Published:Updated:

பசுமைக்கு முதலிடம்!

பசுமைக்கு முதலிடம்!
பிரீமியம் ஸ்டோரி
பசுமைக்கு முதலிடம்!

பசுமைக்கு முதலிடம்!

பசுமைக்கு முதலிடம்!

பசுமைக்கு முதலிடம்!

Published:Updated:
பசுமைக்கு முதலிடம்!
பிரீமியம் ஸ்டோரி
பசுமைக்கு முதலிடம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

ங்களின் அன்பான அரவணைப்பால், இதழியல் பயணத்தில் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது உங்கள் பசுமை விகடன். ஆம், ஒவ்வோராண்டும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. 2017-ஆம் ஆண்டில் 5,99,000 வாசகர்கள் பசுமை விகடனை விரும்பி வாசித்துப் பயன்பெற்று வந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 8,27,000 என்று உயர்ந்திருக்கிறது. அதாவது, இரண்டு லட்சத்துக்கும் மேலான வாசகர்கள் அதிகரித்துள்ளனர்.

இந்தியாவில், தமிழ் மொழியில் மாதமிருமுறை வெளியாகும் இதழ்களில் 38% அளவுக்கு வாசிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து, முதலிடத்தைப் பெற்றுள்ளது உங்களின் பசுமை விகடன். சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘ஐ.ஆர்.எஸ்’ (Indian Readership Survey -2019 (Q1) ஆய்வறிக்கை முடிவுகள், இதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இந்த பிரமாண்ட வளர்ச்சியானது... மண்ணின் மீதும், விவசாயத்தின் மீதும் நம் தமிழ் மக்களுக்கு இருக்கும் பேரன்பை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. முன்னோடி விவசாயிகள் தொடங்கி, இயற்கை விவசாயம் செய்வதற்காக புதிதாகக் களமிறங்கும் இளைஞர்கள் வரை, பசுமை விகடனைத் தங்களின் தோழனாகவே பார்ப்பதால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.

டிஜிட்டல் தேடல் நிறைந்த இன்றைய காலகட்டத்திலும், அச்சு இதழை ஆர்வமுடன் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, பசுமை விகடனின் வளர்ச்சியை மட்டும் காட்டவில்லை. தமிழ்நாட்டின் விவசாயம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதையும் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

பசுமை விகடன் மீது வாசகர்கள் வைத்திருக்கும் இத்தகைய நம்பிக்கையானது... ‘இன்னும், இன்னும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பாடுபட வேண்டும்’ என்கிற உந்துதலை எங்களுக்குள் விதைத்துள்ளது.

தொடரட்டும் உங்களின் ஆதரவு... இணைந்தே இருப்போம் ஓர் இயக்கமாக!

-ஆசிரியர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism