தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் கொடுத்திருப்பதில் அல்லது பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் முறைகேடுகள் நடந்திருந்தால்... அதுகுறித்த விவரங்களைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டுப் பெறுவது குறித்துக் கடந்த இதழில் பார்த்தோம். அப்படி வாங்கப்பட்ட தகவல்கள் மூலம் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்... புகார் செய்ய வேண்டிய அலுவலர்கள் மற்றும் புகார் செய்யும் விதம் குறித்துப் பார்ப்போம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அமையவிருக்கும் புதிய மத்திய அரசு விவசாயக்கடன்களைத் தள்ளுபடி செய்துவிடும் எனப் பலரும் நம்புகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில்... கடன் தள்ளுபடியாகி விடும் என்ற நம்பிக்கையில், போலியான பெயர்களில் கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அதனால், நாம் கவனமாகச் செயல்பட்டு, இந்த முறைகேட்டை வெளிக்கொண்டுவந்து தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வழிவகைச் செய்ய வேண்டும்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்மூலம் கூடுமானவரை நமது பெயரில் விண்ணப்பம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. நாம், நமது ஊரில் உள்ள வங்கி முறைகேடு குறித்து விசாரிக்கும்போது, நம் முகவரிமூலம் நம்மை அடையாளம் தெரிந்து நம்மிடம் சமாதானம் பேச முன்வரலாம். நாம் ஒப்புக்கொள்ளாவிடில் நண்பர்கள், உறவினர்கள்மூலம் நம்மிடம் சமாதானம் பேச வரலாம்.

சில சமயங்களில் மிரட்டல்கள்கூட இருக்கும். அதனால், நாம் நம் நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்க நேரலாம். அதனால், நமது பெயரில் விண்ணப்பம் செய்யாமல், வேறு மாவட்டங்களில் உள்ள நமது நண்பர்கள், உறவினர்கள் பெயரில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்பலாம். இதனால், எளிதில் அவர்களால் அடையாளம் காண முடியாது. அதேபோலப் பயிர்க்கடன், காப்பீடு போன்றவற்றில் நடந்துள்ள முறைகேடுகளை நீங்கள் கண்டுபிடித்து உறுதி செய்துவிட்டால்... புகார் செய்யும்போதும் உங்கள் பெயரில் புகார் மனு அளிக்க வேண்டாம். அதுவும் சமாதானம் பேச வழிவகுத்து விடும்.

இதுபோல விண்ணப்பம் செய்யவோ, புகார் செய்யவோ உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் ஒத்துழைக்கவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம். எங்கள் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் நாங்கள் உங்களுக்காகப் புகார் செய்கிறோம். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து... மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர், மாவட்ட ஆட்சியர், சென்னையில் உள்ள மாநிலக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், கூட்டுறவுத் துறை செயலாளர் ஆகியோரிடம் ஆதாரங்களுடன் புகார் செய்ய வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நடந்த முறைகேடுகள் குறித்துச் சம்பந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளர், பொது மேலாளர், தலைமை அலுவலக அதிகாரிகள் ஆகியோரிடம் ஆதாரங்களுடன் புகார் செய்ய வேண்டும். அடுத்த இதழில் மானியங்கள் குறித்துப் பார்ப்போம்.

-வழிகாட்டல் தொடரும்

மாதிரிக் கடிதம்

அனுப்புநர்:

மோ.க.காந்தி,
42/3 மேற்கு அவென்யூ,
காமராஜ் நகர்,
சென்னை -600 045

பெறுநர்:

மாவட்டக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருவாரூர்- 610 001

பொருள்: திருவாரூர் மாவட்டம், மாங்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் விவசாயக் கடன் வழங்கியது மற்றும் பயிர்க் காப்பீடு செய்தது ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரித்துச் சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி…

ஐயா,

திருவாரூர் மாவட்டம், மாங்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் விவசாயிகள் அல்லாதவர்களான மாதவன் (வரிசை எண் 72), வைத்தியநாதன் (வரிசை எண் 140), செந்தில் (வரிசை எண் 198), சரோஜா (வரிசை எண் 214) உள்ளிட்ட 84 பேருக்கு மொத்தம் 36,00,000 ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் போலி ஆவணங்கள்மூலம் முருகானந்தம் (வரிசை எண் 54), தங்கராசு (வரிசை எண் 94), செல்லம்மாள் (வரிசை எண் 274) உள்ளிட்ட 117 விவசாயிகளின் பேரில் 68,00,000 ரூபாய் விவசாயக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த 117 பேரும் விவசாயக்கடன் கேட்டு விண்ணப்பமே செய்யாமல் அவர்களது பெயரில் கடன் கொடுத்ததாகக் கணக்குக் காட்டப்பட்டு, விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாளர், ஊழியர்கள், தலைவர் ஆகியோர் துணையோடு 1,04,00,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரமாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவலின் நகலை இணைத்துள்ளேன். உரிய விசாரணை செய்து, இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இதன்மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

இணைப்பு: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவலின் நகல்.

இப்படிக்கு,

மோ.க.காந்தி.

இதே கடிதத்தைப் பெறுநர் முகவரியை மட்டும் மாற்றி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மற்ற அதிகாரிகளுக்கும் அனுப்ப வேண்டும்.

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரிகள்:

அரசு முதன்மைச் செயலாளர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, புனித ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகம், சென்னை-600009. இமெயில்: tnfoodsecretary@gmail.com தொலைபேசி எண்: 044 25672224

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், என்.வி.நடராஜன் மாளிகை, 170, பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-600010. தொலைபேசி எண்: 044 28364848