கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை... ‘இடைக்கால நிதியமைச்சர்’ பியூஷ் கோயல், மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறார். பா.ஜ.க ஆட்சி அமைத்து ஐந்தாண்டுக் காலம் நிறைவு பெறப்போகும் சூழ்நிலையில்... தற்போதைய மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசிப் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியைத் தொடர முடியும் என்பதால்... நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல விவசாயிகள் நலனுக்காகப் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இத்திட்டங்கள் எந்தளவுக்கு விவசாயிகளுக்குப் பலனளிக்கும் என விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சிலரிடம் கேட்டோம். அவர்களின் கருத்துகள் இங்கே...

சுவாமிமலை சுந்தர விமல்நாதன், செயலாளர், தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்: “22 வகையான விளைபொருள்களின் ஆதார விலை 50 சதவிகித அளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பது, பொய். எந்த விளைபொருளுக்கும் அப்படிக் கூடுதல் விலை கிடைப்பதில்லை.

6,000 ரூபாய் நிதியுதவி என்பதும் மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்த திட்டம் இல்லை. தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர்ராவ் செயல்படுத்தியுள்ள திட்டம்தான் இது. அவர், 2 ஏக்கர் வரை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு அவர் கொடுத்த வாக்குறுதி இது. அதுதான் அவர் வெற்றி பெற முக்கியக் காரணமாகவும் இருந்தது. ஆனால், மத்திய அரசு 5 ஏக்கர் வரை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 6,000 ரூபாய்தான் வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இதுவும் ஏமாற்று வேலைதான். விவசாயிகளுக்கான கடன்களைத் தள்ளுபடி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதே சமயத்தில், ‘காமதேனு ஆயோக்’ திட்டம் வரவேற்க வேண்டிய விஷயம்.”

வையாபுரி, தலைவர், ஐக்கிய விவசாயிகள் சங்கம்: “பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இப்போது விவசாயத் தொழிலாளர்களாக மாறிவிட்டார்கள். விவசாயிகளுக்குப் பணம் கொடுப்பது தேவையற்றது. நதிநீர்ப்பங்கீடு விஷயத்தில் தலையிட்டு விவசாயத்துக்கு அடிப்படைத் தேவையான தண்ணீரைப் பெற வழி செய்ய வேண்டும்.

கடன் தொல்லை, வறட்சி ஆகிய காரணங்களால் விவசாயிகள் தற்கொலை அதிகமாகிக்கொண்டே வருகிறது. பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடும் முறையாக வழங்கப்படுவதில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வந்த மத்திய அரசு, தேர்தல் நெருங்குவதால் இப்படிக் கவர்ச்சியான திட்டங்களை அறிவிக்கிறது.”

செல்லமுத்து, தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி: “இது விவசாயிகளுக்கு எந்தவிதமான உபயோகமும் இல்லாத ஏமாற்றுப் பட்ஜெட். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ஆயிரம் ரூபாய்க் கொடுப்பதாகச் சொல்லிக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள். ஓர் ஆட்டுக்குட்டியை வாங்கி வளர்த்தாலே ஓர் ஆண்டில் 6,000 ரூபாயைவிட அதிகமாகச் சம்பாதித்துவிட முடியும்.

நாடு முழுவதும் அனைத்து விவசாயிகளும் எதிர்பார்த்தது, விவசாயக் கடன்கள் குறித்த அறிவிப்பைத்தான். ஆனால், அதுகுறித்த அறிவிப்புகள் இல்லை. இதனால், விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டுவிட்டன. தேர்தலுக்கு முன்பு, ‘விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து தருகிறேன்’ என மோடி கொடுத்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.”

- துரை.நாகராஜன்

அறிவிப்புகள்

* எழுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு... 2 ஹெக்டேர் வரை (5 ஏக்கர் வரை) நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். ஒவ்வொரு விவசாயிக்கும் ஓர் ஆண்டில் 3 தவணைகளாக இத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் பன்னிரண்டு கோடி விவசாயக் குடும்பங்கள் பயனடைய முடியும்.

* 22 வகையான விளைபொருள்களின் ஆதாரவிலை 50 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

* நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிராமங்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பசுப் பராமரிப்பை உறுதி செய்யவும் ‘காமதேனு ஆயோக்’ எனும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* கிஸான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரண்டு மடங்காக்கப்படும்.

* 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காகும்.