இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விவசாயி, ஜாமி பட்லர். இவர் 450 ஏக்கர் பரப்பில் கோதுமைச் சாகுபடி செய்து வருகிறார். இவர் தனது பயிரைப் பாதுகாக்கும் வேலைக்காக ‘டாம்’ என்பவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அடுத்த ஆண்டில், ‘டிக்’, ‘ஹாரி’ என இரண்டு பேரை வேலைக்குச் சேர்க்க இருக்கிறார், ஜாமி பட்லர். இந்தப்பணியாளர்கள் மூவரும், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைப்பார்கள். எப்போது என்ன வேலை கொடுத்தாலும் செய்வார்கள். இவர்களை யாரும் கண்காணிக்க வேண்டியதேயில்லை. இட்ட பணிகளை அவர்களாகவே செய்து விடுவதோடு... பண்ணையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் பண்ணை உரிமையாளருக்குத் தெரிவித்து விடுவார்கள்.

இதில் என்ன ஆச்சர்யம் என்று யோசிக்கிறீர்களா... ஆச்சர்யமான விஷயம்தான். இவர்கள் மூவரும் பேச மாட்டார்கள். ஏனெனில் இவர்கள் ‘ரோபோ’ எனப்படும் எந்திரன்கள். ‘ஃபார்ம் ரோபோ’ (Farm Robot) என்றழைக்கப்படும் இவை, தோட்ட வேலைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள எந்திரன்கள். தற்போது, டாம் என்ற ‘வயல் ரோபோ’வை மட்டும் சோதனை அடிப்படையில் வயலில் வேலை செய்ய வைத்துள்ளனர். பட்லரின் வயலில் உள்ள கோதுமை பயிர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்து வருகிறது, டாம்.

நான்கு சக்கரங்களைக் கொண்டு நகரும் டாம்... ஜி.பி.எஸ், செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வயலை ஒரு வரைபடமாக மாற்றிக்கொண்டு செயல்படுகிறது. வயல் ரோபோ, பயிர்களிடையே ஊர்ந்து சென்று, வளரும் பருவத்தில் உள்ள பயிர்களைப் படம் பிடித்து, தன்னுடைய மூளையாகச் செயல்படும் ‘வில்மா’ எனப்படும் நுண்ணறிவுத் தளத்துக்கு அனுப்பும். வில்மா அந்தப் படங்களை ஆராய்ந்து, களைகள் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை மட்டும் நீக்கச்சொல்லி கட்டளை இடும். இதேபோலப் பூச்சித்தாக்குதலும் கண்காணிக்கப்படுகிறது.

பட்லரைப் போல... இங்கிலாந்தில் இருபது விவசாயிகள் வயல் ரோபோக்களைத் தங்கள் வயலில் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளனர். வயல் ரோபோக்கள், அயராமல் இரவு பகலாகத் தங்கள் எஜமானர்களின் பயிர்களைக் கண்காணித்து வருகின்றன.

தொழிலாளர் பற்றாக்குறை, குறைவான கொள்முதல் விலை, அச்சுறுத்தும் பருவநிலை, காலநிலை மாற்றங்கள், இயற்கைச் சீற்றங்கள்... எனப் பல விஷயங்கள் உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளை அச்சுறுத்திக்கொண்டு இருக்கின்றன. அதனால், விவசாயிகள் உற்பத்திச் செலவைக் குறைக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், புதிய தொழில்நுட்பங்களை எதிர்பார்க்கிறார்கள், விவசாயிகள். மேற்கத்திய நாடுகளில், தற்போது நடைமுறையிலுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் எந்திரங்களால் விவசாயிகளின் முழுமையான தேவைகளைப் பூர்த்திச் செய்ய முடியாததால், பண்ணை வேலைக்கு ரோபோக்களை உருவாக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, மேற்கத்திய நாடுகளில் வீட்டு வேலைகளைச் செய்ய மனித ரோபோக்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதன் அடுத்தகட்டம்தான், இந்த வயல் ரோபோக்கள். தற்போது டாம் எனப் பெயரிடப்பட்ட வயல் ரோபோதான் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

“இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் மூலம், தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும். அதோடு, களை மேலாண்மை, உர மேலாண்மை, நீர் மேலாண்மை, பூச்சி மேலாண்மை போன்ற விஷயங்களைத் துல்லியமாக மேற்கொள்ள முடிவதால்... மகசூல் அதிகரிப்பதோடு, உற்பத்திச் செலவு கணிசமாகக் குறைகிறது. ஒவ்வொரு செடியையும் விவசாயிகள் பரிசோதித்து, சிகிச்சை அளிப்பது என்பது இயலாத காரியம். ஆனால், இந்த ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இந்த வேலையைச் சுலபமாகச் செய்துவிடும்” என்கிறார்கள், டாமை உருவாக்கிய விஞ்ஞானிகள்.

இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்பட்சத்தில், விவசாயிகள் ஆரம்பகட்டப் பணிகளுக்காக அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. இந்த எந்திரன்கள் சுயமாக இயங்கும் திறன் பெற்றவை. இன்டர்நெட் வசதி மட்டும் இருந்தால் போதும். பண்ணையில் உள்ள பயிர்கள் குறித்த அனைத்துத் தகவல்களும், விவசாயிகளின் விரல்நுனிக்கு வந்துவிடும்.

களச் சோதனையில், மகத்தான வெற்றி பெற்ற இந்த ரோபோக்கள், இறுதிக்கட்ட சோதனைக்குப் பிறகு... 2021-ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் தானியங்கி டிராக்டர்கள், பால் கறக்கும் கருவிகளைப் போல, இவை விவசாயிகளின் சிறந்த சேவகனாகச் செயல்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஏற்கெனவே பெர்ரி பறிக்கும் எந்திரங்களை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவில், ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனமும், பெர்ரி பழங்களைப் பறிக்கும் ரோபோக்களை உருவாக்கியிருக்கிறது. இவை, அறுவடைக்குத் தயாரானவற்றை மட்டுமே பறிக்கும் திறன் பெற்றவை. இந்த ரோபோக்களை வாடகைக்கு விடவும் திட்டமிடப்பட்டுள்ளது, ஃபுளோரிடாவைச் சேர்ந்த நிறுவனம். தற்போது... டிக், ஹாரி என்ற இரு தனித்துவம்மிக்க வயல் ரோபோக்கள் கடைசிக்கட்ட ஆய்வில் உள்ளன. டிக், மண்ணுக்கு அடியில் வேரைச் சுற்றி மட்டும் உரத்தை இடும் திறமை கொண்டது. இதனால், உரத்துக்கான செலவு பெருமளவில் குறையும். லேசர் நுண் தெளிப்பான் மூலம் களைகளைக் கட்டுப்படுத்த தேவைப்படும் அளவு மட்டும் களைக்கொல்லிகள் தெளிக்கப்படும். ஹாரி சீரான இடைவெளியில், நிர்ணயிக்கப்பட்ட ஆழத்தில், விதைகளை நடும் திறன் கொண்டது.

மனிதர்களைவிடப் பலமடங்கு வேகமாகவும், மிகத் துல்லியமாகவும், திறமையுடன் இந்த ரோபோக்கள் செயல்படும். இப்போது உபயோகத்தில் உள்ள விவசாயக் கருவிகளும், எந்திரங்களும் செய்ய முடியாத பல சிக்கலான விவசாயப் பணிகளை, இந்தக் குட்டி ரோபோக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் துல்லியமாகச் செய்து முடிக்கும். இந்த ரோபோக்கள் ஒவ்வொரு பயிருக்கும் தனிக் கவனம் செலுத்தும் ஆற்றல் பெற்றவை. அதிகச் செயல்திறன் படைத்த, எடை குறைவான இந்த ரோபோக்களைக் கையாள்வதும் எளிது. பயிர்களின் வளர்ச்சி நிலை, அவற்றின் அன்றாடத் தேவைகள் போன்றவற்றை இந்த ரோபோக்கள் உடனடியாக விவசாயிக்குத் தெரிவிக்கின்றன.

இந்த ரோபோக்களைப் பயன்படுத்தும் விவசாயிகள், தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. அனைத்து விவரங்களும் கணினித்திரையில் தெளிவாகத் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், கையாள்வது எளிது.

டாம், டிக், ஹாரி ஆகிய எந்திரன்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, அவற்றை அலுவலகத்தில் இருந்துகொண்டு கண்காணித்து, பயிர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது விவசாயிகளுக்கு அனுப்பும் வேலையை வில்மா செய்து கொண்டிருக்கும்.

இந்த ரோபோக்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவியவர், நான்காவது தலைமுறையாக விவசாயம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த சாம் வாட்சன் ஜோன்ஸ். கடந்த 25 ஆண்டுகளாக அவரது குடும்பத்தின் வருமானம் உயராததைக் கண்டு கலங்கியிருக்கிறார், ஜோன்ஸ். விவசாயத்தை லாபகரமாகச் செய்யாவிட்டால், தனது குடும்பத்தின் கடைசி விவசாயியாகி விடுவோம் என அஞ்சிய ஜோன்ஸ்... ஹார்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழகம் கொடுத்த ஆலோசனைகளின் அடிப்படையில் உருவாக்கியவைதான் டாம், டிக் மற்றும் ஹாரி ஆகியவை.

‘ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகினால், விவசாயக்கூலிகளின் பற்றாக்குறை ஏற்படும். அப்பற்றாக்குறையை இந்த வயல் ரோபோக்கள் தீர்க்கும்’ என்று, பிரிட்டன் பத்திரிகைகள் கருதுகின்றன.
இங்கிலாந்தின் 98 சதவிகித விவசாயம், ஐரோப்பிய நாடுகளின் விவசாயத் தொழிலாளர்களை நம்பித்தான் உள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகியபிறகு, கூலிகளை வேலைக்கு அமர்த்தும்போது பணி மற்றும் குடியேற்றப் பிரச்னைகள் தலையெடுக்கும். அப்போது, எந்திரமயமாக்கல் ஓரளவுக்குப் பலனளிக்கும். அதே நேரத்தில், ‘அனைத்து விவசாயப் பணிகளையும் எந்திரமயமாக்க முடியாது. பழங்கள் மற்றும் காய்கறிகளை அறுவடை செய்வது கடினமான, நுட்பமான வேலை’ என்ற கருத்தும் விவசாயிகளிடையே உள்ளது. இருந்தாலும், இந்த வயல் ரோபோக்கள், விவசாயிகளுக்கு விசுவாசமான ஊழியர்களாகச் செயல்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

‘எதிர்காலத்தில், விவசாயத்தை விட்டு விலகி ஓடும் இளைஞர்களிடமிருந்து இத்தொழில்நுட்பங்கள்தான், விவசாயத்தைக் காப்பாற்றப்போகின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நீர், இடுபொருள்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட்டுப் பயிருக்குக் கொடுப்பதன் மூலம் செலவைக் குறைத்து மகசூலை அதிகரிக்க முடியும். இதனால், விவசாயம் லாபகரமானதாக மாறும். அதனால், எதிர்கால உணவுத்தேவை பூர்த்தியாகும்’ என்பதெல்லாம் உண்மைதான்.

ஆனால், நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் இத்தொழில்நுட்பங்கள் நுழைந்தால்... காலங்காலமாக விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் சிறு விவசாயிகளும், கூலித்தொழிலாளிகளும் வாழ வழியின்றி அழியும் சூழ்நிலை ஏற்படும். பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் விவசாயத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். ‘யார் செய்தால் என்ன?, விவசாயம் அழியாமல் உயிர்ப்புடன்தானே இருக்கும்’ என நாம் எண்ணலாம். ஆனால், நாம் உண்ண வேண்டிய உணவு என்ன என்பதை, அந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும் சூழல் உருவாவதோடு, அவை நிர்ணயிக்கும் விலைக்குத்தான் நாம் வாங்க வேண்டியிருக்கும். இதுதான் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியமான எதிர்வினையாக இருக்கும்.

- கே.ராஜூ