Published:Updated:

உருளைக்கிழங்கு வழக்கு… வெகுண்ட விவசாயிகள் அடிபணிந்த பெப்சி!

உருளைக்கிழங்கு வழக்கு… வெகுண்ட விவசாயிகள் அடிபணிந்த பெப்சி!
பிரீமியம் ஸ்டோரி
உருளைக்கிழங்கு வழக்கு… வெகுண்ட விவசாயிகள் அடிபணிந்த பெப்சி!

பிரச்னை

உருளைக்கிழங்கு வழக்கு… வெகுண்ட விவசாயிகள் அடிபணிந்த பெப்சி!

பிரச்னை

Published:Updated:
உருளைக்கிழங்கு வழக்கு… வெகுண்ட விவசாயிகள் அடிபணிந்த பெப்சி!
பிரீமியம் ஸ்டோரி
உருளைக்கிழங்கு வழக்கு… வெகுண்ட விவசாயிகள் அடிபணிந்த பெப்சி!

விவசாயிகள் விதை உரிமையை விட்டுவிடக் கூடாது. பாரம்பர்ய விதைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ‘விதைகளே பேராயுதம்’ என்று அடிக்கடி சொல்வார், நம்மாழ்வார். அந்த ஆயுதத்தை விவசாயிகள் மீதே பிரயோகித்து இருக்கிறது, பன்னாட்டு நிறுவனமான பெப்சி. 

உருளைக்கிழங்கு வழக்கு… வெகுண்ட விவசாயிகள் அடிபணிந்த பெப்சி!

‘பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம்’ (Protection of Plant Varieties and Farmers Rights Act- PPV&FR) என்ற சட்டம் இயற்றப்பட்டபோது, இச்சட்டம், விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்படும் சட்டம் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதே சட்டம், விவசாயிகள்மீது பாய்ந்திருப்பதுதான் வேதனை.

அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சி நிறுவனம், ‘லேஸ்’ (Lays) என்ற பெயரில் உருளைக்கிழங்கு சிப்ஸ்களைத் தயாரித்துச் சந்தைப்படுத்தி வருகிறது. தங்கள் தேவைக்காக, எஃப்.சி-5 (FC-5) என்ற பெயரில் ஓர் உருளைக்கிழங்கு ரகத்தை உருவாக்கியிருக்கிறது, பெப்சி. கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து இந்த ரகம் உபயோகத்திலிருந்தாலும் கடந்த 2011-ஆம் ஆண்டுதான் இந்த ரகத்துக்குக் காப்புரிமை பெற்றது, பெப்சி. இந்த ரக விதைகளை ஒப்பந்த அடிப்படையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்குக் கொடுத்துச் சாகுபடி செய்ய வைத்து உருளைக்கிழங்குகளைக் கொள்முதல் செய்து வருகிறது, பெப்சி.

இந்நிலையில், ‘நாங்கள் காப்புரிமை பெற்றுள்ள உருளைக்கிழங்கு ரகத்தை, எங்கள் அனுமதி இல்லாமல் விளைவித்துள்ளார்கள். இதற்காக, ஒவ்வொரு விவசாயியும் 1.05 கோடி ரூபாயை நஷ்டஈடாக வழங்க வேண்டும்’ என ஒன்பது விவசாயிகள்மீது, அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது, பெப்சி நிறுவனம். பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டப்படி… குறிப்பிட்ட ரகத்துக்குக் காப்புரிமை பெற்றவர்கள், அந்த ரகத்தை விளைவித்து விற்பனை செய்து கொள்ளலாம்.

ஆனால், பிராண்டு பெயரில் விதைகளை விற்பனை செய்யக் கூடாது. இந்தச் சட்டத்தின் 64–ஆம் பிரிவின்படி வழக்குத் தொடுத்துள்ளது, பெப்சி. அதே சட்டத்தின் 39-ஆம் பிரிவு, ‘ஒரு விவசாயி தனது நிலத்தில் விளையும் பயிரை, பயன்படுத்திக்கொள்ளவோ, பரிமாறிக்கொள்ளவோ, விற்பனை செய்யவோ உரிமை உள்ளது’ என்கிறது. இந்திய விவசாயிகள்மீது ஒரு பன்னாட்டு நிறுவனம் வழக்குத் தொடுத்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்குப் பல விவசாயச் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. பல்வேறு மாநிலங்களில் பெப்சியின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் எனப் போராட்டங்கள் வெடித்தன. தேர்தல் நேரம் என்பதால் தேசிய கட்சிகளும் விவசாயிகள் பக்கம் நின்றன. விவசாயிகள், நுகர்வோர், அரசாங்கம் என மும்முனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத பெப்சி, வழக்கை வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளது.

‘‘வழக்கில் சேர்க்கப்பட்ட விவசாயிகள், பெப்சிக்குப் போட்டியாக உள்ள வேறுசில சிப்ஸ் நிறுவனங்களுக்குத் தங்களது உருளைக்கிழங்குகளை விற்பனை செய்பவர்கள். அதனால், பெப்சி நிறுவனமே தங்கள் ஆட்கள் மூலமாக, இந்த விவசாயிகளுக்கு எஃப்.சி-5 ரக விதைக் கிழங்குகளைக் கொடுத்துச் சாகுபடி செய்ய வைத்து, சிக்க வைத்துள்ளது.

இந்த வழக்குமூலம் விவசாயிகளை மிரட்டித் தங்கள் பக்கம் இழுத்து போட்டி நிறுவனங்களை ஒழிப்பதுதான் பெப்சியின் நோக்கம். அதற்கு விவசாயிகளைப் பகடைக்காய் ஆக்குகிறது, பெப்சி’’ என்கிறார்கள், குஜராத் விவசாயிகள்.

ஆர்.குமரேசன்

மற்றொரு வில்லங்கம்!

ரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்திரிக்காய் இந்தியாவில் நுழையக் கூடாது எனப் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் நடத்தினார்கள். அதன் விளைவாக 2010-ஆம் ஆண்டு இந்தியாவில் பி.டி. கத்திரிக்காய்க்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் பாடேஹாபாத் மாவட்டத்தில் ஒரு விவசாயி பி.டி. கத்திரிக்காய் சாகுபடி செய்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. பன்னாட்டு நிறுவனமான மான்சான்்டோ, இதன் பின்னணியில் உள்ளது. இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகளிடம் நாற்றைக்கொடுத்து நடவுசெய்யச் சொல்லியுள்ளார்கள். சட்டவிரோதமாகப் பி.டி. கத்திரிக்காயை நுழைத்து, அதற்கு அனுமதி வாங்க முயற்சி செய்கிறார்கள்’ எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘‘இந்திய விவசாயம், கார்ப்பரேட்கள் கையில்தான் இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நமது பாரம்பர்ய விதைகளையும், விவசாய முறைகளையும் முன்னெடுக்க வேண்டும்’’ என்று குரல் கொடுத்து வருகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism