அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘பள்ளிக்கூட வளாகத்தில் மரம் நட்டு வளர்க்கும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்திலும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்!’

-இப்படி ஓர் அறிவிப்பைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் வெளியிட்டுள்ளார். பள்ளிப் பருவத்திலேயே, பசுமையின் முக்கியத்துவத்தை உணர்த்த, இதுபோன்ற முயற்சிகள் நிச்சயமாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், இப்படிப்பட்ட முன்னெடுப்புகளைப் பாராட்டுவதற்கே கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது. காரணம், ஒரு நாள் கூத்து என்கிற கதையாகவே இவற்றில் பலவும் முடிந்துவிடுவதுதான்.

மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்துவதற்காக ஏற்கெனவே, பசுமைப்படை, சுற்றுச்சூழல் குழு உள்படப் பல அமைப்புகள் அரசாங்க உத்தரவுபடியே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இப்படி எதுவுமே நடைமுறையில் இல்லை என்பதுதான் உண்மை. காரணம், தீட்டிய திட்டங்கள் சரிவர நடப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களை உருவாக்காததுதான்.

உண்மையிலேயே சூழல் மீதான அக்கறையுடன்தான் ‘மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் திட்டம்’ என்பதை அமைச்சர் அறிவித்திருக்கிறார் என்றால், பழைய தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள அவர் முன்வரவேண்டும். பாடங்களுக்கு நடுவே, மரங்களைக் கவனமாகப் பராமரிக்கும் பயிற்சி, விடுமுறை காலப் பராமரிப்புக்கான ஏற்பாடுகளையெல்லாம் சரிவரச் செய்யவேண்டும். மிகமுக்கியமாக உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்ட குழுவை உருவாக்கி, பள்ளி மாணவர்களிடையே உரையாட வைப்பதோடு, தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்துவதையும் உறுதிப்படுத்தவேண்டும். இந்த நல்ல பணிக்கு, ஆங்காங்கே இருக்கும் தொழில் நிறுவனங்களை இணைத்துக்கொள்வது, திட்டம் தொய்வின்றி நடைபோட உதவும்.

இப்படி ஊர்கூடி தேர் இழுத்தால், அமைச்சரின் ‘பசுமை’த் திட்டம் நிச்சயம் நிறைவேறும்!

- ஆசிரியர்