Published:Updated:

உலக உழவு

உலக உழவு
பிரீமியம் ஸ்டோரி
உலக உழவு

உலக உழவு

உலக உழவு

உலக உழவு

Published:Updated:
உலக உழவு
பிரீமியம் ஸ்டோரி
உலக உழவு
உலக உழவு

 மிசோரம் மாநிலத்திலும் படைப்புழு...

உலக உழவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிழ்நாட்டு மக்காச்சோள விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய படைப்புழு, தற்போது மிசோரம் மாநிலத்துக்குப் படையெடுத்துள்ளது. இப்புழு மிசோரம் மாநிலத்தில், 1,745 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களைத் தாக்கி 20 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் 122 கிராமங்களில் இப்புழுக்களின் தாக்குதல் உள்ளது. கடந்த மார்ச் 8-ஆம் தேதி ‘லுங்லேய்’ என்ற இடத்தில்தான் இப்புழுவை முதன்முதலாகக் கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் ஆராய்ச்சிகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 தக்காளிச் செடிகளைத் தாக்கும் பூச்சி...

உலக உழவு

பெங்களூருவில் உள்ள இந்தியத் தோட்டக்கலைத் துறை ஆராய்ச்சி மையத்தில் தக்காளிச் செடிகளைத்தாக்கும் புதிய பூச்சி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். அந்தப் பூச்சியின் பெயர் ‘ட்யூட்டா அப்சலூட்டா’ (Tuta Absoluta). இதன் புழு, தக்காளிப் பழம் மற்றும் அதன் இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சுகிறது. தெற்கு அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இப்பூச்சி, தக்காளி மட்டுமின்றிக் கிழங்கு குடும்பத் தாவரங்களையும் தாக்கக்கூடியது. இப்பூச்சியைக் கடந்த 2014-ஆம் ஆண்டே கண்டறிந்தனர். ஆனால், தாக்குதல் பெரியளவில் இல்லை. தற்போது கர்நாடகா மாநிலத்தில் இதன் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பரவி வருகிறது. இப்பூச்சிகள் தாக்கினால், முழு மகசூலும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையில்தான் இதைக் கட்டுப்படுத்த முடியும்.

 வேளாண் அமைச்சர்களின் ஜி-20 மாநாடு

உலக உழவு

ஜி-20 அமைப்பில் உள்ள 20 நாடுகளைச் சேர்ந்த விவசாயத்துறை அமைச்சர்கள் கூடி, வேளாண் வளர்ச்சி பற்றி விவாதித்துள்ளனர். உலக அளவில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு உணவளிக்க, விவசாயம் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். அதற்குப் புதிய தொழில்நுட்பங்களின் உதவி மிகவும் இன்றியமையாதது என்று இந்த மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவசாயச் சுங்க வரிக் குறைப்புத் தோல்வியில் முடிந்தது. அதைப்பற்றி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜப்பான் செல்ல உள்ளார். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்ய தானியங்கி டிராக்டர், டிரோன் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும் எனவும் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 மத்தியப் பிரதேசத்தில் அவகாடோ

உலக உழவு

த்தியப் பிரதேச மாநிலம், போபாலுக்கு அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஹர்ஷித். தனது மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்று படித்துள்ளார். அங்கு, அவர் அவகாடோ பழங்களை அதிக அளவில் சாப்பிட்டுப் பழகியிருக்கிறார். அவகாடோ, ஹார்மோன்களைச் சீர்படுத்திக் கெட்ட கொழுப்புச்சத்தைக் குறைக்கும் திறன் உடையது. படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ஹர்ஷித்துக்கு அவகாடோ பழம் போதுமான அளவு கிடைக்கவில்லை. மேலும், அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது.

தொடர்ந்து அவர் இஸ்ரேல் நாட்டுக்குச் சென்று அவகாடோ சாகுபடி குறித்துப் பயிற்சி எடுத்துக் கொண்டு… தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் அதைச் சாகுபடி செய்து வருகிறார். “இதுபோன்ற அதிக தேவையுள்ள வெளிநாட்டுப் பழங்களை இந்தியாவில் விளைவிப்பதன் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும்” என்கிறார், ஹர்ஷித்.