மேற்குத்தொடர்ச்சி மலையே தென்னிந்தியாவில் வாழும் அனைவருக்கும் வாழ்வாதாரம். நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் அன்னை, இந்த மலைதான். இந்த மலையைக் காக்கத் தவறினால், நம் சந்ததிகளைப் பாலைவனத்தில் விடுவதற்குச் சமம். இதைக் காக்கும்பொருட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது, `மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் திருவிழா’. இந்த ஆண்டு, கலை மற்றும் பாரம்பர்யத்துடன் கோயம்புத்தூர் ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய மாநாடு அண்மையில் நடைபெற்றது.

இதில் 8 நாடுகள், 17 மாநிலங்களிலிருந்து இயற்கை ஆர்வலர்கள், பல்வேறு இயற்கை அமைப்புகள், உயிரியலாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் என இயற்கைமீது பாசமும் பேரன்பும் கொண்டவர்கள் கலந்துகொண்டனர். அடையாள அட்டைகூட இயற்கை வழியில் உருவாக்குதல் எனத் தொடங்கி, துணிப்பையில் கொடுக்கும் வரை அனைத்தும் இயற்கை சார்ந்துதான் இத்திருவிழா நடைபெற்றது. நாற்பதுக்கும் மேற்பட்ட இயற்கை ஆறுகளின் பிறப்பிடமாக இருக்கும் நமது மேற்குத்தொடர்ச்சி மலையைக் காக்க பல்வேறு அமைப்புகள் பெரிதும் முயற்சி செய்துவருகின்றன. பறையிசை மற்றும் மேள தாளத்துடன் தொடங்கியது மாநாடு. இருளர் மக்களின் பாரம்பர்ய இசை பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. நமது மூத்த குடிகளான நீலகிரியில் வாழும் மலைவாழ் மக்களின் பிரதிநிதியாக அர்ஜுனன், மாரி (இருளர் )மற்றும் வீணா சென், சந்தியா சென் (தோடர்) ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரம்பர்ய செடிகளை விருந்தினர்களுக்குப் பரிசாக வழங்கினர்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேற்குத்தொடர்ச்சி மலை இயக்க நிறுவனர் பேராசிரியர் மல்ஹோத்ரா பேசுகையில், ``நம் நாட்டில், நான்கு சதவிகிதம் பசுமை வனப்பகுதிக்கு வெளியில் அமைந்துள்ளது. இதை நம்பி, வன விலங்குகள் உயிர் வாழ்ந்துவருகின்றன. எனவே, விலங்குகளைக் காப்பாற்றுவதற்காக இதைக் காக்கவேண்டியது அவசியமாகும். மக்கள் நினைத்தால், இயற்கையைப் பாதுகாக்க முடியும். அவற்றுக்கு நாம் எதுவும் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே நல்லது. மழை மற்றும் இயற்கைச் சமநிலை பாதியளவு மேற்குத்தொடர்ச்சி மலையினால் மட்டுமே நிறைவேறுகிறது. இது நமது மலை; நமது வாழ்வு’’ என்றார்.

நிகழ்வில் வனவிலங்கு புகைப்படக் காட்சி, பழங்குடியினர் கைவினைப் பொருள்கள் கண்காட்சி ஆகியவற்றைச் சிறப்பு விருந்தினர்கள் தொடங்கிவைத்தனர்.

- கௌசல்யா.ரா, படங்கள்: ஆயிஷா அ