மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்மை முறையில் பயன்படுத்தப்படும் இடுபொருள் தயாரிப்புப் பற்றிப் பார்ப்போம்.

விதை நேர்த்திக்குப் பீஜாமிர்தம்

தேவையான பொருள்கள்:
* தண்ணீர் - 20 லிட்டர்
* நாட்டுப் பசுமாட்டுச் சாணம் - 5 கிலோ
* நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் - 5 லிட்டர்
* சுண்ணாம்பு - 50 கிராம்

சாகுபடி செய்யும் நிலத்தின் வரப்பு மண் ஒரு கைப்பிடி.

சாணத்தை நேரடியாக நீரில் இடாமல், ஒரு சாக்கு அல்லது துணியில் போட்டு ஒரு குச்சியில் கட்டி நீரில் மிதக்க விட வேண்டும். பிறகு, இரண்டு அல்லது மூன்று முறை சாக்கை பிழிந்து, கழிவை அகற்றிப் பயன்படுத்த வேண்டும். இவற்றைக் கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு வடிகட்டி எடுத்தால் பீஜாமிர்தம் தயார். இதில் நெல், தானியங்களைச் சிறிது நேரம் ஊறவைத்து விதைக்கலாம். நிலக்கடலை மற்றும் பயறு வகை விதைகளை ஊற வைக்காமல் விதைகளில் பீஜாமிர்தத்தை லேசாகத் தெளிக்க வேண்டும். வாழை, கரும்பு, மஞ்சள் போன்றவற்றைப் பீஜாமிர்தத்தில் மூழ்க வைத்து எடுத்து நடவு செய்யலாம். இப்படிச் செய்வதால் விதைகளில் ஒட்டியுள்ள நோய்க் கிருமிகள் அழிக்கப்பட்டுப் பயிர் ஆரோக்கியமாகவும், வீரியமாகவும் வளரும்.

ஊட்டம் கொடுக்கும் ஜீவாமிர்தம்

தேவையான பொருள்கள்:
* தண்ணீர் - 200 லிட்டர்
* நாட்டுப் பசுமாட்டுச் சாணம் - 10 கிலோ
* நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் - 10 லிட்டர்
* வெல்லம் - 1 கிலோ
* பயறு மாவு - 1 கிலோ

சாகுபடி செய்யும் நிலத்தின் வரப்பு மண் ஒரு கைப்பிடி

சாணம் புதிதாக இருக்க வேண்டும். பழைய சாணத்தைப் பயன்படுத்த கூடாது. நாள் ஆக ஆக மாட்டுச் சிறுநீரின் வீரியம் அதிகமாகும். அனைத்து பொருள்களையும் கலந்து, ஒரு பேரலில் இரண்டு நாள்கள் வைக்க வேண்டும். அதன் பிறகு எடுத்துப் பயன்படுத்தலாம். இதனை ஒரு வாரத்துக்குள் பயன்படுத்துவது, முழுமையான பலனைக் கொடுக்கும். நிழலில், காற்றுப் போகுமாறு சணல் சாக்குக் கொண்டு மூடி வைக்க வேண்டும். காலை, மாலை இருமுறை குச்சிமூலம் கரைசலை வலதுபுறமாகக் கலக்கிவிட வேண்டும்.

ஜீவாமிர்தத்தைப் பயிருக்கு ஊட்டம் கொடுப்பதற்காகப் பாசன நீருடன் கலந்துவிடலாம். இலைவழித் தெளிப்பாகவும் பயன்படுத்தலாம். இளம்பயிராக இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற அளவிலும், வளர்ந்த பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவிலும் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், பயிர்கள் செழித்து வளரும். பயிருக்குத் தேவையான ஜிப்ரலிக் அசிட்டிக் அமிலம் (GAA), நாப்தலின் அசிட்டிக் அமிலம் (NAA) போன்ற வளர்ச்சியூக்கிகள் ஜீவாமிர்தத்தில் இருப்பதால், பயிர்களில் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடந்து மகசூல் அதிகரிக்கும். இந்த இரண்டு அமிலங்களைத்தான் தனியார் நிறுவனங்கள், வளர்ச்சி ஊக்கிகள் என்ற பெயரில் விற்பனை செய்கின்றன.

கன ஜீவாமிர்தம்-திட நுண்ணுயிர் கலவை

தேவையான பொருள்கள்:
* நாட்டு மாட்டுச் சாணம் - 100 கிலோ
* வெல்லம் - 1 கிலோ
* பயறு மாவு 1 கிலோ

சாகுபடி செய்யும் நிலத்தின் வரப்பு மண் ஒரு கைப்பிடி. இவற்றோடு உப்புமா பதத்தில் தேவையான அளவு மாட்டுச் சிறுநீரையும் கலந்து, ஒரு குவியலாக நிழலில் இரண்டு நாள்கள் வைக்க வேண்டும். பிறகு எடுத்து நிழலில் உலர்த்தி, தூளாக்கிப் பயன்படுத்தலாம். விதைப்பதற்கு முன்னரும், நாற்றங்காலிலும் கன ஜீவாமிர்தத்தைப் பயன்படுத்தலாம்.

நீம் அஸ்திரம்

தேவையான பொருள்கள்:
* தண்ணீர் - 100 லிட்டர்
* நாட்டுப் பசுமாட்டுச் சாணம் - 2 கிலோ

* அரைத்த வேப்பிலை - 5 கிலோ

அனைத்தையும் கலந்து 24 மணி நேரம் ஊற வைத்து… காலை, மாலை என இரு வேளைகள் குச்சியால் வலது புறமாகக் கலக்கிவிட வேண்டும். இதனை வடிகட்டித் தெளித்துச் சாறு உறிஞ்சும் பூச்சிகள், மாவுப் பூச்சிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

பிரம்மாஸ்திரம்

* அரைத்த சீத்தாப் பழ இலை - 2 கிலோ
* அரைத்த பப்பாளி இலை - 2 கிலோ
* அரைத்த மாதுளை இலை - 2 கிலோ
* அரைத்த கொய்யா இலை - 2 கிலோ

அனைத்தையும் ஒன்றாகக் கலந்து நன்கு கொதிக்க வைத்து 24 மணி நேரம் கழித்து வடிகட்டிப் பயன்படுத்தலாம். 2 முதல் 2.5 லிட்டர் பிரமாஸ்திரத்தை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். இது அனைத்துப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.

அக்னி அஸ்திரம்

* அரைத்த புகையிலை - 1 கிலோ
* அரைத்த நாட்டு மிளகாய் - அரைக்கிலோ
* அரைத்த நாட்டுப் பூண்டு - அரைக்கிலோ

அனைத்தையும் ஒன்றாகக் கலந்து 5 முறை கொதிக்க வைக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து வடிகட்டிப் பயன்படுத்தலாம். 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் அக்னி அஸ்திரம் கலந்து தெளித்து இலைச் சுருட்டுப்புழு, தண்டுத் துளைப்பான், காய்ப்புழுக்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

-ஆர்.குமரேசன்