிகளை வளர்க்க ஆரம்பிச்சு இந்த மூன்று வருஷத்தில் பாம்புகளால தொல்லை வந்ததில்லை.

ஒரு உம்பளாச்சேரி மாடும், மூணு சிந்தி மாடுகளும் வெச்சுருக்கேன். அதுகளோட சாணத்தைப் பரவலாகத் தெளிச்சுவிட்டா மண்புழுக்களும், கறையானும் அதிகளவுல உற்பத்தியாகுது. அதனால, கோழிகளுக்குத் தேவையான அளவு இயற்கை உணவு கிடைச்சுடுது” என்ற சரவணன், நிறைவாக, வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“ஒரு பெட்டைக்கோழி, ஒரு முறைக்கு 12 முட்டையில இருந்து 15 முட்டைகள் வரை இடும். அதற்குப்பிறகு 21 நாள்கள் அடைகாக்கும். ஒரு தடவைக்கு 9 குஞ்சுகள்ல இருந்து 12 குஞ்சுகள் வரை கிடைக்கும். நான் உடனடியா தாய்க்கோழிகள்கிட்ட இருந்து குஞ்சுகளைப் பிரிக்கிறதில்லை. குஞ்சுகள் ஐந்து மாச வயசு வரை தாயோடுதான் இருக்கும். அதுக்கப்புறம்தான் குஞ்சுகளைப் பிரிஞ்சு தாய்க்கோழி சேவலோட இணை சேரும். அந்த வகையில பார்த்தா இங்க இருக்குற கோழிகள் வருஷத்துக்கு ரெண்டு தடவைதான் முட்டை வெச்சு குஞ்சுகளைப் பொரிக்கும். 60 கோழிகள் மூலமா மாசத்துக்குச் சராசரியா 100 குஞ்சுகள் கிடைக்கும். அதுல பத்துச் சதவிகிதம் இழப்பு இருக்கும். 90 குஞ்சுகள்தான் நல்ல முறையில வளர்ந்து வரும்.

ஆறேழு மாசம் வளர்த்தா ஒரு கோழி முக்கால் கிலோ எடையில இருந்து ஒண்ணேகால் கிலோ எடை வரை வந்துடும். உயிர் எடைக்கு ஒரு கிலோ 300 ரூபாய்னு விற்பனை செய்றேன். நேரடியா நுகர்வோருக்குத்தான் கோழிகளை விற்பனை செய்றேன். வியாபாரிகளுக்கு விற்பனை செய்றதில்லை. அந்த வகையில் மாசத்துக்கு 90 கோழிகள் விற்பனை மூலமா 27,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இரண்டு மாச வயசு வரைக்கும்தான் குஞ்சுகளுக்குத் தீவனச்செலவு இருக்கும். அதுக்கு மேல மேய்ச்சலுக்குப் போயிடுங்கிறதால தீவனச்செலவு ரொம்பக்குறைவுதான். அந்த வகையில் மாசத்துக்கு 1,000 ரூபாய்ச் செலவாகும். அதுபோக மாசம் 26,000 ரூபாய் லாபம் கிடைச்சுட்டுருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு

தங்க.சரவணன்,
செல்போன்: 63830 23072

- கு.ராமகிருஷ்ணன் படங்கள்: ம.அரவிந்த்

நோய் எதிர்ப்புச்சக்திக்குப் பஞ்சகவ்யா!

கோழி வளர்ப்புக் குறித்துப் பேசிய சரவணன், “சிறுவிடைக்கோழிகள்ல சேவல், பெட்டை ரெண்டுக்குமே கொண்டை, தாடி இருக்கும். பெட்டையின் உடல் அமைப்பு நீளவாக்கில் இருப்பதை வெச்சுதான் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். குஞ்சுகளுக்கு ரெண்டு மாசம் வரைக்கும்... கம்பு, மக்காச்சோளம், முத்துச்சோளம், குருணை எல்லாம் கலந்த அடர்தீவனம் கொடுக்கிறேன். அதற்குப்பிறகு, தாய்க்கோழியோடு சேர்ந்து மேய்ச்சலுக்குப் பழகிடும். அடைச்சு வெக்காம மேய்ச்சல் முறையில இருக்குறதால, நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா கோழிகள் வளருது.

கோழிகளுக்கு வாரத்துக்கு இரண்டு முறை பஞ்சகவ்்யாவைத் தண்ணீர்ல கலந்து கொடுக்கிறேன். 2 லிட்டர் தண்ணீருக்கு 40 மில்லி பஞ்சகவ்யானு கலந்து 75 கோழிகளுக்கும் கொடுக்கிறோம். இதனால, நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்குது. வெள்ளைக்கழிச்சல், ரத்தக்கழிச்சல் நோய்களோட அறிகுறி தெரிஞ்சா... அரிசிக் குருணையில மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், கீழாநெல்லி எல்லாத்தையும் கலந்து, மூன்று நாளைக்குத் தினம் இரண்டு வேளை கொடுத்துட்டா சரியாகிடும்” என்றார்.