கஜா புயலில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் துயரங்கள் தீர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்று தெரியவில்லை. புயல் கடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் வேளாண்மைத் துறை, உணவுத் துறை அமைச்சர்கள் இருக்கும் மாவட்டங்களிலேயே விவசாயிகளின் குறைகள் களையப்படவில்லை. அரசுப் பதிவேட்டில் இருக்கும் தென்னை மரங்கள் மட்டுமே இழப்பீடு வழங்குவதற்காகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட மரங்களில், பாதிக்குப்பாதி தென்னை மரங்களுக்கு மட்டுமே இழப்பீடு கொடுப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் கஜா புயலால் 60,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்த, சுமார் ஒரு கோடி தென்னை மரங்களை விவசாயிகள் இழந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கணக்கெடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகளை நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டு கிறார்கள் தென்னை விவசாயிகள்.

இதுகுறித்து பேசிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தென்னை விவசாயி வீரசேனன், “எங்கள் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி தென்னை மரங்களை இழந்திருக்கிறோம். ஆனால், 35,000 ஹெக்டேர் நிலத்தில், 52 லட்சம் தென்னை மரங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணக்கு எழுதியிருக்கிறார்கள். நஞ்சை, புஞ்சை மனைகளிலிருந்த தென்னைகளைக் கணக்கில் கொள்ளவில்லை.

ஒரு மரத்துக்கு இழப்பீடாக ரூ.600-ம், மரத்தை வெட்டி அப்புறப்படுத்த ரூ.500-ம் வழங்குகின்றனர். இந்த நிவாரணத் தொகை போதாது. அரசு இதைக் கண்டுகொள்ளவே இல்லை. மரங்களை அப்புறப்படுத்த வழியில்லாமல், மண்வளம் கெட்டுவிடும் என்று தெரிந்தும், மனதைக் கல்லாக்கிக்கொண்டு பெற்ற பிள்ளைகளைப்போல் வளர்த்தத் தென்னைகளைத் தோப்பிலேயே தீயிட்டு எரிக்கிறோம். தற்போது புதிய தென்னை கன்றுகளை அரசு வழங்குகிறது. அவையும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்காமல் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5,000 கன்றுகள் வீதம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துக் கொடுக்கின்றனர். அதிலும் ஆளும் கட்சியினருக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

தென்னை, நீண்ட காலப்பயிர். பலன் கொடுப்பதற்கு ஏழு வருடங்களுக்கு மேலாகும். இதனால், நெட்டை ரகக் கன்றுகளைக் கொடுக்காமல் மூன்று ஆண்டுகளில் காய்க்கக்கூடிய ஒட்டு ரக, குட்டை ரகக் கன்றுகளைக் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், நெட்டைரகக் கன்றுகளை மட்டுமே கொடுக்கிறார்கள். அந்த தென்னங்கன்றுகளும் தரமில்லாதவை. இவற்றை வைத்தால் ஏழு ஆண்டுகள் ஆனாலும்கூட காய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. அதேபோல தென்னை மரங்களை இழந்த விவசாயிகள் பலருக்கும் கணக்கெடுக் கப்பட்ட பிறகும் வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை” என்றார் வேதனையுடன்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் விமலநாதன் கூறுகையில், “மத்திய அரசு மிகவும் தாமதமாகவே பாதிப்புகளைப் பார்வையிடுவதற்கான மத்தியக் குழுவை அனுப்பி வைத்தது. தென்னையைப் பற்றியே என்னவென்று தெரியாத அந்த அதிகாரிகள், தோப்பில் விழுந்துகிடந்த தென்னை குரும்பைகளை எடுத்து ‘இஸ் திஸ் கோக்கனெட் எக்?’ என்று விவசாயிகளிடம் கேட்டனர். அந்தக் குழுவினர் தெரிவித்த பாதிப்புக்கான நிதியைக்கூட மத்திய அரசு இன்னும் தரவில்லை. தற்போது தேர்தல் வருவதால் மீண்டும் மூன்று பேர் கொண்ட குழுவை ஆய்வுக்காக அனுப்பிவைத்து, கண்துடைப்பு நாடகத்தை நடத்தி வருகிறார்கள். கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழை, வெற்றிலை கொடிக்கால், நெல் மகசூல் பாதிப்புகள் கணக்கெடுக்கப்பட்டும் இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீடு வரவில்லை. தினம் ஒரு சாலை மறியல், போராட்டம் நடக்கிறது. ஆனாலும் பலன் இல்லை” என்றார் கோபமாக.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நெடுஞ்செழியனிடம் கேட்டோம். “தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு அடங்கலில் உள்ள 32,540 ஹெக்டேர் நிலத்தில் இருந்த தென்னை மரங்களைக் கணக்கெடுத்துள்ளோம். அதுதான் முறையான கணக்கெடுப்பாகும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை 376 கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 52,000 விவசாயிகள் இழப்பீடு பெற்றுள்ளனர். தென்னங்கன்றுகளைப் பொறுத்தவரை தஞ்சை பகுதிக்கு ஏற்ற, 70 ஆண்டுகள் ஆயுள் கொண்ட மற்றும் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கக்கூடிய, ‘கிழக்கு கடற்கரை நெட்டை ரகம்’ தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கிவருகிறோம். அவை தரமானவைதான். முதல் கட்டமாக 62,000 கன்றுகள் கொடுக்கப் பட்டுள்ளன. சீக்கிரமே காய்ப்புக்கு வரக்கூடிய ரகங்களுக்கு ஆயுள் குறைவு என்பதால்தான், அந்த ரகக் கன்றுகளைக் கொடுக்கவில்லை. அதேசமயம் விவசாயிகளின் உண்மையான பாதிப்பு அறிந்து, அரசு அடங்கல் அல்லாத மற்ற நிலங்களில் இருந்த தென்னை மரங்களையும் கணக்கு எடுத் துள்ளோம். அரசு உத்தரவிட்டால், அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப் படும்” என்றார் பொறுமையாக!

காலமெல்லாம் உழைத்துச் சேர்த்து வைத்த சொத்துகளை இழந்து, கிட்டத்தட்ட வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிற்பவர்களிடம் கறார் காட்டுவது கண்ணியமும், நியாயமும் இல்லை. பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை மரங்களையும் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டியது அரசின் கடமை.

- கே.குணசீலன், படங்கள்: ம.அரவிந்த்