Published:Updated:

சிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்!

சிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
சிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்!

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்...2சட்டம்

சிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்!

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்...2சட்டம்

Published:Updated:
சிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
சிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்!

விவசாயம் லாபகரமாக இல்லாததால்தான் ஏராளமான விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேறி

சிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்!

வருகிறார்கள். உழவுத்தொழில் லாபமில்லாமல் இருப்பதற்கு முக்கியக்காரணம் முக்கால்வாசி விவசாயிகள் வெள்ளந்தியாக இருப்பதுதான். அரசின் சட்டதிட்டங்கள், சலுகைகள், மானியங்கள், கடன்கள், காப்பீடு, தொழில்நுட்பம்... என எந்த விஷயமாக இருந்தாலும் சரி அது, விவசாயிகளை முழுமையாகச் சென்று சேர்வதில்லை. பொதுவாக விவசாயம் என்றாலே அது லாபமில்லாத தொழில் என்று மனதில் பதிந்துவிட்டதால்... தங்கள் பிள்ளைகள் படித்து வேறு வேலைக்குப் போகட்டும் என்றுதான் பெரும்பாலான விவசாயிகள் நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில்... விவசாயச் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் போன்றவைதான் அரசின் திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

விவசாயிகளின் முக்கியமான பிரச்னை, பொருளாதாரப் பிரச்னைதான். எந்த வகையில் கடன் பெற முடியும் என்ற விழிப்பு உணர்வு இல்லாததால், பல விவசாயிகள் தனியாரிடம்தான் கடன் பெறுகிறார்கள். நகைகள், வீட்டுப்பத்திரங்கள், நிலப்பத்திரங்கள் ஆகியவற்றை அதிக வட்டிக்கு அடகு வைத்து மீட்க முடியாமல், சொத்துக்களை இழந்து நிற்பவர்கள் ஏராளம். இப்படி மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக வழிகாட்டும் வங்கிக்கடன் குறித்த தகவல்களை இந்த இதழில் பார்ப்போம்.

கடந்த 15 ஆண்டுகளாக விவசாயக் கடன்களில், கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது, அரசாங்கம். இன்று அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள்... தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் போன்றவற்றில் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனாலும், பெரும்பாலான விவசாயிகளுக்குக் கடன், வட்டி குறித்த சட்ட ரீதியான உரிமைகள் தெரிவதில்லை. வங்கிகளில் விவசாயக் கடன் கிடைக்கும் என்று தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு... ஒவ்வொரு பயிருக்குமான அதிகபட்சக் கடன் தொகை விவரம், அதைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலகட்டம் போன்றவை தெரிவதில்லை. உதாரணமாக, நெல்லுக்கு நடப்பாண்டில் ஒரு ஏக்கர் பரப்புக்கு அதிகபட்சமாக 29,500 ரூபாய் விவசாயக் கடன் வழங்கலாம் எனக் கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக்கடனை எட்டு மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி கிடையாது. இல்லாவிடில் 7 சதவிகித அளவு வட்டி செலுத்த வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்!

இப்படி ஒவ்வொரு பயிருக்கும் அந்த ஆண்டு நிர்ணயிக்கப்படும் கடன் தொகை, எவ்வளவு நாள்களில் திருப்பிச்செலுத்தினால் வட்டி மானியம் கிடைக்கும் போன்ற விவரங்களைக் கூட்டுறவு வங்கிச் செயலாளர், மாவட்ட கூட்டுறவுத்துறை பதிவாளர் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கும் கடனைக் குறித்த காலத்துக்குள் திரும்பச் செலுத்தினால், 4 சதவிகித வட்டி மட்டும் கட்டினால் போதுமானது. விவசாயக் கடன் வாங்க... முதலில் கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) சான்று வாங்க வேண்டும். அந்தச் சான்றில், சர்வே எண், பயிர் செய்யும் பரப்பளவு, பயிர் விவரம், சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் போன்ற விவரங்கள், தாலுக்கா விவரம், பசலி ஆண்டு (விவசாய ஆண்டு) உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் பெறப்பட்ட கணினி சிட்டா-அடங்கல் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்று ஆகியவற்றை இணைத்து வங்கியில் கொடுத்துக் கடன் பெறலாம். தாசில்தார் அலுவலகத்தில் கணினி சிட்டா-அடங்கல் வாங்க 30 ரூபாய் மட்டும்தான் கட்டணம்.

கணினியில் நிலத்தின் விவரம் இல்லாத சூழ்நிலையில், கிராம நிர்வாக அலுவலரிடமே சிட்டா-அடங்கலை வாங்கிக் கொள்ளலாம். குத்தகைக்கு நிலம் பிடித்துச் சாகுபடி செய்பவர்களும் கிராம நிர்வாக அலுவலரிடமே சிட்டா-அடங்கலை வாங்கிக் கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா-அடங்கல் வாங்குவதற்குப் பணம் கிடையாது. ஆனால், இதற்கு 100 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை லஞ்சமாக வாங்கும் கிராம நிர்வாக அலுவலர்களும் உண்டு. லஞ்சம் கொடுக்காமல் வாங்க நினைக்கும் விவசாயிகள், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

வங்கியில் ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு தேவைப்படும்பட்சத்தில் கள ஆய்வு செய்து பிறகு விவசாயக் கடன் கொடுப்பார்கள். கடன் கொடுக்கும்போதே பயிர்காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையையும் பிடித்தம் செய்து கொள்வார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் தொகை முழுவதையும் ரொக்கமாகவே கொடுத்து விடுவார்கள். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் ரொக்கமாகக் குறிப்பிட்ட அளவு தொகையைக் கொடுத்துவிட்டு மீதியை விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி போன்ற பொருள்களாகக் கொடுப்பார்கள். இந்த ஆண்டு 22,250 ரூபாய் ரொக்கமாகவும், 1,650 ரூபாய் மதிப்பில் விதையும், 4,500 ரூபாய் மதிப்பில் உரம், 1,100 ரூபாய் மதிப்பில் பூச்சிக்கொல்லியும் கொடுத்தனர். உரம், பூச்சிக்கொல்லி போன்றவை தேவைப்படாத விவசாயிகள் முழுத்தொகையையும் ரொக்கமாகவே பெற்றுக் கொள்ளலாம். உரம், பூச்சிக்கொல்லி வாங்க வேண்டும் என்று விவசாயிகளைக் கூட்டுறவு வங்கிகள் கட்டாயப்படுத்தக் கூடாது.

சிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்!

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாக இருந்தாலும் சரி, கூட்டுறவு வங்கியாக இருந்தாலும் சரி... ஒருமுறை பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகள் மீண்டும் கடன் வாங்க முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் விவசாயிகள் மீண்டும் தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்க நேரிடுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் தங்க நகைகளை அடகு வைத்தும் விவசாயக் கடன் வாங்க முடியும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் விவசாயக் கடன் பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால்... வங்கி மேலாளர், மண்டல மேலாளர், வங்கி குறை தீர்ப்பாளர் போன்றோரை அணுகித் தீர்வு காணலாம். வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால்... மாவட்டக் கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம். விவசாயக் கடன் பெறுவதில் உள்ள சந்தேகங்களைச் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைத் தொடர்பு கொண்டும் நிவர்த்திச் செய்து கொள்ளலாம்.

பயிர்க் கடன், பயிர்க்காப்பீடு போன்ற விவரங்கள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

தொடர்புக்கு, செல்போன்: 76671 00100

- வழிகாட்டல் தொடரும்

சிவ.இளங்கோ, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism