“படிப்பு முடிந்து வேலைக்காகச் சென்னைக்குக் குடியேறின பிறகு எப்போவாவதுதான் சொந்த ஊருக்கு

வருவேன். அதுக்கப்புறம் தொடர்ச்சியா அஞ்சு நாள்கூடச் சொந்த ஊர்ல தங்கினதில்லை. இப்போ என்னைக் கிராமத்து வாழ்க்கைக்குத் திருப்பி நிரந்தரமா சொந்த ஊர்லயே தங்க வெச்சுடுச்சு, பசுமை விகடன்” என்று சிலாகித்துச் சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ். சென்னையில் மென்பொருள் துறையில் இருந்த ஆனந்தராஜ், குடும்பத்தோடு சொந்த ஊர் திரும்பி இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார். பட்டுக்கோட்டை அருகில் உள்ள மேட்டுவயல் எனும் கிராமத்தில்தான் இருக்கிறது, ஆனந்தராஜின் நெல் வயல். நாலரை ஏக்கர் பரப்பில் செழிப்பாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது, ஆத்தூர் கிச்சிலிச்சம்பா ரக நெல் பயிர்.

“விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், எனக்கு விவசாயத்தில் பெரியளவு ஆர்வம் இல்லை. எம்.சி.ஏ படிப்பை முடிச்சுட்டு சென்னையில வேலைக்குச் சேர்ந்தேன். அதுக்கப்புறம் நண்பர்கூடச் சேர்ந்து சொந்தமா ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் ஆரம்பித்து நல்லபடியா நடத்திட்டிருந்தோம். ஒருநாள் நண்பர்களோடு பேசிட்டிருக்கறப்போ, ஒவ்வொரு துறை பத்தியும் பேச்சு வந்தது. அப்போது, விவசாயம் பத்தி பேசுனப்போ, ‘விவசாயத்தில் சொல்லிக்கிற மாதிரி பெரிய ஆள்களே இல்லை போலயே’னு நான் கேட்டேன். அப்போதான், ஒரு நண்பர், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் பத்திச் சொல்லிட்டுப் ‘பசுமை விகடன் புத்தகத்தைப் படி. அதுல விவசாயத்தில் ஜெயிச்சவங்களைப் பத்தித் தொடர்ந்து எழுதுறாங்க’னு சொன்னார். அதுக்கப்புறம்தான் ‘பசுமை விகடன்’ புத்தகத்தை வாங்கிப் படித்தேன். நிறைய விஷயங்கள் எனக்குப் பிடிச்சுப்போகவும் அதைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அப்புறம்தான் விவசாயத்துலயும் சாதிக்க முடியும்னு எனக்குத் தெரிந்தது. தொடர்ந்து படிக்கப்படிக்க இயற்கை விவசாயத்துலயும் பாரம்பர்ய நெல் ரகங்கள் மேலேயும் ஆர்வம் அதிகமானது.

சொந்த ஊருக்கு வர்ற சமயங்கள்ல, இங்க இருக்குற விவசாயிகள் படிக்கட்டுமேனு... பசுமை விகடனை வாங்கிட்டு வந்து டீ கடையில போட்டு வைப்பேன். ஊர்ல பொங்கல் சமயத்தில் கூட்டம் போட்டு இயற்கை விவசாயம் பத்தி நான் பேசியிருக்கேன். பசுமை விகடன் பத்தியும், நம்மாழ்வார் பத்தியும் வீடியோக்களைப் போட்டுக் காட்டியிருக்கேன். அடுத்து நாமளே நிலத்தில் இறங்கி விவசாயம் செஞ்சு காட்டணும்னு முடிவு செஞ்சு... போன 2016-ம் வருஷம் சென்னையிலிருந்து, குடும்பத்தோடு கிளம்பி இங்க வந்து விவசாயத்தை ஆரம்பிச்சுட்டேன்” என்று முன்கதை சொன்ன ஆனந்தராஜ் தொடர்ந்து தனது விவசாய அனுபவங்கள் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“பசுமை விகடனைப் படிச்சுப் பார்த்து அதுல சொல்லியிருக்கிறபடி இயற்கை விவசாயத்தை ஆரம்பித்தேன். பாரம்பர்ய நெல் விதைகள் வாங்குறதுக்கும் பசுமை விகடன்தான் எனக்கு உதவுது. இயற்கை விவசாயத்துக்கு நாட்டு மாடு தேவைங்கிறதால, தஞ்சாவூர் குட்டை, உம்பளாச்சேரி, பர்கூர் மலைமாடுனு வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். பெரிய மாடுகள், கன்றுக்குட்டிகள் உள்பட இப்ப என்கிட்ட மொத்தம் 9 மாடுகள் இருக்கு. அதனால, தாராளமாக எரு கிடைக்கிறதோடு பஞ்சகவ்யா தயாரிக்கிறதுக்கான பால், சாணம், மூத்திரம் எல்லாம் கிடைச்சுடுது. இப்போ என்அப்பாவும் என்னோட இயற்கை விவசாயத்தில் சேர்ந்துக்கிட்டார்.

எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. இயற்கை விவசாயத்தைத் துவங்கின முதல் வருஷம், நவதானிய விதைப்பு செஞ்சு பூங்கார் ரக நெல்லைச் சாகுபடி செஞ்சேன். அதுல ஏக்கருக்கு 15 மூட்டை அளவுல மகசூல் கிடைச்சுது. தொடர்ந்து சொர்ணமசூரி, ஆத்தூர் கிச்சிலிச்சம்பா, வெள்ளைப் பொன்னினு சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். ஒவ்வொரு வருஷமும் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டே இருக்கேன். எங்களோட நிலம், களியும் மணலும் கலந்த மண் வகை. இதுல ஒற்றை நாற்றுச் சாகுபடி செய்தால், களைகள் அதிகமா முளைக்குது. மழை அதிகமாச்சுனா பயிர் வீணாகிடுது. எந்திரம் மூலமா நேரடி விதைப்பும் சாத்தியப்படலை. அதனால, ‘சாரி முறை’ (வழக்கமான நடவு முறை) தான் சரியா இருக்கு. இதுல குத்துகள் நெருக்கமாக இருக்கும். ஒரு குத்துக்கு நாலஞ்சு நாற்றுகள் இருக்கும்.

இந்த வருஷம் சம்பாப் பட்டத்தில், சாரி முறையில் நாலரை ஏக்கர் நிலத்தில் ஆத்தூர் கிச்சிலிச்சம்பா ரக நெல்லைச் சாகுபடி செஞ்சுருக்கேன். இலைதழைகள், பஞ்சகவ்யா, மண்புழு உரம், உயிர் உரங்கள், மீன் அமீனோ அமிலம், தேமோர்க்கரைசல்னு இயற்கை இடுபொருள்களை அதிகமாகப் பயன்படுத்துனதால பயிர் வளர்ச்சி நல்லா இருக்கு. கதிர்கள் முக்கால் அடி நீளத்துக்கு வாளிப்பாக வந்திருக்கு. நெல்மணிகளும் நெருக்கமா இருக்கு. ஒரு கதிருக்கு 200 நெல்மணிகளுக்கு மேல இருக்கு. எப்படியும் ஏக்கருக்கு 30 மூட்டைகள் முதல் 36 மூட்டைகள் (60 கிலோ மூட்டை) வரை மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இன்னும் பத்து நாள்ல அறுவடை செஞ்சிடுவேன்” என்ற ஆனந்தராஜ், விற்பனை மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“எப்பவும் நான் நெல்லை அரிசியா மாத்தித்தான் விற்பனை செய்வேன். ஆத்தூர் கிச்சிலிச்சம்பா விதைநெல்லுக்குத் தேவை அதிகமா இருக்குறதால, அறுவடை செஞ்சு விதைநெல்லாவே விற்பனை செய்யலாம்னு முடிவு பண்ணிருக்கேன். ‘தென்னிந்திய இயற்கை விவசாயிகள்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் விதைநெல்லாகக் கொள்முதல் செஞ்சுக்குறதாச் சொல்லியிருக்காங்க. தரமான விதைநெல்லை ஒரு மூட்டை (60 கிலோ) 2,520 ரூபாய் விலைக்கு எடுத்துக்குறதாவும் சொல்லியிருக்காங்க. ஒரு ஏக்கர் பரப்புல 30 மூட்டை அளவு நெல் மகசூலாச்சுனா... 30 மூட்டைக்கு 75,600 ரூபாய் விலை கிடைக்கும். நாலரை ஏக்கர்லயும் சேர்த்து 3,40,200 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல எல்லாச்செலவும் போக... 2,25,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்” என்று நம்பிக்கையுடன் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு

ஆனந்தராஜ்,
செல்போன்: 95851 56403

- கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் பரப்பில் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்யும் விதம் குறித்து ஆனந்தராஜ் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஒரு ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய, 10 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலில் சேற்றுழவு செய்து 200 கிலோ அளவு இலைதழைகள், 100 கிலோ எரு ஆகியவற்றைப் போட்டுத் தண்ணீர் கட்டி 7 நாள்கள் ஊறவிட வேண்டும். பிறகு, ஓர் உழவு செய்து நாற்றங்காலைச் சமப்படுத்தி, 30 கிலோ அளவு விதைநெல்லைத் தெளிக்க வேண்டும். விதைத்த 7-ம் நாள் 26 லிட்டர் தண்ணீரில் 600 மில்லி அளவு பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 13-ம் நாள் 26 லிட்டர் தண்ணீரில் 600 மில்லி பஞ்சகவ்யா மற்றும் 400 மில்லி மீன் அமீனோ அமிலம் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். 14-ம் நாள், 10 லிட்டர் தண்ணீரில் தலா 500 கிராம் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து, குவளையால் மொண்டு நாற்றங்காலில் பரவலாக ஊற்ற வேண்டும். 16-ம் நாளில் நாற்றுகள் முக்கால் அடி உயரத்துக்கு வளர்ந்து நடவுக்குத் தயாராக இருக்கும்.

ஒரு ஏக்கர் சாகுபடி வயலில் 12 கிலோ தக்கைப்பூண்டை விதைத்து, 60-ம் நாள் மடக்கி உழ வேண்டும். 7 நாள்கள் வயலைக் காயவிட்டு மீண்டும் உழுது நிலத்தைச் சமப்படுத்தி, வழக்கமான முறையில் ஒரு குத்துக்கு நான்கைந்து நாற்றுகள் வீதம் நடவு செய்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். நடவு செய்த 5 மற்றும் 20-ம் நாள்களில் 200 கிலோ அளவு மண்புழுவுரத்தைத் தூவிவிட வேண்டும். 12-ம் நாளிலிருந்து 70-ம் நாள் வரை வாரம் ஒருமுறை 65 லிட்டர் தண்ணீரில் ஒன்றரை லிட்டர் பஞ்சகவ்யா, 1 லிட்டர் மீன் அமீனோ அமிலம் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். 15 மற்றும் 45-ம் நாள்களில் களையெடுக்க வேண்டும். 80-ம் நாள், 65 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் தேமோர்க்கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். 100-ம் நாள் 65 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 135-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.