ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழா சமயத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பாகப் புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து 14 புதிய பயிர் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவை குறித்த விவரங்கள் இங்கே...

நெல்

ஏ.டி.டீ-53: இது குறுவை, நவரை, கோடை ஆகிய பருவங்களுக்கு உகந்தது. 105 நாள்கள் வயது கொண்டது. ஒரு ஹெக்டேருக்குச் சராசரியாக 6,340 கிலோ மகசூல் கிடைக்கும். நடுத்தரச் சன்ன அரிசி. அதிக அரவைத் திறன் கொண்டது. குலைநோய், இலை உறை அழுகல், தண்டுத்துளைப்பான், இலை மடக்குப் புழு ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.

வி.ஜி.டி-1: நடுத்தர உயரம் கொண்ட 130 நாள்களில் வளரக்கூடிய சம்பா ரக நெல். சீரகச்சம்பா ரகத்தைப்போலச் சமையல் பண்புகள் மற்றும் சுவைப் பண்புகள் கொண்டது. சாதம் மிருதுவாகவும், மிதமான வாசனையோடு உதிரியாகவும் இருக்கும். பிரியாணி மற்றும் குஸ்கா செய்ய உகந்தது. ஒரு ஹெக்டேருக்குச் சராசரியாக 5,850 கிலோ மகசூல் கிடைக்கும்.

சாமை

ஏ.டி.எல் -1: தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஏற்ற ரகம். வறட்சியைத் தாங்கி வளரும். அடர்த்தியான பெரிய கதிர்கள் கொண்டது. எந்திர அறுவடைக்கு ஏற்றது. அதிக அரவைத்திறன் கொண்டது. மானாவாரிச் சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்குச் சராசரியாக 1,590 கிலோ மகசூல் கிடைக்கும்.

பாசிப் பயறு

வி.பி.என்-4: நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர, அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்ற ரகம். மஞ்சள் தேமல் மற்றும் சாம்பல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. 65 முதல் 75 நாள்கள் வயது கொண்டது. ஒரு ஹெக்டேருக்குச் சராசரியாக 1,025 கிலோ மகசூல் கிடைக்கும்.

ஆமணக்கு

ஒய்.டி.பி-1: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்ற ரகம். ஓராண்டு மற்றும் பல்லாண்டுப் பயிராகப் பயிரிட ஏற்றது. ஒரு செடியில் ஆண்டுக்கு 3 கிலோ அளவு விதைகள் கிடைக்கும். அதிகக் கிளைப்புத்தன்மை கொண்டது. வாடல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. ஒரு ஹெக்டேருக்குச் சராசரியாக 1,460 கிலோ மகசூல் கிடைக்கும்.

சுரைக்காய்

பி.எல்.ஆர்-2: ஒரு ஹெக்டேருக்குச் சராசரியாக 42 டன் மகசூல் கிடைக்கும். பாரம்பர்ய குண்டு சுரைக்காய்ப்போல இருந்தாலும், கழுத்துப்பகுதி குறுகலாக இருக்கும். காய்கள் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். 55 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும். பந்தல் தேவையில்லை.

நிலக்கடலை

பி.எஸ்.ஆர்-2: தமிழ்நாட்டில் நிலக்கடலை விளையும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது. மானாவாரி மற்றும் இறவையில் பயிரிடலாம். வயது 110 நாள்கள். மானாவாரி சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்குச் சராசரியாக 2,220 கிலோ மகசூல் கிடைக்கும். இறவையில் 2,360 கிலோ மகசூல் கிடைக்கும்.

கடம்பு மரம்

எம்.டி.பி-1: தமிழ்நாடு முழுவதும் பயிரிட ஏற்றக் குறுகியகால மரப்பயிர். மரக்கூழ் பயன்பாட்டுக்கு 3 ஆண்டுகளிலும் ஒட்டுப் பலகை மற்றும் தீக்குச்சி பயன்பாட்டுக்கு 5 ஆண்டுகளிலும் அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு 135 டன் முதல் 175 டன் வரை விளைச்சல் தரக்கூடியது.

உருளைக்கிழங்கு

குப்ரி சஹ்யாத்ரி: வசந்த காலம், கோடைக் காலம், கார்காலங்களில் நீலகிரி மலைப்பகுதியில் பயிரிட ஏற்றது. இலைக்கருகல் மற்றும் முட்டைக்கூட்டு நூற்புழு ஆகியவற்றுக்கு அதிக எதிர்ப்பு சக்தி கொண்டது. ஒரு ஹெக்டேருக்கு 28 டன் முதல் 35 டன் வரை மகசூல் கிடைக்கும். அதிக நாள்கள் வைப்புத்திறன் கொண்டது.

பூண்டு

உதகை-2: நீலகிரி மலைப்பகுதி, கொடைக்கானல் மலைப்பகுதி, தாளவாடி மலைப்பகுதி ஆகியவற்றுக்கு ஏற்றது. 123 நாள்களில் ஒரு ஹெக்டேருக்குச் சராசரியாக 17 டன் மகசூல் கிடைக்கும். முட்டை வடிவில், பளபளப்பான இளஞ்சிவப்பு நிறம் கொண்டது.

நட்சத்திர மல்லிகை

கோ-1: ஆண்டு முழுவதும் பூக்கும். வழக்கமாக மல்லிகைக்குக் கிராக்கி ஏற்படும் மாதங்களான நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரைகூட இதில் பூக்கள் கிடைக்கும். மிதமான நறுமணம் கொண்டது. மொட்டுகள் பெரிதாகவும் அதிக நேரம் விரியாமலும் இருக்கும். நீண்ட மலர்க்காம்பு இருப்பதால் கையாள்வது எளிது.

வாழை

காவிரி கல்கி: ஒரு ஹெக்டேருக்கு 50 டன் முதல் 60 டன் வரை விளையக்கூடியது. இது குட்டை ரகம். கற்பூரவள்ளி வாழைப் பழத்தைப்போல இனிப்புச்சுவை கொண்டது. அடர்நடவு முறைக்கு ஏற்றது. மரத்தின் உயரம் குறைவாக இருப்பதால், குலை தள்ளும் பருவத்தில் முட்டுக் கொடுக்க வேண்டியிருக்காது.

காவிரி சபா

குறுகிய காலப் பயிர். பழமாக உண்ணவும் காயாகச் சமைக்கவும் ஏற்றது. வாடல் நோயைத் தாங்கி வளரும். களர், உவர் மண் பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. காய்கள் 7 நாள்கள் முதல் 8 நாள்கள் வரை பசுமை மாறாமல் இருக்கும். ஒரு ஹெக்டேருக்கு 58 டன் முதல் 60 டன் வரை விளையக்கூடியது.

காவிரி சுகந்தம்

கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாகக் கொல்லிமலைப் பகுதியில் பயிரிட உகந்த வாழை ரகம். ஒரு ஹெக்டேருக்கு 50 டன் அளவு விளையக்கூடியது. காய்கள் அடர்பச்சை நிறத்திலும், பழங்கள் பசுமை கலந்த மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பழங்கள் வாசனையாக நல்ல இனிப்புச் சுவையுடன் இருக்கும். வாடல்நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.

தொடர்புக்கு,

இயக்குநர், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
தொலைபேசி: 0422 6611215.

- துரை.நாகராஜன்