“சென்னையில் மாடித்தோட்டத்துல ஆர்வம் உள்ளவங்களா இணைஞ்சு நடத்துற ‘ஆர்கானிக் கார்டன் ஃபவுண்டேஷன் குழு’வில் உறுப்பினரா இருக்கேன். ‘பசுமை விகடன்’ புத்தகத்துல மாடித்தோட்டம் பத்தி வர்ற செய்திகளை எல்லாம் எங்க குழுவுக்கான வாட்ஸ்அப்ல பதிவாங்க. இந்தப் பதிவுகளையும், ஆர்கானிக் கார்டன் ஃபவுண்டேஷன் குழுவினருடைய ஆலோசனைகளையும் வெச்சுதான் வெற்றிகரமா மாடித்தோட்டம் அமைச்சுப் பராமரிச்சுட்டு இருக்கேன்” என்று சந்தோஷமாகச் சொல்கிறார், சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ரஜிதா மோகன்.

“சின்ன வயசுல வீட்டுல நிறையச் செடிகளை வளர்த்துட்டுருந்தோம். தினமும் அதுக்குத் தண்ணி ஊத்தி நான்தான் கவனிச்சுக்குவேன். ஒரு கட்டத்துல செடிகளைப் பராமரிக்க முடியாம எல்லாத்தையும் அழிச்சுட்டாங்க. அப்போ இருந்தே எனக்குச் செடி வளர்ப்புல ஆசை அதிகம். திருமணம் ஆன பிறகு, கொஞ்சம் செடிகளை அங்கங்க வெச்சுப் பராமரிச்சுட்டுருந்தேன். இப்போ ஒரு வருஷமாகத்தான் செடி வளர்ப்புல தீவிரமா இறங்கி மாடித்தோட்டம் அமைச்சுருக்கேன்” என்று சொன்ன ரஜிதா மோகன், மாடித்தோட்டச் செடிகளைச் சுற்றிக்காட்டிய படியே பேச ஆரம்பித்தார்.

“மாடித்தோட்டம் அமைச்ச சமயத்துலதான் ஆர்கானிக் கார்டன் பவுண்டேஷன் குழு பத்திக் கேள்விப்பட்டு அதுல இணைஞ்சேன். அங்க கிடைச்ச ஆலோசனைகளும் ஊக்கமும்தான் என்னை ஒரே வருஷத்துல 300 தொட்டிகள்ல செடிகளை வளர்க்க வெச்சுருக்கு. இங்க கத்திரிக்காய், வெண்டைக்காய், புடலை, தக்காளி, பச்சை மிளகாய், பீர்க்கங்காய், முருங்கை, பாலக்கீரை, சிறுகீரை, ரோஜா, செம்பருத்தி, அரளி, வசம்பு, கற்பூரவள்ளி, துளசினு பல செடிகள் இருக்கு. தினமும் காலையில என் குழந்தைகள்தான் மாடித்தோட்டத்தைக் கவனிச்சுட்டுருக்காங்க. விடுமுறை நாள்கள்ல நான் அதிக நேரம் மாடித்தோட்டத்துலதான் இருப்பேன். விடுமுறைனா மொத்தக் குடும்பமும் சேர்ந்து வேலைகளைச் செய்வோம். நோய் தாக்கியிருக்குற பகுதிகளை அகற்றுறது, பூச்சிவிரட்டி தெளிக்கிறது, மண்புழு உரம் கொடுக்குறது மாதிரியான வேலைகளைச் சேர்ந்து செய்வோம். சமையலறைக்கழிவுகள், மண்புழு உரம்னுதான் இடுபொருள்களாகக் கொடுக்கிறேன்” என்ற ரஜிதா மோகன் நிறைவாக,

“இங்க விளையுற காய்கள் எங்க குடும்பத்துக்கு ரெண்டு மூணு நாள்களுக்கு சரியா இருக்கு. மாடியில செடிகள் இருக்குறதால, வீட்டுக்குள்ள எப்பவும் ஏ.சி போட்ட மாதிரி குளிர்ச்சியா இருக்கு. அடுத்து அவசரக் காலத்துக்குத் தேவையான சில மூலிகைகளை வளர்க்கலாம்னு இருக்கேன். தொட்டிகளை அதிகரிச்சு வீட்டுக்குத் தேவையான மொத்தக் காய்கறிகளையும் இங்கயே விளைவிக்கிறது தான் என்னோட ஆசை” என்று சொல்லி விடைகொடுத்தார்.

- துரை.நாகராஜன், படங்கள்: ஆ.வள்ளி செளத்திரி

ஓர் அடி இடைவெளி!

மாடித்தோட்டம் அமைக்கும் முறை குறித்துப் பேசிய ரஜிதா மோகன், “மாடியில் காலியா இருக்குற இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள்னு எல்லா இடத்துலயும் தொட்டிகளை வெச்சு செடிகளை வளர்க்கலாம். ஆனா, அந்த இடம் வெயில் படக்கூடிய இடமா இருக்கணும். ‘பாலித்தீன் ஷீட்’டை விரிச்சு அதுமேல தொட்டிகளை வெச்சா மொட்டைமாடித் தரை பாதிப்படையாது. அதே மாதிரி மரக்கட்டைகள் மேல தொட்டிகளை வெச்சாலும் தரை பாதிப்படையாது. சுலபமாகப் பராமரிக்கிற செடிகள் ஒரு பக்கமாவும் அதிகப்பராமரிப்பு தேவைப்படுற செடிகள் மற்றொரு பக்கமாவும் இருக்குறது நல்லது. இப்படி வைக்கும்போது பராமரிப்பு வேலைகளைத் திட்டமிட்டுச் செய்ய முடியும்.

கடைகள்ல கிடைக்கிற பைகள், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வாளிகள், தண்ணீர் கேன்கள்னு எதுல வேணாலும் செடிகளை வளர்க்க முடியும். தேங்காய் நார், மண்புழு உரம், மாட்டு எரு, செம்மண் நான்கையும் கலந்து தொட்டிகள்ல நிரப்பி, ஒரு தொட்டிக்கு மூன்று விதைகள்னு நடவு செய்யணும். ஒவ்வொரு தொட்டியும் ஓர் அடி இடைவெளியில இருக்குற மாதிரி வைக்கணும். தொட்டிகள்ல அதிகமா தண்ணீர் ஊற்றக்கூடாது. மண் ஈரமாகுற அளவு தண்ணீர் கொடுத்தாப் போதுமானது. நாட்டு ரகங்களை வளர்த்தா நம்ம வீட்டுல விளையுற காய்களையே முற்றவிட்டு அதுல இருந்து விதைகளை எடுத்துக்கலாம். மாடித்தோட்டம் அமைக்க ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்கள் சரியா இருக்கும். கோடைக்காலத்தில் நடவு செய்றதைத் தவிர்த்துடணும். காய்கறிகளுக்கும் கீரைகளுக்கும் நல்ல சூரிய வெளிச்சம் அவசியம். மாடித்தோட்டச் செடிகளுக்கு எக்காரணம் கொண்டும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தக்கூடாது” என்றார்.