Published:Updated:

நீலகிரி அருகே விவசாயிகளுக்கு நாற்றாங்கால் தொழில்நுட்ப பயிற்சி - ஏராளமானோர் பங்கேற்பு!

நீலகிரி அருகே விவசாயிகளுக்கு நாற்றாங்கால் தொழில்நுட்ப பயிற்சி - ஏராளமானோர் பங்கேற்பு!
நீலகிரி அருகே விவசாயிகளுக்கு நாற்றாங்கால் தொழில்நுட்ப பயிற்சி - ஏராளமானோர் பங்கேற்பு!

விவசாயிகளுக்கு நாற்றாங்கால் தொழில் நுட்பம் குறித்த சிறப்பு பயிற்சி, குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை முக்கிய பயிராக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தேயிலைக்கு ஊடாக மிளகு, காப்பி, ஆரஞ்சு, பேரிக்காய் போன்றவைகளை பயிரிட்டு பலனடைந்து வருகின்றனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக தேயிலைக்கு உரிய விலை கிடைக்காத நிலையல் ஊடுபயிரை நம்பியே உள்ளனர். நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ஊடுபயிரின் முக்கியத்துவம் குறித்தும், பயிரிட்டு பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கின்றனர். தற்போது குன்னூர் காட்டேரி பூங்காவில் வட்டார விவசாயிகளுக்கான தோட்டக்கலை தொழிற்நுட்பம் தொடர்பான ஒரு நாள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இதில்விவசாயிகளுக்கு பண்ணையின் செயல்பாடுகள் மற்றும் நாற்றாங்கால் அமைத்து நாற்றுகளை எவ்வாறு பராமரிப்பது போன்ற தொழிற்நுட்பம் குறித்து விளக்கப்பட்டது

.

இப்பயிர்ச்சியில் குன்னூர் வட்டார பகுதியினை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சி தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜ் கோபு தலைமையில் நடைபெற்றது.தோட்டக்கலை அலுவலர்கள் ஷர்மிலா,கோபாலன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பயிர்ச்சி அளித்தனர். பயிர்ச்சியின் போது காட்டேரி மேலும் விவசாயிகளுக்கு நாற்றுகளும் வழங்கப்பட்டது.