Published:Updated:

காலத்தின் கட்டாயமே!

காலத்தின் கட்டாயமே!
பிரீமியம் ஸ்டோரி
காலத்தின் கட்டாயமே!

காலத்தின் கட்டாயமே!

காலத்தின் கட்டாயமே!

காலத்தின் கட்டாயமே!

Published:Updated:
காலத்தின் கட்டாயமே!
பிரீமியம் ஸ்டோரி
காலத்தின் கட்டாயமே!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு’

- என நீரின் அருமையையும் மழையின் பயனையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகச் சொல்லியுள்ளார் திருவள்ளுவர். அந்தக் காலங்களில் குடிப்பதற்கு ஒரு குளம், குளிப்பதற்கு ஒரு குளம், கால்நடைகளுக்குத் தனிக்குளம், கோயிலுக்குத் தெப்பக்குளம் என நீரைப் பல வழிகளில் பக்குவமாகச் சேமித்துப் பயன்படுத்தினார்கள். மழைநீர் மட்டுமே, முக்கியமான நீராதாரம் என்பதால், மண்ணில் விழும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும், ‘உயிர் நீர்’ என்றே அவர்கள் மதித்தனர்.

ஏரி, குளம், ஆறுகள்... அருகிவரும் இந்தக் காலகட்டத்தில், விவசாய நிலங்களிலும் மழைநீரை அறுவடை செய்வதை நாம் பின்பற்ற வேண்டும். ‘மானாவாரி நிலங்களில் மழைநீரை அறுவடை செய்ய, நிலத்தின் வரப்புகளை உயர்த்தி அமையுங்கள். மற்ற நிலங்களில் இடத்தைப் பொறுத்துப் பண்ணைக்குட்டை போன்றவற்றை அமையுங்கள்’ என்று நீரியல் நிபுணர்கள் சொல்கின்றனர். ஒட்டுமொத்தமாக அனைத்து விவசாயிகளும் இதையெல்லாம் பின்பற்றும்போது, அந்தந்த வட்டாரத்தில் உள்ள அனைவருக்குமே பலன் தருவதாக இருக்கும். அதாவது, வறண்ட நிலங்களிலும் பசுமைப் படரத் தொடங்கும். சமஉயர வரப்புகள் மூலம் நிலத்தின் சத்து நிறைந்த வளமான மேல்மண், மழைநீரில் அடித்துச் செல்லாமல் பாதுகாக்கப்படும். கரைகளில் வெட்டிவேர் நடவு செய்தால் வரப்பும் பலமாகும், வருமானமும் கிடைக்கும். பயிரின் மகசூலும் அற்புதமாகக் கிடைக்கத் தொடங்கும்.

ஆக, மழைநீர் அறுவடை என்பது காலத்தின் கட்டாயம். இதை ஊக்குவிக்கும் வகையில், பண்ணைக்குட்டைக்கு வழங்குவதுபோலவே, சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி மானியம் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும். இதுவும் காலத்தின் கட்டாயமே!

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism