இந்தியத் தேங்காய்களை விரும்பும் அரபு நாடுகள்... வறுத்த முந்திரிக்கு வளமான வர்த்தக வாய்ப்பு!

இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் முக்கியப்பயிர்களில் ஒன்று முந்திரி. முந்திரியின் பூர்வீகம், பிரேசில் நாடு. 16-ம் நூற்றாண்டில் இது, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திரா, கோவா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முந்திரிச் சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.

வியட்நாம் நாடுதான் உலக அளவில் முந்திரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. நைஜீரியா இரண்டாம் இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் முந்திரிச் சாகுபடி பெருமளவில் நடக்கிறது. தமிழ்நாட்டில் தானே புயலுக்குப் பிறகு முந்திரி விளைச்சல் பெருமளவில் குறைந்து போனது. தற்போது படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் விளைச்சல் இல்லாத சமயங்களில் தான்சானியாவிலிருந்து ஓட்டுடன் முந்திரியை இறக்குமதி செய்து... ஓட்டை நீக்கி ஏற்றுமதி செய்து வருகிறார்கள், இந்திய ஏற்றுமதியாளர்கள்.

‘இந்திய முந்திரி ஏற்றுமதி விருத்தியகக் கூட்டமைப்பு’ (The Cashew Export Promotion Council of India) எனும் அமைப்பில் உறுப்பினராக இருந்தால்தான் முந்திரியை ஏற்றுமதி செய்ய முடியும். இந்த அமைப்பின் அலுவலகம் கேரள மாநிலம், கொல்லம் நகரில் உள்ளது. முந்திரிச் சாகுபடி குறித்தும் இவ்வமைப்பு வழிகாட்டி வருகிறது. www.cashewindia.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இவ்வமைப்பில் உறுப்பினராக முடியும். இந்த அமைப்பு 1955-ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

முந்திரிப்பருப்பின் அளவு W 180-450 இருக்கும். இதில் W 240, W 320 என்ற அளவு ஏற்றுமதிக்கு உகந்தது. அடுத்து SP (ஒரு முந்திரியை இரண்டாக பிரித்தது) ‘SWP’ ( ஒரு முந்திரி நான்காகப் பிரித்தது), ‘LWP’ (ஒரு முந்திரி எட்டாக பிரித்தது) என்ற அளவீடுகளில் குறிக்கப்படுகிறது. விவசாயிகளிடம் ஒரு கிலோ முந்திரிப்பருப்பு 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விலை வைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஏற்றுமதியின்போது, பெரிய அளவு முந்திரி ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதற்கடுத்த அளவு முந்திரி ஒரு கிலோ 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

முந்திரி நீண்ட நாள் தாங்கும் தன்மை கொண்டிருப்பதால்... வறுத்து மிளகுத்தூள் அல்லது மிளகாய்த்தூள் சேர்த்து மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்யப்படுகிறது. இப்படி வறுக்கப்பட்ட முந்திரி, 50 கிராம் மற்றும் 100 கிராம் அளவு பேக்கெட்களில் அடைத்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. வறுத்த முந்திரிக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. முந்திரி ஓட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கும் ஏற்றுமதி வாய்ப்பு உள்ளது.

அடுத்ததாகத் தேங்காய்க்கான ஏற்றுமதி வாய்ப்புக் குறித்துப் பார்ப்போம். இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தில் முக்கியப்பங்களிக்கும் விளைபொருள்களில் தேங்காயும் ஒன்று. உலக அளவில் 93 நாடுகளில் தேங்காய் விளைவிக்கப்படுகிறது.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகிய நாடுகள் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. இந்தியாவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தென்னைச் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு 100-200 தேங்காய்கள் வரை கிடைக்கும். தேங்காய் ஏற்றுமதிக்கு அரபு நாடுகள் மிகவும் ஏற்றவையாக உள்ளன.

துபாயில் உள்ள ‘ஆவீர் மார்க்கெட்’ இந்தியத் தேங்காய்களை இறக்குமதி செய்வதில் முன்னணியில் இருக்கிறது. ஏற்றுமதிக்கான தேங்காய், 13-14 அங்குலச் சுற்றளவும், 450-550 கிராம் எடையும் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பையில் 13-15 தேங்காய்கள் இருக்கும்படியாக, 20 அடி கன்டெய்னரில் 30,000-35,000 தேங்காய்கள் பிடிக்கும்படி அனுப்பலாம். தேங்காயின் இரு முனைகளிலும் நார் இருக்க வேண்டும். ஒரு கிலோ தேங்காயின் விலை 30-35 ரூபாய்க்கு ஏற்றுமதியாகிறது.

தேங்காய்க் கொப்பரைக்கும் ஏற்றுமதி வாய்ப்பு உள்ளது. சோப், அழகு சாதனப் பொருள்கள், ஹேர் ஆயில் ஆகியவற்றின் உற்பத்தியில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் ஏற்றுமதிக்கு 5 சதவிகிதம் மானியம் உண்டு. ‘தென்னை வளர்ச்சி வாரிய’த்தில் (Coconut Development Board) உறுப்பினராக இருந்தால்தான் தேங்காயை ஏற்றுமதி செய்ய முடியும்.

தேங்காய்ச் சிரட்டை மற்றும் சிரட்டைக் கரி ஆகியவற்றுக்கும் நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ளது. தேங்காய்ச் சிரட்டைக்கரியில் ‘ஆக்டிவேட்டட் கார்பன்’ இருப்பதால்... அது, பற்பசை, அழகுசாதனப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ தேங்காய்ச் சிரட்டை 10 ரூபாய்க்கும், ஒரு கிலோ தேங்காய்ச் சிரட்டைக்கரி 30 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

தேங்காய்ச் சிரட்டையின் மூலம் ஆண்டுக்குச் சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கனடா போன்ற நாடுகளுக்குத் தேங்காய்ச் சிரட்டைக்கரி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேங்காய்ச் சிரட்டையிலிருந்து... அழகுப்பொருள்கள், ஆபரணங்கள், காபி கப், சமையல் உபகரணங்கள்... எனப்பல பொருள்கள் தயாரிக்கப்பட்டு ஜெர்மனி, கனடா, ஐரோப்பிய நாடுகள் ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேங்காய் நாரிலிருந்து தயாரிக்கப்படும் கயிறு பொருள்களும் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. ‘தேங்காய் நாரைக் கொண்டு உருவாக்கப்படும் சோபா, மெத்தை போன்றவை, உடலுக்குக் குளிர்ச்சியளிக்கும்’ எனச் சீனர்கள் நம்புவதால்... தேங்காய் நாரை அதிகளவில் சீனா இறக்குமதி செய்கிறது. நாரைக் கொண்டு தயாரிக்கப்படும் தரை விரிப்புகள், மிதியடிகள் போன்ற பொருள்களுக்குச் சீனா மற்றும் அரபு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. நாரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தூள், எளிதில் மட்கும் தன்மை கொண்டிருப்பதால்... இயற்கை உரப் பயன்பாட்டுக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தத்தூள் அழுத்தம் மூலம் கட்டியாக்கப்பட்டு (காயர் பித்) ஏற்றுமதி செய்யப்படுகிறது. தண்ணீரை உறிஞ்சித் தேக்கி வைக்கும் தன்மையைக் கொண்டுள்ளதால்... வீட்டுத்தோட்டங்கள், பூங்காக்கள், அலுவலக நுழைவாயில்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றில் அமைக்கப்படும் புல்தரைகளில் தேங்காய் நார்த்தூள் அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது. கேரள மாநிலம் கொச்சி மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் இயங்கி வரும் காயர் போர்டு அலுவலகங்களில்... தேங்காய் நார்த்தூள் தயாரிப்புக் குறித்த பயிற்சிகள் மற்றும் ஏற்றுமதிக்கான ஆலோசனைகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த இதழில் நிறைவு பெறும்.

தொடர்புக்கு,

The Cashew Export Promotion
Council of India
Cashew Bhavan, Mundakkal West,
Kollam-691001, Kerala, India
Tel: 0474 2742704
cepci@cashewindia.org

மண்டல அலுவலகம்,
தென்னை வளர்ச்சி வாரியம்,
எண்.47, டாக்டர் ராமசாமி சாலை,
கே.கே நகர், சென்னை-600078,
தொலைபேசி: 044 23662684/85

மண்டல அலுவலகம், காயர் போர்டு,
எண்-41, நேரு நகர், மகாலிங்கபுரம், பொள்ளாச்சி-642 002
தொலைபேசி: 04259 222450
மின்னஞ்சல்: coirpollachi@gmail.com

கே.எஸ்.கமாலுதீன்

தொகுப்பு. த.ஜெயகுமார், படங்கள்: கே.அருண்

கேள்விகள் கேட்கலாம்!

ஏற்றுமதி வியாபாரம் குறித்த உங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவுள்ளார், கே.எஸ்.கமாலுதீன். கேள்விகளை ஏற்றுமதி, கேள்வி-பதில் பகுதி, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமும், pasumai@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

கேள்வி பதில்

“ஏற்றுமதி செய்ய ‘ஹலால்’ சான்றிதழ் அவசியமா?

-மூவேந்தன், திருப்பூர்.

“ஹலால் சான்றிதழ் இறைச்சிக்கு மட்டும்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. விளைபொருள்களுக்கும் எடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாக மலேசியா, புரூனே, ரஷ்யா, அரபு நாடுகள் ஆகியவற்றுக்கு இந்தச் சான்றிதழ் இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியாது. அரிசி, காய்கறிகள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் என அனைத்துக்கும் ஹலால் சான்றிதழ் அவசியம். இந்தச் சான்றிதழ்களைத் தனியார் நிறுவனங்கள்தான் வழங்கி வருகின்றன.

இது சம்பந்தமாகச் சென்னையில் இயங்கி வரும் ‘ஹலால் ஆசியா’ நிறுவனத்தைச் சேர்ந்த ரஹமத்துல்லாவிடம் பேசியபோது, ‘ஹலால் என்றால் ‘அனுமதிக்கப்பட்டது’. ஹரம் என்றால் ‘தடுக்கப்பட்டது’ என்று பொருள்படும். குறிப்பாக ஹலால் என்பது சுத்தமானது, போதை வஸ்துக்கள் இல்லாதது, சரியான முறையில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும். இறைச்சியோ, உணவுப் பொருளோ அதற்குரிய முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதைப் பரிசோதித்து இந்தச் சான்றிதழை வழங்குகிறோம்.

உதாரணமாக வெட்டப்பட்ட ஆடு, கோழிகளில் ரத்தம் உடலில் தங்கக்கூடாது. அதேபோல உணவுப் பொருள்களில் நிறமிகள், சுவையூட்டிகள், பிரிசர்வேட்டிவ்கள் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டும் கலந்துள்ளதா என்பதையும் பரிசோதனை செய்து ஹலால் சான்றிதழ் வழங்குகிறோம். அழகுசாதனப் பொருள்கள், இறைச்சி, காய்கறிகள், மாத்திரைகள், மாம்பழக்கூழ் போன்ற அனைத்துப் பொருள்களுக்கும் இச்சான்றிதழ் அவசியம். தரம் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களைத் தேசிய அங்கீகார அமைப்பில் (NABCB-National Accreditation Board for Certification Bodies) பதிவு செய்துள்ள நிறுவனங்கள்தான் வழங்கும். இந்தியாவில் ஹலாலுக்கான அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு இல்லை. துபாய் மற்றும் சவுதியில் உள்ள சர்வதேச நிறுவனத்தின் கீழ் ஹலால் சான்றிதழ் வழங்கி வருகிறோம். இன்று ஓட்டல்கள், உணவுப் பொருள்களின் பாக்கெட்கள் மீது ‘ஹலால் லோகோ’ இருக்கிறது. இந்த லோகோ இருந்தால் மட்டும் அது ஹலால் ஆகாது. லோகோவின் கீழ் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே, அவை உண்மையான ஹலால் சான்றிதழ் பெற்றவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஏற்றுமதியிலும் பை, மூட்டைகள் மீது ஹலால் லோகோ மற்றும் எண்ணைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்’ என்றார்.”

“சுருள்பாசியை (ஸ்பைரூலினா) மாத்திரையாகவும், பவுடராகவும் ஏற்றுமதி செய்யலாம் என்று இருக்கிறோம். இதை எந்தெந்த நாடுகளுக்கு அனுப்பலாம்... இது, எந்த அமைப்பின் கீழ் வருகிறது?”

-வி.பாக்கியலட்சுமி, வினாயகபுரம், காஞ்சிபுரம்.

“சுருள்பாசி, பியோ (Federation of Indian Export Organisations) என்ற அமைப்பின் கீழ் வருகிறது. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. சென்னையில் இதன் மண்டல அலுவலகம் உள்ளது. சுருள்பாசியைப் பவுடர் வடிவத்தில் அனுப்புவதற்கு இந்த அமைப்பில் உறுப்பினராக வேண்டும். மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் வரும் பியோ அமைப்பே ஏற்றுமதி செய்வதற்கும், இறக்குமதியாளர்களைக் கண்டடைவதற்கும் உதவுகிறது. ஏற்றுமதி செய்வதற்கு வழிகாட்டும் இந்த அமைப்பு, கண்காட்சிகளையும் நடத்துகிறது. அதில் கலந்துகொண்டு மேலும் தகவல்களைப் பெறலாம்.”

தொடர்புக்கு,

706, ஸ்பென்சர் பிளாசா, 7-வது தளம்,
769, அண்ணா சாலை, சென்னை-600 002
தொலைபேசி: 044 28497766/ 28497755
இணையதளம்: www.fieo.org