“இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டுமானால்... நாமே களமிறங்கினால்தான் சரிப்பட்டு வரும் என்று இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு அப்போதிலிருந்து இப்போது வரை இயற்கை விவசாய வழிகாட்டி ‘பசுமைவிகடன்’தான்” என்று நெகிழ்ச்சியாகச் சொல்கிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, ‘அருட்தந்தை’ அந்தோணி அன்புச்செல்வன். வள்ளியூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கடம்பன் குளம். இக்கிராமத்துக்குள் நுழையும்போதே எதிர்ப்படுகிறது, ‘அன்பு இல்லம்’, ‘அமைதி இல்லம்’ ஆகிய ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள். அன்பு இல்லத்தில் இருந்த அருட்தந்தை அந்தோணி அன்புச்செல்வனைச் சந்தித்துப் பேசினோம்.

“தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிற இஞ்ஞாசியார்புரம்தான் எனக்குச் சொந்த ஊர். 1999-ம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டேன். அதன்பிறகு, திருநெல்வேலி மாவட்டம் தோப்புவிளை, ராதாபுரம், இலங்குளம் ஆகிய ஊர்களில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு உட்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் பங்குத்தந்தையாகச் சேவை செய்து வந்தேன். கடந்த 3 ஆண்டுகளாக வள்ளியூர் பல்நோக்குச் சமூகச் சேவைச் சங்கத்தின் இயக்குநர் மற்றும் செயலராகப் பணியாற்றி வருகிறேன்.

வள்ளியூர் சுற்று வட்டாரத்தில் கிட்டத்தட்ட 120 கிராமங்கள் உள்ளன. அங்குள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சந்தித்துச் சுகாதாரம், தற்சார்பு வாழ்க்கை வாழுதல், சுழல் நிதிக் கடன்கள் ஆகியவை குறித்துப் பயிற்சி அளித்து வருகிறேன். அப்படிப் பயிற்சியளிப்பதற்காக ஒரு கிராமத்துக்குச் சென்றபோது, அக்கிராம மக்கள் என்னை வேளாண்மைத்துறை அதிகாரி என நினைத்து, ‘வீரிய விதைகள், பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுகின்றன’ எனக் கோரிக்கை வைத்தனர். எனக்குள், ‘மக்கள் விதைக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே’ என்ற எண்ணம் எழுந்தது. தொடர்ந்து, எனக்கு முன் இங்கு பணியாற்றிய அருட்தந்தையைத் தொடர்புகொண்டு பேசினேன். அவர் மூலமாக, கன்னியாகுமரி மாவட்ட நஞ்சில்லா வேளாண்மைச் சங்கத்தின் தொடர்பு கிடைத்தது.

தொடர்ந்து எங்கள் பகுதி வேளாண்மைத் துறை அதிகாரிகளையும் தொடர்புகொண்டு பேசி... பணகுடியில் ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த இயற்கை விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை குறித்த பயிற்சியில் நான் கலந்துகொண்டேன். அதில் மண்வளம், இயற்கை விவசாயம் குறித்துத் ‘தரணி’ முருகேசன் பேசினார். அதில் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி போன்ற இயற்கை இடுபொருள்கள் குறித்துப் பணகுடியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சமுத்திரபாண்டி மகேஷ்வரன் செயல்முறை விளக்கம் அளித்தார்.

பயிற்சிக்குப் பிறகு சமுத்திரபாண்டியின் தோட்டத்துக்குச் சென்று இயற்கை முறையில் சாகுபடி செய்த கருத்தக்கார், பூங்கார், கிச்சிலிச்சம்பா ஆகிய ரகங்களைச் சேர்ந்த நெல் பயிர்களைப் பார்த்தேன். அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த இடுபொருள்கள் குறித்தும் அவர் விளக்கிச் சொன்னார். அப்போதுதான் இயற்கை விவசாயம் செய்வது எளிமையானது என்றும் அதிகம் செலவு பிடிக்காது என்றும் தெரிந்துகொண்டேன். அந்தச் சமயத்தில் சமுத்திரபாண்டி மகேஷ்வரன், சில பசுமை விகடன் இதழ்களை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னதோடு, ‘என்னைப்போன்ற இயற்கை விவசாயிகளுக்கு வழிகாட்டி வருவது, பசுமை விகடன்தான். இதைத் தொடர்ந்து படித்தாலே இயற்கை விவசாயத்தை எளிதாகச் செய்ய முடியும்’ என்றும் சொன்னார். அந்த இதழ்களைப் படித்தபிறகு எனக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டது.

