Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்பு

தண்டோரா

அறிவிப்பு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

தண்டோரா

இலவசப் பயிற்சிகள்

நாட்டுக்கோழி வளர்ப்பு


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப்  பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 24-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 26-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: தொலைபேசி: 0452 2483903.


அசோலா வளர்ப்பு


சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் ‘அசோலா மற்றும் ஹைட்ரோஃபோனிக்ஸ் தீவனப் பயிர் வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408.


கறவைமாடு வளர்ப்பு


கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 15-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’, 23-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 25-ம் தேதி ‘மதிப்பூட்டிய பால் பொருள்கள்’, 29-ம் தேதி ‘காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

இறால் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 21, 22-ம் தேதிகளில் ‘பசுந்தீவனச் சாகுபடியில் மண் மற்றும் பயிர் மேலாண்மை முறைகள்’, 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ‘கைவினைப் பொருள்கள் தயாரித்தல்’, 23, 24-ம் தேதிகளில் ‘உவர்நீர் இறால் வளர்ப்பு’, 29, 30-ம் தேதிகளில் ‘கால்நடை மற்றும்  மீன் பண்ணைகளுக்கேற்ற கருவிகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371

செம்மரம் வளர்ப்பு


சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஏப்ரல் 23-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘செம்மரம் வளர்ப்பு’, 25-ம் தேதி ‘கோடைக்காலத்தில் கால்நடைப் பராமரிப்பு’, 30-ம் தேதி ‘மானாவாரி பயிர்ச் சாகுபடித் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.

பசுமைக் குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கட்டணப் பயிற்சிகள்

சிப்பிக் காளான் வளர்ப்பு


சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏப்ரல் 22-ம் தேதி ‘மா  மதிப்புக்கூட்டல்’, 30-ம் தேதி ‘எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’ பயிற்சி இலவசப் பயிற்சியாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

ஏப்ரல் 19-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 23-ம் தேதி ‘மூலிகைகள் மதிப்புக் கூட்டுதல்’, 25-ம் தேதி ‘ஆடுகளைத் தாக்கும் நோய்களுக்கு எதிரான மூலிகை மருத்துவம்’, 26-ம் தேதி ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

மாடித்தோட்டம்


கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஏப்ரல் 27-ம் தேதி ‘மாடித்தோட்டம்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296

காளான் வளர்ப்பு


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மைராடா வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 25-ம் தேதி ‘நவீன முறையில் மாடித்தோட்டம் அமைத்தல்’, 26-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு தொழில்நுட்பம்’, 29-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.150. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626


ஒருங்கிணைந்த பண்ணை 


புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சி பண்ணையில் ஏப்ரல் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு.  முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.

தொடர்புக்கு: தொலைபேசி: 0431 2331879, 98424 33187.

அறிவிப்பு

‘த
ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism