Published:Updated:

யூரியா தேவையில்லை... சிறுநீரே போதும்! - மத்திய அமைச்சரின் அனுபவ பாடம்!

யூரியா தேவையில்லை... சிறுநீரே போதும்! - மத்திய அமைச்சரின் அனுபவ பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
News
யூரியா தேவையில்லை... சிறுநீரே போதும்! - மத்திய அமைச்சரின் அனுபவ பாடம்!

ஆலோசனை

காராஷ்டிர மாநிலம், நாக்பூரில் சமீபத்தில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “நமது நாட்டில் மனிதர்களின் சிறுநீரைச் சேமிக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சிறுநீரைச் சேமித்து வைக்குமாறு சொல்லி வருகிறேன். விவசாய நிலங்களில் யூரியாவுக்குப் பதிலாகச் சிறுநீரைப் பயன்படுத்தலாம். சிறுநீரில் நைட்ரஜன் மற்றும் அம்மோனியம் சல்பேட் ஆகியவை உள்ளன. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு... வெளிநாடுகளிலிருந்து யூரியாவை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். சிறுநீரைப் பயன்படுத்த தொடங்கிவிட்டால், யூரியா இறக்குமதி செய்ய வேண்டிய தேவையிருக்காது” என்று பேசியுள்ளார்.

யூரியா தேவையில்லை... சிறுநீரே போதும்! - மத்திய அமைச்சரின் அனுபவ பாடம்!

மனித சிறுநீரின் மகத்துவம் குறித்து இவர் ஏற்கெனவே பேசிய கருத்துகள் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தன. அதுகுறித்துக் கடந்த 25.05.2015-ஆம் தேதியிட்ட இதழில், ‘மனித சிறுநீரில் மரம் வளர்க்கிறேன்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

கடந்த 10.09.2008-ஆம் தேதியிட்ட இதழிலேயே, ‘நீங்களும் ஓர் உரத் தொழிற்சாலைதான்’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதில், திருச்சி மாவட்டம் முசிறியில் மனிதக்கழிவுகளை உரமாகப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கம்போஸ்ட் கழிவறைகள் குறித்துப் பதிவு செய்திருந்தோம். அவற்றை உருவாக்கிய ஸ்கோப் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சுப்புராமனிடம் நிதின் கட்கரியின் உரைகுறித்துப் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
யூரியா தேவையில்லை... சிறுநீரே போதும்! - மத்திய அமைச்சரின் அனுபவ பாடம்!

“ஒரு மத்திய அமைச்சராகப் பொறுப்பிலிருப்பவர் இதுகுறித்து வலியுறுத்துவது, விவசாயிகளிடம் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். அவர் பேசியிருக்கும் விஷயம், நாட்டுக்கு அவசியமானது, ஆரோக்கியமானது.

மனிதக் கழிவுகளை உரமாகப் பயன்படுத்தும் பழக்கம், பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கு வழக்கத்திலிருந்ததுதான் என்றாலும்... அதை அருவருப்பாகப் பார்க்கும் மனநிலைதான் உள்ளது. இந்த மனநிலை மாற வேண்டும். சிறுநீர், மலம், கழுவும் நீர் ஆகியவை ஒன்றாகக் கலப்பதால்தான் துர்நாற்றமும், கொடிய கிருமிகளும் உருவாகின்றன. இவற்றைத் தனித்தனியாகப் பிரித்துவிட்டால் துர்நாற்றம் இருக்காது. கிருமிகள் உருவாகாது. நாங்கள் உருவாக்கியுள்ள கம்போஸ்ட் கழிவறைகளை நேரில் பார்த்தவர்கள் இதை உணர்ந்து கொள்கிறார்கள்.

யூரியா தேவையில்லை... சிறுநீரே போதும்! - மத்திய அமைச்சரின் அனுபவ பாடம்!

நாங்கள் உருவாக்கியுள்ள கம்போஸ்ட் கழிவறைகளைப் பார்த்து... ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் கம்போஸ்ட் கழிவறைகளை அமைத்துள்ளார்கள். இதை, ‘சூழல் மேம்பாட்டுச் சுகாதாரக் கழிவறைகள்’ என்று அழைக்கிறோம். சிறுநீரையும், மட்கிய மலத்தையும் எருவாகப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இதன் மகத்துவம் தெரியும். சிறுநீர் உரத்தில் நைட்ரஜன், பொட்டாஷ், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. பயிர்களுக்கு இதை உரமாகக் கொடுத்தால், பயிர்கள் நன்கு ஊட்டமாக வளரும்.

