Published:Updated:

நீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா!

நீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா!
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா!

புறா பாண்டி; ஓவியம்: வேலு

நீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா!

புறா பாண்டி; ஓவியம்: வேலு

Published:Updated:
நீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா!
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா!

‘‘நெல் சாகுபடி செய்துள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும். அதற்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. பஞ்சகவ்யா தெளித்தால், வறட்சியைத் தடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். இதுகுறித்து விளக்கம் சொல்லவும்?’’

நீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா!

எம்.அரவிந்தன், மயிலம்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர் கே.நடராஜன் பதில் சொல்கிறார்.


‘‘பஞ்சகவ்யா பயிர் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, வறட்சியை வெல்லவும் பயன்படுகிறது. இதைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் நிரூபணம் செய்துள்ளனர். நமது இயற்கை விவசாயிகளும் களத்தில் இதை உறுதி செய்து வருகின்றனர். பஞ்சகவ்யாவைப் பயிரின் மேல் தெளித்தால், பெரிய இலைகளை உருவாக்கும். இலைகளின் மூலம் நடக்கும் ஒளிச்சேர்க்கையால் உயிரியல் திறன், கருத்தொகுப்பு அதிகளவு வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். இலைகள் மற்றும் தண்டுகளின் மேல் மெல்லியதாகச் சவ்வு போன்று உருவாகும். இதனால், நீர் ஆவி ஆகுதல் குறைந்துவிடும். செடிகளில் உருவாகும் ஆழமான மற்றும் விரிவான வேர்கள் வறண்ட காலங்களில் அதிகமான நாள்கள் தாங்கி நிற்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா!

இந்த இரண்டு காரணிகளும் 30 சதவிகித நீர்ப்பாசனத்தைக் குறைத்துவிடும். பஞ்சகவ்யா தெளிப்பதன் மூலம் 15 நாள்களுக்கு முன்னதாகவே அறுவடை செய்ய உதவும். இது காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களின் வாழ்வு காலத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் சுவையையும் அதிகப்படுத்தும். சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளைப் பகுதியைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் தலைவரான பொன்னையாவின் நிலத்திலும், இப்படித்தான் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. காய்கறிகள், நிலக்கடலை, நெல் ஆகிய பயிர்களுக்குப் பஞ்சகவ்யாவைத் தெளித்து, வறட்சியிலிருந்து தப்பித்தார். இவரது நிலத்தில் தொடர்ந்து பஞ்சகவ்யாவைத் தெளித்து வருவதால், ஆண்டுக்கு ஆண்டு மகசூல் அளவு அதிகரித்து வருவதையும் ஆவணப் படுத்தியுள்ளார். இந்தத் தகவல் ஆங்கில நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா!

வறட்சியில் வாடும் தென்னை மரங்களுக்கு மாதம் ஐம்பது லிட்டர் தண்ணீருடன், அரை லிட்டர் பஞ்சகவ்யா கலந்து பாசனம் செய்தார், ஒரு விவசாயி. அந்தப் பகுதியிலிருந்த தென்னை மரங்கள் கருகின. ஆனால், இவரது தென்னை மரங்கள் வறட்சியிலிருந்து தப்பித்துவிட்டன. இப்போதும், அந்த மரங்கள் நன்றாகக் காய்த்து வருகின்றன. உங்களின் நெல் பயிருக்கு, 15 நாள்களுக்கு ஒருமுறை பத்து லிட்டர் தண்ணீரில், 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து மாலை வேளையில் தெளித்து வரவும். நிச்சயமாக, வழக்கமாகக் கிடைப்பதைக் காட்டிலும், பாதி அளவுக்கு மகசூல் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.’’

தொடர்புக்கு, செல்போன்: 94433 58379.

‘‘இனக்கவர்ச்சிப் பொறியின் பயன்கள் பற்றிச் சொல்லுங்கள். எவ்வளவு நாள்களுக்கு ஒருமுறை அதை மாற்ற வேண்டும்?’’

கே.சிவகுமார், தேனி.

‘‘பூச்சிக்கொல்லித் தெளிக்கும் செலவினை வெகுவாகக் குறைக்கக் கூடியது, இனகவர்ச்சிப் பொறிகள். பூச்சிகளைக் கண்காணித்தல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. பயிர்களில் தோன்றும் பூச்சிகளைச் சரியான காலகட்டங்களில் கண்டறிந்தால் அவற்றினைக் கட்டுப்படுத்திவிட முடியும். பூச்சிகளைக் கண்காணிக்கப் பல முறைகள் மிகவும் எளிதாகக் கடைப்பிடிக்கப்பட்டாலும், அவற்றுள் இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்துவது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இனக்கவர்ச்சிப் பொறிகளில் பூச்சிகளைக் கவர்ந்திடும் இனக்கவர்ச்சி திரவம் பயன்படுத்தப்படுகிறது. இனக்கவர்ச்சி திரவம் என்பது பூச்சிகளால் சுரக்கப்படும் ஒருவகை வாசனை திரவமாகும். இவை பெரும்பாலும் ஆண் பூச்சிகளைக் கவர்ந்திட பெண் பூச்சிகளால் சுரக்கப்பட்டு வெளியிடப் படுகின்றது. இருப்பினும், தென்னையில் காணப்படும் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன்வண்டு போன்ற பூச்சிகளில் ஆண் மற்றும் பெண் இனங்கள் இரண்டும் இனக்கவர்ச்சி திரவத்தினைச் சுரக்கின்றன. இனக்கவர்ச்சி திரவம் ரப்பரினாலான, குப்பி (செப்டா) என்று சொல்லக்கூடிய சிறு உபகரணத்தினுள் வைக்கப்பட்டிருக்கும்.

இந்தக் குப்பிகளைப் பூச்சிக் கட்டுப்பாட்டிற்குப் பயன்படுத்தும்போதுதான் வெளியே எடுக்கவேண்டும். எனவே, அவைகளைக் குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும். ஒருவகை இனக்கவர்ச்சி திரவத்தால் ஒரு வகைப் பூச்சிகளை மட்டுமே கவர்ந்தழித்திட முடியும். எனவே, பூச்சிகளுக்குத் தகுந்தாற்போல் இனக்கவர்ச்சி திரவங்களைத் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனக்கவர்ச்சி திரவங்களை ஒரு குறிப்பிட்ட பயிரில் பயன்படுத்தும்போது கையுறை அணிய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனக்கவர்ச்சி திரவங்களைப் பூச்சிக் கண்காணிப்பிற்குப் பயன்படுத்தும்போது ஒன்றுக்கொன்று சுமார் 40 மீட்டர் இடைவெளித் தேவை. இனக்கவர்ச்சிப் பொறிகளை வயல்களில் வைத்தவுடன் குறியீடு செய்தல் அவசியம். இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயிர்களின் நுனியிலிருந்து சுமார் ஒரு அடி உயரத்தில் இருக்குமாறு பொருத்தவேண்டும்.

அமெக்கன் காய்ப்புழு, புகையிலை வெட்டும் புழு, கத்திரி குருத்து மற்றும் காய்ப்புழு, நெல் தண்டுத்துளைப்பான், வாழை கூன்வண்டு, தென்னை காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன்வண்டு, மா பழ ஈ. பந்தல் காய்கறிப்பழ ஈ... போன்ற பூச்சிகளை இனக்கவர்ச்சிப் பொறி மூலம் கட்டுப்படுத்தலாம். இதற்கான இனக்கவர்ச்சி திரவங்கள் கிடைக்கின்றன. ஒரு இனக்கவர்ச்சிப் பொறியின் வீரியம் 45 நாள்களுக்குத்தான் இருக்கும். பிறகு, அதன் தன்மை குறையத்தொடங்கும். இனக்கவர்ச்சிப் பொறி சம்பந்தமான கூடுதல் விவரங்களுக்கு, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், ‘வளம்குன்றா அங்கக வேளாண்மை துறையைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0422 6611206.

நீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா!

‘‘நோனிச் சாகுபடி செய்துள்ளோம். இதன் பழங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விரும்புகிறேன். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?’’
ஆர்.வைதேகி, பல்லடம்.

‘‘கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அவ்வப்போது, நோனிப் பழத்தை மதிப்புக்கூட்டும் தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. நோனி ஜாம், நோனி ஸ்குவாஸ், நோனி-திராட்சை ஸ்குவாஸ்... போன்ற பொருள்களைத் தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளக் கட்டணம் உண்டு. முன்பதிவு செய்து கொள்ளவும். ‘‘வெளிநாட்டிலிருந்து நோனி (பழச்சாறு) ஜூஸ் இறக்குமதி செய்கிறோம்’’ எனச் சில நிறுவனங்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றன. ஆனால், அவை நேரடியான பழச்சாறு அல்ல. நோனி பவுடரை இறக்குமதி செய்து, அதில் தண்ணீர் கலந்து விற்பனை செய்கிறார்கள். இதைக்காட்டிலும் நேரடியாகப் பயன்படுத்தும் பழச்சாறு பொருள்களில் மருத்துவக் குணம் அதிகம் உள்ளது என்பது கவனிக்கதக்கது.’’

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3.
செல்போன்: 94425 99125
தொலைபேசி: 0422 6611340

பஞ்சகவ்யா தயாரிப்பு!

தற்கு ஒன்பது பொருள்கள் தேவைப்படும், நாட்டு மாடு, கலப்பின மாடு என எந்த வகையான மாட்டிலிருந்து கிடைக்கும் பொருள்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.

நீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா!

தயாரிப்பு முறை: கடலைப் பிண்ணாக்கைத் தயாரிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே நீரில் ஊற வைத்து விடவும். பின்பு எல்லா பொருள்களையும் மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் கலந்து நிழலில் வைக்கவும். தூசு, தும்பு படாமல் இருக்க, மெல்லியத் துணியால் வேடு கட்டி வைக்கலாம். தினமும் இந்தக் கலவையைக் கலக்கி விட வேண்டும். இதனால், மீத்தேன் வாயு வெளியேறி, நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகும். ஏழு நாள்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும். இதன்மூலம் ஏறத்தாழ 20 லிட்டர் பஞ்சகவ்யா கிடைக்கும்.

10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம் (கீரைக்கு மட்டும் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்). ஒருமுறை தயாரித்த பஞ்சகவ்யாவை ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இது எல்லா பயிர்களுக்கும் தெளிக்கவல்ல வளர்ச்சி ஊக்கியாகும். விதைநேர்த்தி செய்யவும் பயன்படுத்தலாம். ஓர் ஏக்கருக்கு, 30 லிட்டர் பஞ்சகவ்யாவுடன் 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசனநீருடன் கலந்துவிடலாம்.

இதனால் மண்வளம் கூடும், அதிக பூக்கள் பூக்கும், காய் கனிகள் சுவையாக இருக்கும். பூச்சி நோயும் எளிதில் அண்டாது. விளைச்சலும் கூடுதலாகக் கிடைக்கும். பயிர் வளர்ச்சி குன்றி இருக்கும்போது, இதைத் தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். பதினைந்து நாள்களுக்கு ஒருமுறையும் பயிர்களுக்குத் தெளித்து வரலாம். நெல் பயிருக்கு மட்டும் கதிர் வந்தவுடன் தெளிக்கக்கூடாது. அப்படி செய்தால், நெல்லின் தோல் கடினமாகி, அது மோட்டா ரக நெல்லாகிவிடும்.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.

நீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism