Published:Updated:

`எங்க பயிரைக் காப்பாத்த இந்த நடவடிக்கை எடுங்க!’ - தேனி கலெக்டருக்கு ஆலோசனை சொன்ன விவசாயிகள்

`எங்க பயிரைக் காப்பாத்த இந்த நடவடிக்கை எடுங்க!’ - தேனி கலெக்டருக்கு ஆலோசனை சொன்ன விவசாயிகள்
`எங்க பயிரைக் காப்பாத்த இந்த நடவடிக்கை எடுங்க!’ - தேனி கலெக்டருக்கு ஆலோசனை சொன்ன விவசாயிகள்

சமீபகாலமாக விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழு. இப்பிரச்னைக்கு தீர்வு காண மாவட்டக் கலெக்டருக்கு விவசாயிகள் இன்று ஐடியா ஒன்றைச் சொன்னார்கள். 

மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு விழிப்பு உணர்வுகள் கொடுத்தபோதும், மக்காளச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு, இன்று (25.01.2019) மாவட்டக் கலெக்டர் அலுவலத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் எதிரொலித்தது. பல விவசாயிகள் படைப்புழுத் தாக்குதல் குறித்த தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் நஷ்டமடைந்துவருவதை எடுத்துக் கூறினர்.

``விழிப்பு உணர்வு கொடுக்கிறீர்கள், புதிய மருந்து அடிக்கச் சொல்கிறீர்கள். ஆனால், இன்றுவரை படைப்புழுவைக் கட்டுப்படுத்த முடியவில்லையே?’’ என விவசாயிகள் மாவட்டக் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கேள்வி எழுப்பினர். அதற்குக் கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து பேசிய விவசாயிகள், ``தீராத இப்பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென்றால், திண்டுக்கலில் அமைந்துள்ள மக்காச்சோளம் ஆராய்ச்சிப் பண்ணையில் உள்ள ஆராய்ச்சியாளர்களைத் தேனிக்கு வரவழைத்து, ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் ஆலோசனைப்படி எங்களை மாவட்ட நிர்வாகம் வழிநடத்த வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும். அவற்றிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற முடியும்" என்றனர்.

இந்த ஐடியா நல்ல ஐடியாவாக இருப்பதாகக் கூறிய கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தினார். உடனே திண்டுக்கல் மக்காச்சோளம் ஆராய்ச்சிப் பண்ணையைத் தொடர்புகொள்ள உத்தரவிட்டார்.