இது கிருமி நாசினியாகவும் பலன் கொடுக்கும். பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் தென்பட்டால்... 250 லிட்டர் தண்ணீரில் 25 லிட்டர் சிறுநீரைக் கலந்து தெளித்தால், அடுத்த ஒரு வாரத்துக்குள் பலன் தெரியும். சிறுநீரை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். நான் பத்து ஆண்டுகளுக்கு மேலாக எனது வீட்டுத்தோட்டம் மற்றும் ஆறு ஏக்கர் பரப்பில் பயிர் செய்துள்ள நெல், வாழை போன்றவற்றுக்குச் சிறுநீரைத்தான் இடுபொருளாகப் பயன்படுத்தி வருகிறேன்.

யூரியா தேவையில்லை... சிறுநீரே போதும்! - மத்திய அமைச்சரின் அனுபவ பாடம்!

சிறுநீரைப் பயன்படுத்தினால் விளைபொருளில் துர்நாற்றம் இருக்குமா என்று சிலர் கேட்பார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. சிறுநீர் உரத்தால் எந்தத் தீங்குமில்லை. மனித உடலிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுநீரை மறுநாளிலிருந்தே பயன்படுத்தலாம். அதிகபட்சம் 25 நாள்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அதற்கு மேல் சிறுநீர் கறுப்பு நிறத்துக்கு மாறித் துர்நாற்றம் வீசும்” என்ற சுப்புராமன் நிறைவாக,

“தற்போது, ஐ.ஐ.டி மாணவர்களுடன் இணைந்து சிறுநீரை ‘பவுடர்’ நிலைக்கு மாற்றி, நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளோம். சிறுநீரோடு 10 சதவிகித உப்பளக் கழிவுநீரைக் கலந்தால், சிறுநீரின் சத்துகள் கீழே கசடுகளாகத் தங்கிவிடும். பிறகு தண்ணீரை வடிகட்டி, கசடுகளை வெயிலில் உலர்த்தினால், சிறுநீர் பவுடர் கிடைக்கும். இதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறுநீரைச் சேகரிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க மத்திய-மாநில அரசுகள் முன் வர வேண்டும். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளில் மட்டுமே ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் லிட்டர் சிறுநீர் வீணாகிறது. நாடு முழுவதும் நாள்தோறும் கோடிக்கான லிட்டர் சிறுநீர் உரம் வீணடிக்கப்படுகிறது. கம்போஸ்ட் கழிவறைகள் கட்ட மத்திய அரசு ஒரு கழிவறைக்கு 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இதைக் கிராமப்புற மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மத்திய அரசு மானியம் வழங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், சிறுநீர் சேமிப்பு வங்கி மற்றும் சிறுநீர் பவுடர் தயாரிப்பதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும்” என்றார்.

தொடர்புக்கு, சுப்புராமன், செல்போன்: 94431 67190

கு.ராமகிருஷ்ணன்

மலமும் உரம்தான்!

“சி
றுநீர் மட்டுமல்ல, மட்கிய மலமும் சிறந்த உரம்தான். மலத்தில் 80 சதவிகிதம் நீர் இருக்கிறது. இது உலர்ந்து மட்குவதற்கு 6 மாதங்கள் ஆகும். கம்போஸ்ட் கழிவறைகள் மூலம் சேமிக்கக்கூடிய மலத்தை ஓர் ஆண்டுக்குப் பிறகு கையில் எடுத்துப் பார்த்தால் நன்கு மட்கி, பொலபொலப்பாக மண்புழு உரம்போல் இருக்கும். கொஞ்சம்கூட அருவருப்பு தோன்றாது. துர்நாற்றமும் வீசாது. ஏக்கருக்கு 1 டன் மட்கிய மல உரத்தை அடியுரமாகப் பயன்படுத்தலாம்” என்கிறார், சுப்புராமன்.