Published:Updated:

கஜா நிவாரணம்... ஏமாற்றும் அதிகாரிகள்..? - தவிப்பில் விவசாயிகள்!

கஜா நிவாரணம்... ஏமாற்றும் அதிகாரிகள்..? - தவிப்பில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
கஜா நிவாரணம்... ஏமாற்றும் அதிகாரிகள்..? - தவிப்பில் விவசாயிகள்!

பிரச்னை

கஜா நிவாரணம்... ஏமாற்றும் அதிகாரிகள்..? - தவிப்பில் விவசாயிகள்!

பிரச்னை

Published:Updated:
கஜா நிவாரணம்... ஏமாற்றும் அதிகாரிகள்..? - தவிப்பில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
கஜா நிவாரணம்... ஏமாற்றும் அதிகாரிகள்..? - தவிப்பில் விவசாயிகள்!

‘‘கஜா புயலினால் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளில் பலருக்கு இன்று வரையிலும் இழப்பீடு உள்ளிட்ட நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்க வில்லை. நிவாரண நிதி வழங்குவதிலும் ஊழல்கள் நடக்கின்றன” எனக் குற்றம் சாட்டுகிறார்கள், புயலால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள்.

கஜா நிவாரணம்... ஏமாற்றும் அதிகாரிகள்..? - தவிப்பில் விவசாயிகள்!

இப்பிரச்னை குறித்து நம்மிடம் பேசிய தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி வீரசேனன், “கஜா புயல் நிவாரணம் கொடுத்தது சம்பந்தமா தகவல் அறியும் உரிமை சட்டத்துல வேளாண்மைத்துறைகிட்டயும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துகிட்டயும் சில விவரங்களைக் கேட்டிருந்தேன்.

அதுல தஞ்சாவூர் மாவட்டத்துல 45 லட்சம் மரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பதில் கொடுத்தாங்க. இது தவறான கணக்கெடுப்பு. இங்க ஒரு கோடி தென்னை மரங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுருக்கு. விழுந்து கிடந்த மரங்களை நேரில் கணக்கெடுக்காம, அடங்கல் ஆவணத்தின்படி தென்னந்தோப்புல உள்ள மரங்களை மட்டுமே கணக்கில் எடுத்துருக்காங்க. டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை நெல் வயலின் வரப்புகள்லயே லட்சக்கணக்கான தென்னை மரங்கள் இருந்துச்சு. விவசாயிகளுக்கு இதுவும் முக்கியமான வாழ்வாதாரம். ஆனா, அதையெல்லாம் கணக்குல சேர்க்காம விட்டுட்டாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கஜா நிவாரணம்... ஏமாற்றும் அதிகாரிகள்..? - தவிப்பில் விவசாயிகள்!

வேளாண்மைத்துறையின் பரிந்துரைப்படி ஒரு ஹெக்டேருக்கு 175 மரங்கள்னு கணக்கு பண்ணிருக்காங்க. ஆனா, பெரும்பாலான விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு 200 மரங்கள்வரை நடவு செஞ்சுருந்தாங்க. அதனாலயும் சரியான அளவுக்கு இழப்பீடு கிடைக்கலை. அரசு கணக்கெடுப்பின்படி சொல்ற 45 லட்சம் மரங்களுக்கும்கூட இதுவரை முழுமையா நிவாரணம் கொடுக்கலை. வட்டாரம் வாரியாகப் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களோட எண்ணிக்கை, எத்தனை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதில் தராம, ‘விடுபட்ட விவசாயிகள் கணக்கெடுப்பு நடக்குது’னு பதில் சொல்லிருக்காங்க.

அதுவும் பொய்யான தகவல். மீண்டும் கணக்கெடுப்பு செய்றதா இருந்தால், அதை வெளிப்படையா அறிவிச்சிருக்கணும். விடுபட்ட விவசாயிகளை மனு கொடுக்கச் சொல்லியிருக்கணும். அதெல்லாம் இல்லாம எப்படிக் கணக்கெடுப்பாங்கனு தெரியலை.நிவாரண நிதியில் நிறையப் பணம் விவசாயிகளாகவே இல்லாத ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கு முறைகேடா வழங்கப் பட்டிருக்கு. அதனாலதான், யார் யாருக்கு நிவாரணம் கொடுத்திருக்காங்கங்கிற விவரத்தை வெளியிட மறுக்குறாங்க. ஒரு மரத்துக்கு இழப்பீட்டுத்தொகை 600 ரூபாய், அகற்றுவதற்கான தொகை 500 ரூபாய்னு மொத்தம் 1,100 ரூபாய்னு அறிவிச்சாங்க. அந்த வகையில விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய பணத்துல கோடிக்கணக்கான ரூபாயைக் கையாடல் பண்ணிருக்காங்க.

அதேமாதிரி சீக்கிரம் காய்ப்புக்கு வரக்கூடிய ஒட்டுரகத் தென்னங்கன்றுகளைக் கேட்டுக் கோரிக்கை வெச்சுருந்தோம். ஆனா, 50 ரூபாய் மதிப்பிலான நெட்டை ரகக் கன்றுகளைத்தான் கொடுக்குறாங்க. இது பலன் கொடுக்க 9 வருஷங்கள் ஆகும். அதேபோல கஜா புயல் பாதிப்புச் சிறப்புத் தொகுப்பு திட்டத்துல 20 கிலோ விதை உளுந்து, ரசாயன உரம் உள்ளிட்ட பொருள்கள் கொடுக்கப்படும்னு தமிழக அரசு அறிவித்தது. இதன் மொத்த மதிப்பு நாலாயிரம் ரூபாய்னு சொன்னாங்க. அதுலயும் எந்தப்பொருளும் தரமா இல்லை. இந்தப்பணத்தை நேரடியாகக் கொடுத்தாக் கூடத் தேவையான பொருள்களை விவசாயிகளே வாங்கிக்குவாங்க” என்றார்.

தஞ்சாவூர் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் ஜஸ்டீனிடம் இதுகுறித்துக் கேட்டோம். “நிவாரணம் வழங்குவதில் எந்தக் குளறுபடியும் இல்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இதுவரை 398 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பெரும்பாலானோருக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டுவிட்டது.

வங்கிக் கணக்கு எண், பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இல்லாத விவசாயிகளுக்கு மின்னணு பரிவர்த்தனையில் இழப்பீடு தொகை கிடைப்பதில் சில இடர்ப்பாடுகள் உள்ளன. இதுபோன்ற விவசாயிகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவுதான். இது சரிசெய்யப்பட்டு, இவர்களுக்கும் விரைவில் இழப்பீடு வழங்கப்பட்டுவிடும்.

போர்வெல் வைத்திருக்கும் தென்னை விவசாயிகள் சித்திரைப் பட்டத்தில் உளுந்துச் சாகுபடி செய்வது வழக்கம் என்பதால்தான் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் தரமான விதை உளுந்து உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என்றார்.

கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism