வெர்ட்டிகல் கார்டன் தொழில்நுட்பம்!

கட்டடத்தின் உள்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ இருக்கும் இடத்தைப் பயன்படுத்தி அதில் குழாய்கள் அல்லது தொட்டிகளில் மண் அல்லாத ஊடகங்களைக் கொண்டு செடிகளை வளர்ப்பதுதான், வெர்ட்டிகல் கார்டன். இத்தொழில்நுட்பம் மூலம் காய்கறிகளையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், இம்முறையில் தோட்டம் அமைக்கச் செயற்கை வெளிச்சம் தேவை என்பதால், மின்சாரச் செலவு அதிகமாகிறது. ஆனாலும் இப்புதிய தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தியை அதிகரிக்கப் புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனக் காரணம் சொல்லப்படுகிறது.

காபி உற்பத்திக்குப் புதிய திட்டம்!

ஆப்பிரிக்கா நாட்டில் ‘ஃபார்ம் ஆப்பிரிக்கா’ (Farm Africa) எனும் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து... உகாண்டாவின் கனுங்கு பகுதியைச் சேர்ந்த விவசாய இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மூன்றாண்டுத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. உகாண்டா தேசிய இளம் விவசாயிகள் சங்கமும் இத்திட்டத்தில் இணைந்துள்ளது. உகாண்டாவில், அதிகளவில் காபி விளைவிக்கப்பட்டாலும் தரமான விநியோகஸ்தர்கள் இல்லாத காரணத்தால், அந்நாட்டுக் காபி விவசாயிகள் வருமானமின்றித் தவித்து வருகிறார்கள். தற்போது கனுங்கு பகுதியைச் சேர்ந்த 4,800 விவசாயிகளுக்கு ஃபார்ம் ஆப்பிரிக்கா மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தரமான காபியை உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் காபி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்று சொல்கிறார்கள்.

பசுமைக்குடிலில் குடமிளகாய்!

மகாராஷ்டிர மாநிலம், பூனே பகுதியில் வறட்சிப்பகுதியாக இருந்த கட்பன்வாடி எனும் கிராமத்தை... ஓய்வுபெற்ற ஆசிரியர் பஜன்தாஸ் விட்டல் பவார், தனது முயற்சியால் பல விவசாயிகளை வறட்சியிலிருந்து மீட்டுள்ளார். பஜன்தாஸ் மிட்டல் தனது மகன் விஜய்ராவ் மூலமாகத் தங்களது நிலத்தில் பசுமைக்குடில் அமைத்து குடமிளகாய்ச் சாகுபடியில் ஈடுபட்டார். அதில் நல்ல வருமானம் கிடைத்த பிறகு, உள்ளூர் விவசாயிகள் பலருக்கும் அதுகுறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்திப் பலரையும் பசுமைக்குடில் அமைக்க வைத்துள்ளார். தற்போது பல விவசாயிகள் பசுமைக்குடில் அமைத்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.

இந்தியாவுக்கு உதவ முன்வரும் நெதர்லாந்து!

கடந்த ஜனவரி 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை குஜராத் மாநிலத்தில், ‘வைப்ரண்ட் குஜராத் 2019’ (Vibrant Gujarat 2019) என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இதில், நெதர்லாந்து நாட்டிலிருந்து 112 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்துகொண்ட நெதர்லாந்து நாட்டின் தூதர் மார்ட்டின் வான் பெர்க், “இந்தியாவுக்குச் சிறந்த விவசாய முறைகளைச் சொல்லிக்கொடுத்து உதவ நெதர்லாந்து நாடு தயாராக இருக்கிறது. அதன் மூலம் அதிக உற்பத்தித்திறன் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவை சாத்தியமாகும். ஏற்றுமதிக்கும் வழிவகுக்கும்” என்று சொல்லியிருக்கிறார்.

- பா.நந்தினி