Published:Updated:

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

Published:Updated:
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

யற்கைச்சீற்றம், விலையின்மை, ஆள் பற்றாக்குறை... எனப்பல காரணங்களால் விவசாயத்தில் வருமானம் குறைகிறபோது, அதை ஈடுகட்டுபவை விவசாயம் சார்ந்த உபதொழில்கள்தான்.

ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு... என ஏகப்பட்ட பண்ணைத்தொழில்கள் உள்ளன. நமது பண்ணை அமைந்திருக்கும் சூழல், இடவசதி, தண்ணீர் வசதி... போன்ற முக்கியமான காரணிகளை வைத்துச் சரியான பண்ணைத்தொழிலைத் தேர்ந்தெடுத்து ஈடுபட்டால், கண்டிப்பாக நல்ல லாபம் ஈட்ட முடியும்.

சொல்லப்போனால் இதுபோன்ற விவசாய உபதொழில்கள் மூலம் விவசாயத்தில் எடுக்கும் வருமானத்தைவிட அதிகமாக வருமானம் ஈட்ட முடியும். அதுபோன்ற பண்ணைத்தொழில்களை வெற்றிகரமாகச் செய்து வரும் விவசாயிகளை அடையாளப்படுத்தி அவர்களின் வெற்றிச்சூத்திரத்தை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இத்தொடரின் நோக்கம்.

இந்த இதழில் நாட்டுக்கோழிகள் வளர்த்து நல்ல வருமானம் ஈட்டி வரும் நண்பர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் ஜெனில் கார்த்திக் ஆகியோரைப் பற்றிப் பார்ப்போம்.திருநெல்வேலி மாவட்டம், தென்காசி செல்லும் சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, ஆலங்குளம். இங்கிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாளையங்குறிச்சி எனும் கிராமத்தில்தான் கிருஷ்ணகுமார் மற்றும் ஜெனில் கார்த்திக் ஆகியோரின் நாட்டுக்கோழிப்பண்ணை இருக்கிறது.

நாம் வருவதை முன்கூட்டியே தெரிவித்திருந்ததால், பண்ணை அமைந்திருக்கும் இடத்தை (லொக்கேஷன்) ‘வாட்ஸ்அப்’ மூலம் அனுப்பியிருந்தார். அதை வைத்து ‘கூகுள் மேப்’ உதவியுடன் பண்ணையை அடைந்தோம். கோழிக்குஞ்சுகள் வாங்க வந்திருந்த சிலரிடம் பேசிக் கொண்டிருந்தனர், கிருஷ்ணகுமார் மற்றும் ஜெனில் கார்த்திக் ஆகியோர்.

வேலையை முடித்துவிட்டு வந்த கிருஷ்ணகுமார், “எனக்குச் சொந்த ஊர் கோவில்பட்டி. சின்ன வயசுல இருந்தே எனக்குக் கோழி வளர்ப்புல ஆர்வம் அதிகம். ஒரு தனியார் கல்லூரியில ‘அசிஸ்டன்ட் புரொஃபச’ரா வேலை பார்த்துக்கிட்டுருந்தேன். கோழி வளர்ப்புல இருந்த ஆர்வத்தால அதுசம்பந்தமான வாட்ஸ்அப் குரூப், ஃபேஸ்புக் குரூப்கள்ல இணைஞ்சிருந்தேன். கோழி வளர்ப்பு சம்பந்தமா இன்டர்நெட் மூலமாவும், தெரிஞ்ச கோழிப்பண்ணை வெச்சுருக்கவங்க மூலமாவும் நிறையத் தகவல்களைத் திரட்டி வெச்சுருந்தேன். அந்தத்தகவல்களை அப்பப்போ கோழி வளர்ப்புச் சம்பந்தப்பட்ட குரூப்கள்ல போட்டு விடுவேன். ஏதாவது சந்தேகம் கேக்குறவங்களுக்கும் பதில் சொல்வேன்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் இருந்த ஒரு குரூப்ல ஜெனில் கார்த்திக்கும் இருந்தார். அவருக்குச் சொந்த ஊர் அம்பாசமுத்திரம். வாட்ஸ்அப் குரூப் மூலமா நாங்க ரெண்டு பேரும் ‘ஃப்ரண்ட்ஸ்’ ஆனோம். ஜெனில், வெளிநாட்டுல வேலை பார்த்துட்டுருக்கார். அவருக்கும் கோழி வளர்ப்புல அதிக ஆர்வம் இருந்துச்சு. அது தொடர்பா நாங்க ரெண்டு பேரும் ‘பிரைவேட் சாட்’ல நிறைய பேச ஆரம்பிச்சோம். அப்போதான் எங்களுக்கு ஒரு பண்ணை அமைக்கிற யோசனை வந்தது. பண்ணை அமைச்சா பெரியளவுல இருக்கணும்னு முடிவு பண்ணி, அதுக்காக நிலம் தேட ஆரம்பிச்சோம். இந்த அஞ்சு ஏக்கர் நிலம் எங்களுக்குத் தோதா இருந்ததால, வாங்கிட்டோம்” என்ற கிருஷ்ணகுமார், பண்ணையைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

“ஜெனில், வெளிநாட்டுல இருக்குறதால அங்கிருந்தே ஆலோசனைகளைச் சொல்வார். லீவு சமயங்கள்ல சொந்த ஊர் வந்தா, தினமும் பண்ணைக்கு வந்திடுவார். இப்போ லீவுல வந்துருக்கார்.

பண்ணைக்கான நிலம் வாங்கினதும், கொட்டகைகளை அமைச்சோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தாய்க்கோழிகளையும் சேவல்களையும் வாங்கிச் சேர்க்க ஆரம்பிச்சோம். சிறுவிடை, பெருவிடை, இடைவெட்டுனு மூணு வகைகள்லயும் கோழிகள் வெச்சுருக்கோம். ‘பேரன்ட் ஸ்டாக்’கா 380 தாய்க்கோழிகளும் 40 சேவல்களும் இருக்கு. ஒருநாள் வயதுள்ள குஞ்சுகள்ல இருந்து விடைக்கோழி வயது வரை கிட்டத்தட்ட 2,500 வளர்ற கோழிகள் இருக்கு.

தாய்க்கோழிகள், சேவல்களுக்கு 1,000 சதுர அடி அளவுல 3 ‘ஷெட்’கள் போட்டிருக்கோம். குஞ்சுப்பருவத்துல அதாவது பிறந்ததுல இருந்து ரெண்டு மாச வயது வரை உள்ள கோழிகளுக்கு 750 சதுர அடில 5 ஷெட்கள் அமைச்சு, ஒவ்வொரு ஷெட்டையும் ரெண்டு பகுதிகளாகப் பிரிச்சு வெச்சுருக்கோம். ரெண்டு மாச வயசுக்கு மேல உள்ள கோழிகளுக்காக 2,000 சதுர அடி அளவுல 8 ஷெட்கள் அமைச்சுருக்கோம். ஒவ்வொரு ஷெட்ல இருக்குற கோழிகளுக்கும் தனியா மேய்ச்சலுக்காக இடம் விட்டிருக்கோம். இந்த மேய்ச்சல் நிலத்தையும் மீன் வலையைக் கட்டி பிரிச்சுட்டோம். அதனால, கோழிகளுக்குள்ள சண்டை வராது. ஒவ்வொரு ‘பேட்ச்’ கோழியும் சுலபமா அதுகளோட கொட்டகையை அடைஞ்சுக்க முடியும்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

கோழிகளுக்கான கொட்டகைகளுக்குள்ள ஏணி மாதிரியான அமைப்பை அமைச்சுருக்கோம். மேற்கூரையை விட்டுக் கொஞ்சம் கீழே குறுக்கும் நெடுக்குமா சவுக்குக் கட்டைகளைக் கட்டி வெச்சுருக்கோம். ஏணி மேல ஏறி இந்தக் கட்டைகள்ல கோழிகள் உக்காந்துக்கும். பொதுவா நாட்டுக்கோழிகள், மரக்கிளைகள்ல உட்கார்வதைத்தான் விரும்பும். அந்த மாதிரி அமைப்பை இங்க ஏற்படுத்தியிருக்கோம். வேற எந்தப் பிராணியும் கொட்டகைக்குள்ள போக முடியாத அளவுக்குப் பாதுகாப்பா சுத்தியும் வலை அடிச்சுருக்கோம். அப்படியே பாம்பு, கீரி மாதிரியான பிராணிகள் ஏதாவது கொட்டகைக்குள்ள புகுந்துட்டாலும், கோழிகள் உயரத்துல இருக்குறதால எப்படியாவது பறந்து தப்பிச்சுடும்.

நாங்க முட்டைகளை விற்பனை செய்றதில்லை. கிடைக்கிற முட்டைகள் மொத்தத்தையுமே ‘இன்குபேட்டர்’ல பொரிக்க வெச்சுக் குஞ்சுகளாத்தான் விற்பனை செய்றோம். ஆரம்பத்துல ஒரு இன்குபேட்டரை விலைக்கு வாங்கிட்டு வந்தோம். அது சரிப்பட்டு வரலை. அதனால, நாங்களே எங்களுக்குத் தேவையான அளவுல ஒரு இன்குபேட்டரைத் தயார் பண்ணிக்கிட்டோம். வளர்ப்புக்காக வாங்குறவங்களுக்கு அவுங்க சௌகர்யபடி... ஒரு நாள் வயசுள்ள குஞ்சு, ஒரு மாச வயசுள்ள குஞ்சு, ரெண்டு மாச வயசுள்ள குஞ்சு, மூணு மாச வயசுள்ள குஞ்சுனு விற்பனை செய்றோம். வளர்ந்த கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்றோம்” என்ற கிருஷ்ணகுமார், விற்பனை மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

“ஒரு நாளைக்கு 80 முட்டைகள்ல இருந்து 100 முட்டைகள் வரை கிடைச்சுட்டுருக்கு. அந்த முட்டைகளைச் சேகரிச்சு வெச்சு... வாரத்துக்கு 600 முட்டைகள் வீதம் இன்குபேட்டர்ல வைக்கிறோம். முட்டைகள் பொரிஞ்சு கிட்டத்தட்ட 520 குஞ்சுகளுக்கு மேல வெளிவரும். அதுல 470 குஞ்சுகள்ல இருந்து 500 குஞ்சுகள் வரைதான் உயிர் பிழைச்சு நல்ல முறையில நோய்கள் இல்லாம வளர்ந்து வரும். ஒருநாள் வயசுள்ள குஞ்சுகளை ஒரு குஞ்சு 60 ரூபாய்னு விற்பனை செய்றோம். ஒரு மாச வயசுள்ள குஞ்சுகளை ஒரு குஞ்சு 120 ரூபாய்னு விற்பனை செய்றோம். ரெண்டு மாச வயசுள்ள குஞ்சுகளை ஒரு குஞ்சு 200 ரூபாய்னு விற்பனை செய்றோம். இந்த மாதிரி குஞ்சுகளைப் புதுசா பண்ணை அமைக்கிறவங்கதான் வாங்கிட்டுப் போறாங்க. ஆறு மாச வயசுக்கு மேல உள்ள கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வோம். ஆறு மாசம் வரை வளர்த்தா ஒரு கோழி ஒண்ணேகால் கிலோ எடை வரும். அந்தக் கோழிகளை உயிர் எடைக்கு ஒரு கிலோ 350 ரூபாய்னு விற்பனை செய்றோம். சேவல்கள் ஆறு மாசத்துல ஒண்ணே முக்கால் கிலோ வரை எடை வந்துடும். அந்தப்பருவத்துல உயிர் எடைக்கு ஒரு கிலோ 300 ரூபாய்னு விற்பனை செய்றோம்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

ஒருநாள் வயசுள்ள குஞ்சுகள்ல 300 குஞ்சுகள் வரை, ஒரு மாசத்துல விற்பனையாகுது. அது மூலமா 18,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஒரு மாச வயசுள்ள குஞ்சுகள்ல 200 குஞ்சுகள் வரை ஒரு மாசத்துல விற்பனையாகுது. அது மூலமா 24,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

ரெண்டு மாச வயசுள்ள குஞ்சுகள்ல 250 குஞ்சுகள் வரை ஒரு மாசத்துல விற்பனையாகுது. அது மூலமா 50,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. வளர்ந்த கோழி, சேவல்கள் விற்பனை மூலமா மாசத்துக்கு 3,00,000 ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. மொத்தமா ஒரு மாசத்துக்கு 3,92,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. இது, போன மாசம் கிடைச்ச வருமானக் கணக்கு. சராசரியா இந்தளவுக்கு ஒவ்வொரு மாசமும் வருமானம் கிடைச்சுடுது.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

ஒவ்வொரு மாசமும் வேலையாள்கள் சம்பளத்துக்காக 65,000 ரூபாய் செலவாகுது. தீவனத்துக்கு 75,000 ரூபாய், மின்சாரக் கட்டணம் 5,000 ரூபாய், மருந்துகள் 6,000 ரூபாய், போக்குவரத்துச் செலவு, இதர செலவுகள் 15,000 ரூபாய்னு மாசத்துக்கு மொத்தம் 1,66,000 ரூபாய் செலவாகுது. அதுபோக ஒரு மாசத்துக்கு இப்போதைக்கு 2,26,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது. ஒவ்வொரு மாசமும் 2,25,000 ரூபாய்க்குக் குறையாம லாபம் நிக்கும்” என்ற கிருஷ்ணகுமார் நிறைவாக,

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

“நிலம், கொட்டகைகள், தாய்க்கோழிகள்னு நாங்க போட்டிருக்குற முதலீடு பல லட்சங்களைத் தாண்டும். அதையெல்லாம் எடுக்க இன்னும் சில வருஷங்கள் ஆகும். இப்போ கொஞ்ச நாளாத்தான் விற்பனையை ஆரம்பிச்சுருக்கோம். நிறைய பேர் தேடி வர ஆரம்பிச்சுருக்காங்க. சந்தையில நாட்டுக்கோழிகள்ங்கிற பேர்ல வீரிய ரகக்கோழிகளும் விற்பனைக்கு வருது. அந்த மாதிரிக் கோழிகளை அதிகளவுல வளர்க்க ஆரம்பிச்சா, நம்ம நாட்டு ரகக்கோழிகள் அழிஞ்சு போக வாய்ப்பிருக்கு. அதனாலதான், நாங்க கலப்பு இல்லாத தூய நாட்டுக்கோழிகளைக் கிராமங்கள்ல தேடிப்பிடிச்சு வளர்க்குறோம். நாட்டு ரகக் கோழிகளை அழியாமல் பாதுகாக்கறதுக்கு எங்களாலான முயற்சி இது” என்று சொல்லி விடைகொடுத்தார். 

தொடர்புக்கு,

கிருஷ்ணகுமார்,
செல்போன்: 87540 37900

 - ஜி.பிரபு, படங்கள்: வீ.சிவக்குமார்

இரண்டு மாத வயதிலிருந்து மேய்ச்சல்!

கோழிகளைப் பராமரித்து வரும் முறைகள் குறித்துப் பேசிய கிருஷ்ணகுமார், “கோழிகளை அடை படுக்க வெச்சு, குஞ்சுகளை உற்பத்தி செஞ்சா, அந்தக் குஞ்சுகள் ஓரளவு வளர்ற வரைக்கும் தாய்க்கோழியே பார்த்துக்கும். ஆனா, இன்குபேட்டர் மூலமா உற்பத்தி செய்ற குஞ்சுகளுக்கு அதிகப் பராமரிப்புத் தேவைப்படும். தாயோட அரவணைப்பு இல்லாததால குஞ்சுகளுக்குச் செயற்கையா வெப்பமூட்டணும். அதற்காகத் தனி அறைகள்ல ‘புரூடர்’ங்கிற அமைப்பை ஏற்படுத்திருக்கோம்.

25 அடி சுற்றளவு, ஒன்றரை அடி உயரம் இருக்குற மாதிரி தகரத்தை வட்டமா வெச்சு ஏற்படுத்துற அமைப்புதான், புரூடர். இந்த அளவு கொண்ட புரூடர்ல ஒருநாள் வயசு கொண்ட முந்நூறு குஞ்சுகளை விடலாம். புரூடரோட அடிப்பகுதியில செய்தித்தாள்களை விரிச்சு, அதுல நெல் உமியைக் கொட்டிப் பரப்பிக் குஞ்சுகளை விட்டுடுவோம். பொதுவா, ஒரு குஞ்சுக்கு ஒரு ‘வாட்ஸ்’ங்கிற கணக்குல பல்பு போட்டு எரியவிட்டா குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம் கிடைச்சுடும். அதிகக் குளிர்காலங்கள்ல ஐந்நூறு வாட்ஸ் அளவுல பல்புகளை எரிய விடுவோம். புரூடர் செட்டப்ல கிட்டத்தட்ட இருபது நாள்கள் வயசு வரை வெச்சுருப்போம். புரூடர்ல முந்நூறு குஞ்சுகளுக்கு 5 தீவனத்தட்டு (ஃபீடர்), 5 தண்ணீர் தட்டு (டிரிங்கர்)ங்கிற விகிதத்துல வைச்சுருக்கோம். தினமும் தீவனத்தட்டையும், தண்ணீர் தட்டையும் சுத்தப்படுத்திடுவோம்.

குஞ்சு பிறந்த மூணு நாள்கள் வரை தினமும் கருப்பட்டித்தண்ணீர் மட்டும்தான் கொடுக்கிறோம். அதுக்கப்புறம் நாட்டுக்கோழிக் குஞ்சுகளுக்கான பிரத்யேகத் தீவனத்தைக் கடையில் வாங்கிக் கொடுக்குறோம். 15-ஆம் நாள் வயசுல இருந்து முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, அசோலானு கொடுக்க ஆரம்பிச்சுடுவோம். 20-ஆம் நாள் வயசுல இருந்து மேய்ச்சலுக்குப் பழக்க ஆரம்பிச்சுடுவோம். வலை கட்டின பகுதிக்குள்ளயே மேயுறதால பாதுகாப்பா இருக்கும். ரெண்டு மாச வயசுக்கப்புறம் முழு மேய்ச்சல்தான்.

காலையில ஆறே முக்கால் மணிக்கு கொட்டகைகளைத் திறந்து விட்டுடுவோம். உடனே கோழிகள் வெளியே வந்து மேய ஆரம்பிக்கும். காலையில எட்டரை மணிக்கு நெல் அல்லது அரிசியைத் தூவி விடுவோம். அடுத்து பதினோரு மணிக்கு அசோலா அல்லது கீரைகளைச் சாப்பிடக் கொடுப்போம். மதியத்துக்கு மேல, வேகவெச்ச மீன் கழிவுகளை அங்கங்க வெச்சுட்டா கோழிகள் வந்து சாப்பிடுக்கும்.

சாயங்காலம் மக்காச்சோளக் குருணை, அரிசி, தவிடு, கீரைனு தூவி விடுவோம். கோழிகள் சாப்பிட்டு முடிச்சதும் அப்படியே கொட்டகைக்குள்ள அடைய ஆரம்பிக்கும். சாயங்காலம் ஆறே முக்கால் மணியானதும் எல்லாக் கோழிகளையும் உள்ள ஓட்டிவிட்டு கொட்டகையை அடைச்சுடுவோம். கொட்டகைக்குள்ள தண்ணீர் வசதி ஏற்படுத்தி வெச்சுருக்குறதால கோழிகள் தேவைப்படுறபோது குடிச்சுக்கும்.

இன்குபேட்டர்ல வெச்சு பொரியாத முட்டைகளைத் தோட்டத்துல குழிதோண்டிப் புதைச்சுடுவோம். கையாள்றப்ப உடையுற முட்டைகள், நாய்க்கு உணவாகப் பயன்படுத்துற முட்டைகளோட ஓடுகளை அங்கங்க போட்டு வெச்சுட்டா கால்சியம் பற்றாக்குறை உள்ள கோழிகள் அதைக் கொத்திச் சாப்பிடுக்கும்” என்றார்.

தீவனச்செலவைக் குறைக்கும் மீன் கழிவுகள்!

கோழிகளுக்கான மருத்துவப்பராமரிப்புக் குறித்துப் பேசிய கிருஷ்ணகுமார், “இ.எம் கரைசலைத் தண்ணீர்ல கலந்து வாரம் ரெண்டு தடவை எல்லாக் கோழிகளுக்கும் கொடுக்குறோம். அதேமாதிரி, வாரம் ஒரு தடவை மீன் அமினோ அமிலம் கலந்த தண்ணீரைக் கோழிகளுக்குக் குடிக்கக் கொடுக்கிறோம்.

புளிச்ச மோர்ல வெங்காயத்தை ஊறவெச்சு அதை அடிக்கடி கோழிகளுக்குக் கொடுக்குறோம். இ.எம், மீன் அமினோ அமிலம், புளிச்ச மோர் மூணுமே கோழிகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்குது. காக்கா உள்ளிட்ட மத்த பறவைகள் மூலமா ஏதாவது நோய் பரவிடக் கூடாதுங்கிறதால, தேவைப்படுற சமயங்கள்ல தடுப்பூசிகளைப் போட்டுடுவோம். ஒவ்வொரு பருவத்துலயும், வாய் வழியாகக் கொடுக்க வேண்டிய தடுப்பு மருந்துகளையும் தவறாமக் கொடுத்துடுவோம். மீன் அமினோ அமிலம் தயாரிக்கிறதுக்கு வாங்கிட்டு வர்ற மீன் கழிவுகள்ல தேவைக்குப் போக மீதியிருக்கிறதை வேக வெச்சுக் கோழிகளுக்குக் கொடுத்துடுவோம்.

அசோலா, மீன் கழிவுகள் எல்லாத்தையும் கோழிகள் விரும்பிச் சாப்பிடுது. அசோலாவை நாங்களே உற்பத்தி செஞ்சுக்குறோம். மீன்கழிவு மார்க்கெட்ல இலவசமாவே கிடைக்குது. அதனால, தீவனச்செலவு கணிசமாகக் குறையுது” என்றார்.

நான் கற்ற பாடம்!

கோழி வளர்ப்பில் பெற்ற படிப்பினைகள் குறித்துப் பேசிய கிருஷ்ணகுமார், “ஆரம்பத்துல சந்தைகள்ல கொஞ்சம் கோழிகளை வாங்கிட்டு வந்தோம். ஆனா, அதுல நிறைய கோழிகள் நோய்வாய்ப்பட்ட கோழிகள். இங்க வந்து கொஞ்சநாள்கூட உயிரோட இல்லை. அதனால, சந்தையில மொத்தமாகக் கோழிகளை வாங்கக்கூடாதுனு முடிவு பண்ணி கிராமங்களுக்குப் போய் வளர்க்கிறவங்களை நேர்ல பார்த்து வாங்க ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் பெருசா உயிரிழப்பு ஏற்படலை. வேற வழியே இல்லாம சந்தையில வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டா, கோழிகளை வாங்கிட்டு உடனடியா அந்தப் பருவத்துக்கேத்த தடுப்பூசிகளைப் போட்டுடணும். அதோட, உடனே நம்மகிட்ட இருக்குற கோழிகளோட சேர்க்காம 20 நாள்கள் வரைக்கும் தனியா வெச்சுப் பராமரிக்கணும். அதுக்கப்புறம் அதுக்கு எந்த நோயும் இல்லைங்கிறதை உறுதிப்படுத்திக்கிட்டுதான் பழைய கோழிகளோட சேர்த்து கொட்டகைக்குள்ள விடணும். அப்போதான் நோய்கள் பரவாது.

குஞ்சுகளுக்குக் கடையில வாங்குற தீவனத்தைக் கொடுத்துட்டே இருந்துட்டு, ஒருநாள் திடீர்னு அதை நிப்பாட்டிட்டு வேற தீவனத்தைக் கொடுக்கக்கூடாது. படிப்படியா குஞ்சுத்தீவனத்தைக் குறைச்சுக்கிட்டே வந்து, அரிசி, தவிடு, அசோலா, கீரைகள் மாதிரியான தீவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்கணும். சாப்பிட ஆரம்பிச்சதும், படிப்படியா அதிகரிச்சுட்டே வந்தாப் பிரச்னை இருக்காது. ஒரே நாள்ல திடீர்னு தீவனத்தை மாத்தினா கோழிக்குஞ்சுகளால ஏத்துக்க முடியலை. அந்த மாதிரி நாங்க செஞ்சதால நிறைய குஞ்சுகள் இறந்துடுச்சு.

புரூடர்ல பல்பு எரியுது, கோழிகளுக்கு வெப்பம் கிடைச்சுடும்னு நாம பாட்டுக்கு இருந்துடக்கூடாது. குஞ்சுகளோட செயல்பாடுகளைக் கவனிச்சுக் குஞ்சுகளுக்கான வெப்பத்தைக் கூட்டிக் குறைக்கணும். புரூடர்ல குஞ்சுகள் தனித்தனியா இருக்குறப்போ அதுக்குப் போதுமான வெப்பம் கிடைக்குதுங்குறதைப் புரிஞ்சுக்கலாம். ஒரே இடத்துல எல்லாக் குஞ்சுகளும் மொத்தமாகக் குவிய ஆரம்பிச்சா... ‘குஞ்சுகளுக்குக் குளிர் அடிக்குது, வெப்பம் தேவை’ங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டு கூடுதல் பல்புகளை எரிய விடுவோம்.

வெப்பத்தை அதிகரிக்கலைனா குஞ்சுகள் வெப்பத்துக்காக ஒண்ணு மேல ஒண்ணு ஏறி மூச்சுமுட்டி இறந்துடும். இதையும் நாங்க அனுபவத்துலதான் தெரிஞ்சுக்கிட்டோம். மீன் கடைகள்ல கோழிக்கழிவுகள் இலவசமாகக் கிடைக்குதேனு வாங்கிட்டுக் கோழிகளுக்குக் கொடுக்க ஆரம்பிச்சோம். கழிவுகளை அப்படியே சாப்பிடக் கொடுத்தப்போ கோழிகளுக்கு ஒத்துக்கலை. அதனாலயும், நிறையக் கோழிகளை இழந்துருக்கோம். அதுக்கப்புறம் மீன் கழிவுகளை நல்லா வேக வெச்சுக் கொடுக்க ஆரம்பிச்சோம். அதுக்குப் பிறகு, கோழிகளுக்கு எந்தப் பிரச்னையும் வர்றதில்லை. இந்த மாதிரி பல விஷயங்களை நாங்க கத்துக்கிட்டேதான் இருக்கோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism