Published:Updated:

உழவு, உரங்கள், பூச்சிவிரட்டிகள்... - படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிகள்!

உழவு, உரங்கள், பூச்சிவிரட்டிகள்... - படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
உழவு, உரங்கள், பூச்சிவிரட்டிகள்... - படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிகள்!

ஆலோசனை

உழவு, உரங்கள், பூச்சிவிரட்டிகள்... - படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிகள்!

ஆலோசனை

Published:Updated:
உழவு, உரங்கள், பூச்சிவிரட்டிகள்... - படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
உழவு, உரங்கள், பூச்சிவிரட்டிகள்... - படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிகள்!

குறைந்த நாள்களில் அதிக விளைச்சல் எடுக்கக்கூடிய பயிர்களில் மக்காச்சோளமும் ஒன்று. அதோடு, அதிக உரம், பூச்சிக்கொல்லி தேவைப்படாத பயிராக இருப்பதால், விவசாயிகளின் முதன்மைத் தேர்வாக இருக்கிறது, மக்காச்சோளம். கால்நடைத் தீவனம், உணவுப் பொருள்கள் எனப் பல பயன்பாடுகள் இதற்கு உண்டு. அதனால், ஆண்டுக்காண்டு மக்காச்சோளச் சாகுபடிப் பரப்பு அதிகரிக்கிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மக்காச்சோளத்தில் படைப் புழுக்கள் தாக்கிப் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், இந்த முறை மக்காச்சோளத்தைப் பயிரிடும் முன்னரே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். சேலம் மாவட்டம், தலைவாசல் வேளாண் உதவி இயக்குநர் பொ.வேல்முருகன் படைப்புழுக்களின் தாக்குதலைச் சமாளிக்கும் விதம்குறித்துச் சொன்ன தகவல்கள் இங்கே...

உழவு, உரங்கள், பூச்சிவிரட்டிகள்... - படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிகள்!

“பொதுவாக, மக்காச்சோளப் பயிரில் பூச்சிக்கொல்லிப் பயன்பாடு மிகக் குறைந்த அளவில்தான் இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த ‘ஸ்போடாப்டிரா ஃப்ருஜிபெர்டா’ (Spodoptera Frugiperda) என்ற படைப்புழுக்கள் மக்காச்சோளப் பயிரில் குருத்து, இலைகள் மற்றும் கதிர்களைச் சேதப்படுத்தி அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தின. இப்படைப்புழுக்கள் 60 முதல் 90 நாள்கள்வரை வாழ்நாள்களைக் கொண்டவை. அதனால், கடந்தாண்டு இதை அழிக்க அதிக அளவு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று. இவற்றின் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால், நிலத்தைத் தயார் செய்யும்போதே கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏப்ரல், மே மாதங்களில் கிடைக்கும் கோடை மழையைக்கொண்டு உழவு செய்ய வேண்டியது அவசியம். இதனால், 2-8 செ.மீ ஆழத்தில், மண்ணில் கூட்டுப்புழுப் பருவத்தில் உறக்க நிலையில் இருக்கும் படைப்புழுக்கள் அழிக்கப்பட்டுவிடும். உழவு ஓட்டி 10 நாள்கள் முதல் ஒரு மாதம்வரை காய விட வேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம், மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையும் அதிகரிக்கும்.

நேப்பியர், வேலிமசால் போன்ற தீவனப்புல் வகைகளை வரப்புப் பயிராகச் சாகுபடி செய்ய வேண்டும். ஆண்டு முழுவதும் பூக்கும் பயிர்களான பீன்ஸ், தட்டைப்பயறு, செண்டுமல்லி போன்ற பயிர்களை ஊடுபயிராகவோ வரப்புப் பயிராகவோ சாகுபடி செய்யலாம். காலம் தாழ்த்தி (பட்டம் தவறி) மக்காச்சோளத்தை விதைக்கக் கூடாது. ஊடுபயிர்கள் மற்றும் வரப்புப் பயிர்கள் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை எதிரிகளை ஊக்குவிக்கும் தன்மையுடையவை. இவை வருமுன் காக்கும் முறைகள்” என்ற வேல்முருகன், படைப்புழுக்கள் தாக்கியபிறகு அவற்றை அழிக்கும் முறைகள்குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உழவு, உரங்கள், பூச்சிவிரட்டிகள்... - படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிகள்!

“படைப்புழுக்கள் தாக்கியதைச் சில அறிகுறிகள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். படைப்புழுக்கள் பாதிக்கப்பட்ட வயல்களில் மாடுகள் மேய்ந்தது போன்று இலைகளைப் புழுக்கள் தின்ற அடையாளங்கள் இருக்கும். வளர்ச்சி குன்றிய நிலைகள், இலைகளே இல்லாமல் தண்டுகள் மட்டும் இருப்பது போன்ற நிலைகளில் பயிர்கள் இருக்கும். வளர்ந்த புழுக்களின் முன் மேற்பகுதியில் கவிழ்ந்த ‘Y’ வடிவ கறுப்பு நிற அடையாளம் இருக்கும். பின் மேற்பகுதியில் நான்கு கறுப்பு நிறப் புள்ளிகள் தென்படும். தாய் அந்துப்பூச்சி 100 முதல் 200 முட்டைகள் கொண்ட குவியல்களைப் பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடும். இவற்றிலிருந்து பொரிந்து வரும் புழுக்கள், இலையினுள் சென்று பாதிப்பை உண்டாக்கும். இலைகள் விரிவடையும்போது அதிக வரிசையாகத் துளைகள் காணப்படும். மக்காச்சோளக் கதிர்களும் இவற்றால் சேதத்துக்குள்ளாகும்.

பயிர்களில் கொத்துக் கொத்தாக இருக்கும் புழுக்களை ஆரம்ப நிலைகளில் கண்டால், கைகளால் சேகரித்து அழிக்கலாம். ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்குப் பயன்படுத்தித் தாக்குதலைக் குறைக்கலாம். நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகளான பவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனிசோபிலியே, பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் போன்றவற்றைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் 2 சிசி என்ற முட்டை ஒட்டுண்ணியைக் கொண்டும் படைப்புழுக்களின் முட்டைகளை அழிக்கலாம்.

விளக்குப்பொறி கொண்டும் தாய் அந்துப்பூச்சியை அழிக்கலாம். தாக்குதல் கண்டுவிட்டால், தலா 1 கிலோ பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து, 100 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்க வேண்டும். அதிலிருந்து 300 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். தெளிக்கும்போது 50 கிராம் புகையிலைத் தூள் அல்லது பெருங்காயத்தைக் கலந்துகொண்டால் படைப்புழுக்கள் கட்டுக்குள் வந்துவிடும்” என்ற வேல்முருகன் நிறைவாக,
“பப்பாளியில் தாக்கிய மாவுப்பூச்சியைப் போல ‘ஸ்போடாப்டிரா ஃப்ருஜிபெர்டா’ என்ற படைப்புழுக்கள் மக்காச்சோளப் பயிரை அதிகமாகத் தாக்குகின்றன. படைப்புழுக்கள், தென் அமெரிக்க நாடான சிலியிலிருந்து நைஜீரியா வழியாகக் கர்நாடக மாநிலத்தின் ஷிமோஹா பகுதியில் பரவி, தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளன. கடந்தாண்டு சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டத்தில் 30,000 ஹெக்டேர் அளவில் பாதிப்பு ஏற்பட்டது. படைப்புழுக்கள் கரும்பு உள்ளிட்ட சில பயிர்களையும் தாக்கும் என்பதால், மேற்சொன்ன தடுப்பு முறைகளை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்” என்றார்.

     தொடர்புக்கு,
    பொ.வேல்முருகன்,
    செல்போன்: 99524 17105

- த.ஜெயகுமார், படங்கள்: க.தனசேகரன்

பனை விதைகள் தேவை!

‘ப
னைமரம் பெருக்குத் திட்டம்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது, வேளாண்மைத் துறை. இதுகுறித்துப் பேசிய வேல்முருகன், “சங்க காலம் முதல் நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கும் மரம் பனைமரம். இதுவரை, கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்தின் கீழ் பனை சம்பந்தமான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பனைமரங்கள் அழிந்துவரும் சூழ்நிலையில் இதைப் பெருக்கும்பொருட்டு... பனைமரம் பெருக்குத் திட்டம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறது வேளாண் துறை. தென்னையைப் போலவே பனையும் பலவித பயன்களைக் கொண்டது. இதிலிருந்து கிடைக்கும் பனைவெல்லம், பனங்கற்கண்டு, பதநீர் ஆகியவை, மனிதர்களுக்குப் பலன் கொடுப்பவை. வறட்சியான சூழ்நிலையிலும் எளிதாக வளரக்கூடிய தன்மையுடையது, பனைமரம். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும்.

உழவு, உரங்கள், பூச்சிவிரட்டிகள்... - படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிகள்!

வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றுப் பொருளாகப் பனைச்சர்க்கரை, பனைவெல்லம் போன்றவை திகழ்கின்றன. கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பால்கோவா என்று சாதாரணக் கடைகளிலே இன்று பார்க்க முடிகிறது. பனை சம்பந்தமான உணவுப் பொருள்கள் மருத்துவத்தன்மை கொண்டிருப்பதால், சித்த மருத்துவத்தில் முதன்மைப் பொருளாக உள்ளது. பனை ஓலை மற்றும் பட்டையிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகின்றன. இப்படிப் பல வகைகளில் பனை பொருள்களுக்கு வரவேற்பு பெருகி வருவதால், அதன் சாகுபடிப் பரப்பைப் பெருக்க வேளாண் துறை திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பனைமரம் பெருக்குத் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. பனைமரம் நடவுசெய்ய விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும். மேலும், பனங்கொட்டை வைத்திருக்கும் விவசாயிகளும் விலை நிர்ணயம் செய்து, வேளாண்மைத் துறை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விற்பனை செய்யலாம்” என்றார்.

தொடர்புக்கு, இயக்குநர்,
தமிழ்நாடு வேளாண்மைத் துறை, எழிலகம், சேப்பாக்கம், சென்னை-5.
தொலைபேசி: 044 28583323.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism