கஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு மறு வாழ்வுத் திட்டத்தின் மூலம் விதைகள் மற்றும் இடுபொருள்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனால், இதற்கும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஜி.எஸ்.டி வரி கேட்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல், டெல்டா மாவட்டங்களிலிருந்த கோடிக்கணக்கான தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியெறிந்துவிட்டுப் போனது. இதைத் தொடர்ந்து, தென்னை விவசாயிகளுக்காக ‘மறு வாழ்வுத்திட்டம்’ அறிவித்தது தமிழக அரசு. இந்தத் திட்டத்தின்கீழ் தென்னை தோப்பில் ஊடுபயிர் சாகுபடி செய்யத் தேவையான பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில்தான் தற்போது முறைகேடு நடப்பதாகச் சொல்லப் படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், “புயல் பாதிப்பில் ஏற்கெனவே சேத மதிப்பைக் குறைத்து அறிவித்திருக்கிறது தமிழக அரசு. அத்துடன், இலவசமாக வழங்கவேண்டிய தென்னங்கன்று களையும் போதுமான எண்ணிக்கையில் வழங்கவில்லை. எனது தோட்டத்தில் 250 மரங்கள் சாய்ந்துவிட்டன. ஆனால், 100 கன்றுகளை மட்டும் தான் வேளாண்மைத் துறை அதிகாரிகள் கொடுத்தனர். இப்போது, மறு வாழ்வுத்திட்டத்திலும் மோசடி செய்கிறார்கள்.

இந்தத் திட்டத்தின்படி, ‘தென்னந்தோப்பில் ஊடுபயிராக உளுந்து சாகுபடிசெய்ய விரும்பும் விவசாயி களுக்கு, ஒரு ஹெக்டேர் பரப்புக்கு நான்காயிரம் ரூபாய் மதிப்பில் 25 கிலோ விதை மற்றும் இடுபொருள்களும் எள் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு மூவாயிரம் ரூபாய் மதிப்பில் ஐந்து கிலோ விதை மற்றும் இடுபொருள்களும் இலவசமாக வழங்கப்படும்’ என்று அறிவித்தது தமிழக அரசு.

ஆனால், இந்தப் பொருள்களை வாங்க வரும் விவசாயி களிடம் வேளாண்மைத் துறை அதிகாரிகள், ஜி.எஸ்.டி-யாக 250 ரூபாயைக் கேட்டு வற்புறுத்துகிறார்கள். அதேபோல தார்பாலின் ஷீட்டுக்கு ஜி.எஸ்.டி-யாக 400 ரூபாய் கேட்கிறார்கள். பணம் கொடுத்துவிட்டு ரசீது கேட்டால், ‘கொடுக்க முடியாது’ என்கிறார்கள். இதிலிருந்தே இது மோசடி என்று தெரிகிறது. மறுவாழ்வு தருகிறோம் என்று சொல்லிக்கொண்டு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது தமிழக அரசு” என்றார் வேதனையுடன்.

வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு விடம் இதுகுறித்து பேசினோம். “உரம் மற்றும் மஞ்சள் அட்டை ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி கட்ட வேண்டியது அவசியம். அதைத்தான் வசூல் செய்கிறார்கள். வரியை நீக்குவதற்கு முயற்சி எடுக்கிறேன்” என்றார்.

ரசீது கொடுக்காமல், வரி வசூலிப்பது சரிதானா நியாயமாரே?

- கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்