பாரம்பர்ய உணவு குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால்... பலரும் பாரம்பர்ய அரிசி வகைகள், எண்ணெய் வகைகள் எனத் தேடிப்பிடித்து வாங்கத் துவங்கி இருக்கிறார்கள். சமீப காலங்களில் மரச்செக்கு மூலம் உற்பத்தி செய்யும் எண்ணெய்க்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால், விவசாயிகள் பலரும் தற்போது மரச்செக்குகள் அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள பைங்கிணர் கிராமத்தைச் சேர்ந்த கோபால், மரச்செக்கு அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார்.

ஒரு முற்பகல் நேரத்தில் எண்ணெய் தயாரிப்புப் பணியில் மும்முரமாக இருந்த கோபாலைச் சந்தித்தோம். “முன்னாடி எங்க பகுதியில மரச்செக்குகள் அதிகமா இருந்தது. விவசாயிகளே எள், கடலைனு கொண்டு வந்து எண்ணெய் ஆட்டி வீட்டுத்தேவைக்கு வெச்சுக்குவாங்க. பாக்கெட் எண்ணெய் வர ஆரம்பிச்சதும் மரச்செக்குகள் ஒழிஞ்சு போச்சு. மரசெக்குகள் அழிஞ்சதுக்கு ரோட்டரி செக்குகள் வந்ததும் ஒரு காரணம். ஏன்னா, ரோட்டரி செக்குகள்ல எண்ணெய் ஆட்டுறதுக்கான செலவு குறைவு. இப்படிப் பல காரணங்களால மரச்செக்குகள் அழிஞ்சு போச்சு. இப்போ இயற்கை பத்தின விழிப்பு உணர்வு அதிகரிக்கிறதால, மரச்செக்கு எண்ணெய்க்குத் திரும்பவும் மவுசு அதிகரிச்சுருக்கு. அப்பா விவசாயம்தான் செஞ்சுட்டுருந்தார். மொத்தம் 5 ஏக்கர் நிலம் இருக்கு. அப்பாவுக்கப்புறம் நான் விவசாயத்துக்கு வந்தேன். அதுல நிறைய நஷ்டம். அப்புறம் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் ஆரம்பிச்சேன். அடுத்து பொண்ணு படிப்புக்காகச் சென்னைக்குப் போயிட்டோம். அங்க நிறைய இடங்கள்ல வேலை பார்த்தேன். பொண்ணு படிப்பு முடிஞ்சு, இங்கே வந்ததுக்கப்புறம் ஏதாவது தொழில் செய்யலாம்னு யோசிச்சுட்டுருந்தேன்.

அப்போ ‘பசுமை விகடன்’ புத்தகத்துல மரச்செக்கு எண்ணெய் பத்தின செய்தி வந்துருந்துச்சு. அதைப் படிக்கவும் அதையே நாமளும் செய்யலாம்னு முடிவு பண்ணேன். நண்பர்கள் சிலரும் தைரியம் கொடுத்தாங்க. உடனடியா மரச்செக்கு அமைச்சு எண்ணெய் ஆட்ட ஆரம்பிச்சுட்டேன்” என்று முன்கதை சொன்ன கோபால் தொடர்ந்தார்.

“முன்னாடி மரச்செக்குகளை மாடுகள் மூலமா இயக்குவோம். இப்போ மின்சார மோட்டார் மூலமா இயக்குறோம். மின்சார மோட்டார் மூலமா இயக்கினாலும்... மாடுகள் சுத்துற வேகத்துலேயே இயக்குறதால எண்ணெய் சூடேறாது. அதனால, நல்ல சுவையோடு தரமான எண்ணெய் கிடைக்குது. எள்ளை ஆட்டி நல்லெண்ணெய் எடுக்க வெல்லம்தான் சேர்க்குறேன். சிலர் கருப்பட்டி சேர்க்கச் சொல்வாங்க. அவங்களுக்கு மட்டும் கருப்பட்டி சேர்த்து ஆட்டிக் கொடுப்பேன். மரச்செக்கு எண்ணெயோட விலை, பாக்கெட் எண்ணெயைவிட அதிகம்ங்கிறதால இதோட மகத்துவம் தெரிஞ்சவங்க மட்டும்தான் வாங்குறாங்க.

மரச்செக்குல கிடைக்கிற பிண்ணாக்குக்கும் நல்ல விலை கிடைக்குது. என்கிட்ட கேட்டு வர்றவங்களுக்கு விற்பனை செஞ்சதுபோக... இருக்குற மீதி எண்ணெயைப் பசுமை விகடன்ல வர்ற ‘பசுமைச் சந்தை’ பகுதி மூலமா விற்பனை செஞ்சுடுவேன். அது மூலமாவும் எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைச்சுருக்காங்க” என்ற கோபால், வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“ஒரு நாளைக்கு 6 முறைங்கிற கணக்குல 108 கிலோ எள்ளை ஆட்டுறேன். பத்து கிலோ எள்ளுக்கு ஒரு கிலோ வெல்லம்கிற கணக்குல சேர்த்து ஆட்டுனா... 60 லிட்டர் எண்ணெயும், 100 கிலோ பிண்ணாக்கும் கிடைக்கும். ஒரு லிட்டர் நல்லெண்ணெயை 310 ரூபாய்னு விற்பனை செய்றேன். ஒரு கிலோ எள்ளுப்பிண்ணாக்கு 50 ரூபாய் வரை விற்பனையாகுது.

கடலையைத் தினமும் 108 கிலோ அளவுக்கு ஆட்டுவேன். கடலை ஆட்டுறப்போ மட்டும் பதமா தண்ணீர் தெளிக்கணும். 108 கிலோ கடலையை ஆட்டுனா, 70 லிட்டர் எண்ணெயும், 90 கிலோ பிண்ணாக்கும் கிடைக்கும். ஒரு லிட்டர் எண்ணெயை 180 ரூபாய்ல இருந்து 200 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்றேன். கடலைப் பிண்ணாக்கு ஒரு கிலோ 45 ரூபாய் வரை விற்பனையாகுது.

ஆர்டர்களைப் பொறுத்து மாசத்துக்கு ஒரு முறை மட்டும்தான் தேங்காய் எண்ணெய் ஆட்டுவேன். வெளியில இருந்து விவசாயிகள் கொண்டு வர்ற எள், கொப்பரை, கடலையையும் ஆட்டிக் கொடுக்குறேன். மொத்தமாகப் பார்த்தா மாசம் 25,000 ரூபாய் வருமானம் வருது. அதுல செலவுபோக 20,000 ரூபாய் லாபமா நிக்குது” என்று சொல்லி எண்ணெய் ஆட்டுவதில் மும்முரமானார், கோபால்.

தொடர்புக்கு

கோபால்,
செல்போன்: 97519 96399

- துரை.நாகராஜன் படங்கள்: கா.முரளி

மரச்செக்கில் சத்துக்கள் மாறாது!

ரோட்டரிச் செக்கு இரும்பால் செய்யப்பட்டது. இது 15 ஹெச்.பி திறன்கொண்ட மோட்டார் மூலம் இயக்கப்படுவதால், உலக்கை ஒரு நிமிடத்திற்கு 36 சுற்றுகள் வரை சுற்றும். இப்படி அதிக வேகத்தில் சுற்றுவதால், எண்ணெய் சூடேறுகிறது. அதனால், எண்ணெயின் தன்மை மாறுபடும். அதே நேரத்தில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரக்கூடிய கலப்பட எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது ரோட்டரி செக்குகளில் ஆட்டப்பட்டும் எண்ணெய் தரமானதுதான்.

ஆனால், இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மரச்செக்கு எண்ணெய். முழுவதும் மரத்தாலான மரச்செக்கு 3 ஹெச்.பி திறன்கொண்ட மோட்டார் மூலம்தான் இயக்கப்படுகிறது. அதனால், ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 14 சுற்றுகள்தான் உலக்கை சுற்றுகிறது. அதனால், இந்த எண்ணெயில் சத்துக்கள் அப்படியே இருக்கும்.