அதன்பிறகு, என்னிடம் விதை கேட்ட விவசாயிகளிடம், இயற்கை விவசாயம் குறித்துச் சொன்னேன். அவர்களுக்குச் சரியாகப் புரியவில்லை. அதனால், நாமே இயற்கை விவசாயம் செய்து காட்ட வேண்டும் என முடிவெடுத்து அதில் இறங்கிவிட்டேன்” என்ற அந்தோணி அன்புச்செல்வன், தனது விவசாய அனுபவங்கள் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“வெகு நாட்களாக விவசாயமே செய்யாமல் விடப்பட்டிருந்த நிலத்தில் நன்கு உழவு ஓட்டி மூன்று முறை உழவு செய்து அடியுரமாக மட்கிய குப்பையைப் போட்டு நிலத்தை வளப்படுத்தி 40 சென்ட் நிலத்தில் கருத்தக்கார் ரக நெல்லைச் சாகுபடி செய்தேன். அதில் ஓரளவு நல்ல மகசூல் கிடைத்தது. தொடர்ந்து 40 சென்ட் நிலத்தில் சொர்ணமசூரி ரக நெல்லையும், 50 சென்ட் நிலத்தில் 5 வகைக் காய்கறிகளையும் சாகுபடி செய்தேன். அவற்றை இல்லக் குழந்தைகளின் உணவுக்காகப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது, 40 சென்ட் நிலத்தில் அறுபதாம் குறுவை நடவு செய்துள்ளேன். அவை 20 நாள்கள் பயிராக உள்ளன. ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை விதைத்துள்ளேன்.

40 சென்ட் நிலத்தில் 714 கிலோ சொர்ணமசூரி நெல் கிடைத்தது. இதை அரிசியாக அரைத்தபோது, 503 கிலோ அரிசி கிடைத்தது. அன்பு இல்லம், அமைதி இல்லம் ஆகிய இரண்டு இல்லங்களிலும் மொத்தம் 120 மாணவ, மாணவிகள் உள்ளனர். அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் உணவை சொர்ணமசூரி ரக அரிசியில் சமைக்கிறோம். தற்போது விதைத்துள்ள நிலக்கடலையை அறுவடை செய்து எண்ணெய் ஆட்டி இல்லத்தின் உணவுப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளப் போகிறோம்.

இயற்கை அங்காடிகளில் ஒரு கிலோ சொர்ணமசூரி அரிசி 70 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், நமது குழந்தைகள் சத்தான உணவை உண்ணட்டுமே என்ற நோக்கில், அவர்களுக்குப் பயன்படுத்தி வருகிறோம். அடுத்து 2 ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய ரக நெல்லையும் அரை ஏக்கர் பரப்பில் காய்கறிகளையும் சாகுபடி செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்” என்ற அந்தோணி அன்புச்செல்வன் நிறைவாக,
“இயற்கை விவசாயம் குறித்துத் தெரிந்து கொள்வதற்காகத்தான் பசுமை விகடனைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் விளைவாக எங்கள் இல்லங்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் நஞ்சில்லாத உணவைச் சாப்பிட்டு வருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். விவசாயத்தை விட்டு ஒதுங்கியிருந்த என்னை, மண்வெட்டி தூக்க வைத்ததும், எங்கள் மாணவர்களுக்கு நல்ல உணவு கிடைக்க வழிகாட்டியதும் பசுமை விகடன்தான்” என்று சொல்லி கைகூப்பி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,

‘அருட்தந்தை’ அந்தோணி அன்புச்செல்வன்,
செல்போன்: 94890 29709.

- இ.கார்த்திகேயன், படங்கள்: ப.கதிரவன்

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

40 சென்ட் பரப்பில் சொர்ணமசூரி நெல் சாகுபடி செய்யும் முறை குறித்து அந்தோணி அன்புச்செல்வன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

சொர்ணமசூரி, குறுவைப் பட்டத்துக்கு ஏற்ற ரகம். இதன் வயது 120 நாள்கள். 40 சென்ட் பரப்பில் நடவு செய்ய 2 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 2 கிலோ சொர்ணமசூரி விதைநெல்லைச் சணல் சாக்கில் போட்டுக் கட்டி, தண்ணீர் தொட்டிக்குள் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடியவிட வேண்டும். ஒரு தனி அறையில் சணல் சாக்கை விரித்து அதன்மேல் விதைநெல் உள்ள சாக்கை வைத்து, சணல் சாக்கு மற்றும் வைக்கோல் கொண்டு மூடி வைக்க வேண்டும். மறுநாள் இந்த விதைநெல்மணிகளில் முளைப்பு எடுத்திருக்கும்.

நாற்றங்காலில் தொழுவுரத்தை இட்டு உழவு செய்ய வேண்டும். பிறகு நாற்றங்காலைச் சேறாக்கி தண்ணீர் கட்டி விதைநெல்லைத் தூவி விதைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். 15-ம் நாளுக்கு மேல் 20-ம் நாளுக்குள் நாற்றுகளைப் பிடுங்கி வயலில் நடவு செய்துவிட வேண்டும்.

நடவு வயலில் செழிம்பாகத் தொழுவுரத்தை இட்டு உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு, நிலத்தைச் சேறாக்கிக் கொண்டு... 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்கவ்யா கலந்த கலவையில் நாற்றின் வேர்ப்பகுதியை மூழ்க வைத்து எடுத்து முக்கால் அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து வயலின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். நடவு செய்த 8-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பயிர்கள் மீது தெளிக்க வேண்டும்.

20-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி ஆகியவற்றை
15 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தெளித்து வர வேண்டும். 20 நாள்களுக்கு ஒருமுறை 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 15 மற்றும் 30-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும்.

80-ம் நாளுக்கு மேல் கதிர்பிடிக்கத் துவங்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி பஞ்சகவ்யா, 100 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 90-ம் நாளுக்கு மேல் கதிர்களில் பால் பிடித்து 110-ம் நாளுக்கு மேல் முற்றத் துவங்கும். முற்றிய பிறகு அறுவடை செய்யலாம்.