திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இயற்கை விவசாய பயிற்சி வகுப்புக்கு, வருகை தந்திருந்தார் சுபாஷ் பாலேக்கர். அப்போது, கடந்த பசுமை விகடன் இதழில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார், ‘இயற்கை விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியாது’ எனச் சொல்லியிருந்த கருத்துக் குறித்து பாலேக்கரிடம் தமிழ்நாட்டு விவசாயிகள் தகவல் சொல்லியுள்ளனர்.

உடனே, இந்த விஷயம் குறித்து தனது கருத்துக்களை நம்மிடம் பாலேக்கர் பகிர்ந்து கொண்டபோது... “இயற்கை விவசாயம் பற்றி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு என்ன தெரியும்? நான் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயப் பண்ணைகளை உருவாக்கி வெற்றிகரமாக மகசூல் எடுத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட மாதிரிப் பண்ணைகளை அந்தத் துணைவேந்தர் ஒரு முறையாவது பார்த்திருப்பாரா? இயற்கை விவசாயப் பண்ணைகளில் ஆய்வு செய்யாமல், ‘இயற்கை விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்க முடியாது. அதிக விளைச்சல் எடுக்க முடியாது’ என்று கூறுவது தவறு. இது தமிழக விவசாயிகளுக்குத் தவறான வழிகாட்டல்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ‘டைரக்டர் ஜெனரல்’ கூட எனது வழிகாட்டுதலால் உருவாக்கப்பட்ட ஓர் இயற்கை விவசாய மாதிரி பண்ணையை ஒருநாள் முழுவதும் பார்வையிட்டு... ‘நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க இதுதான் மிகச்சிறந்த வழி’ எனப் பாராட்டியிருக்கிறார். ‘நிதி ஆயோக்’ துணைத் தலைவர் ராஜீவ்குமார், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும், இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள். பசுமை விகடன் இதழில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளின் அனுபவங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் இந்தக்கருத்து மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கும் மக்களுக்கும் எதிரானது.

ஐ.நா அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில்... ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்தும் எனது விவசாய முறைகள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார். ஐ.நா அமைப்பும் தற்போது இயற்கை விவசாயத்தை வலியுறுத்த தொடங்கியுள்ளது. பூமி வெப்ப மயமாதலுக்கும் கரியமில வாயு அதிகரிப்பதற்கும் ரசாயன விவசாயம் ஒரு முக்கியக் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த இயற்கை விவசாயம்தான் சரி என்று உலக அளவில் பேசப்படுகிறது. இந்நிலையில், ரசாயன விவசாயத்துக்கு ஆதரவாகப் பேசும் துணைவேந்தர் குமார், பூமி வெப்பமயமாதலுக்கும், நஞ்சான உணவுகளை உண்டு பாதிக்கப்படும் மக்களின் நோய்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்” என்றவர், ‘‘இயற்கை விவசாயத்தால் உணவு உற்பத்தியைப் பெருக்க முடியாது என்று துணைவேந்தர் பதவியில் உள்ளவர் ஆதாரமில்லாமல் பேசி உள்ளார்.

இதுகுறித்து பொது மேடையில் என்னுடனும், தமிழ்நாட்டில் உள்ள முன்னோடி இயற்கை விவசாயிகளுடனும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் விவாதிக்க முன்வருவரா’’ என்று கேள்வியினையும் எழுப்பினார் சுபாஷ் பாலேக்கர்.

- கு.ராமகிருஷ்ணன் படம்: தே.தீக்ஷித்

இனி, சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம்...

தான் பயிற்றுவித்து வரும் விவசாய முறைக்குச் ‘சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம்’ என்று பெயர் மாற்றியுள்ளார் சுபாஷ் பாலேக்கர். இது ஏன் என்றும், இதற்கான காரணம் என்ன வென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘‘இந்த இயற்கை விவசாய தொழில்நுட்ப முறையை உருவாக்க நான் 12 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்திருக்கிறேன். மகாராஷ்டிராவில் காட்டில் வாழும் ஆதிவாசிகளுடன் சேர்ந்து வாழ்ந்து இவ்வளவையும் கற்றுக்கொண்டேன். பிறகு, என் கிராமத்துக்குச் சென்று ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்தேன். இப்படித் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம். தற்போது, இந்தத் தலைப்பைப் பலரும் விரும்பவில்லை. ஏனெனில், இந்த நுட்பத்தில் ஊடுபயிர்களால் கிடைக்கும் வருமானம் பிரதான பயிரின் சாகுபடி செலவை ஈடு செய்வதால், முன்பு ஜீரோ பட்ஜெட் எனப் பெயர் வைத்திருந்தேன். ஆனால், நெல் சாகுபடி செய்யும்போது அதில் ஊடுபயிர்களைச் சாகுபடி செய்ய முடிவதில்லை. இதனால், பிரதானப் பயிருக்காகச் செய்யும் செலவு, செலவு கணக்காகவே கொள்ள வேண்டியுள்ளது. அதனால், இதை ஜீரோ பட்ஜெட் என்று சொல்ல இயலாது என்பது உண்மையே.

அதனால், என்னுடைய இயற்கை விவசாய தொழில்நுட்பங்களுக்கு ‘சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம்’ என்று பெயர் மாற்றியுள்ளேன். இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களை உருவாக்க மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு அதிகப்படியான உழைப்பைக் கொடுத்துள்ளேன். ஆனால், தற்போது நான் கண்டுபிடித்த இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் என்னுடைய பெயரைப் பயன்படுத்துவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அதனால், என் பெயரையே இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்திற்கு வைக்க வேண்டி இருக்கிறது. தற்போது சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம் என்ற பெயரை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இனி அனைவரும் இந்தப் பெயரையே பயன்படுத்துமாறு விவசாயிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.’’