Published:Updated:

`மோடிக்கு எதிராக தேர்தலில் விவசாய சங்கங்கள் களமிறங்கும்!' - அய்யாக்கண்ணு

`மோடிக்கு எதிராக தேர்தலில் விவசாய சங்கங்கள் களமிறங்கும்!' - அய்யாக்கண்ணு
`மோடிக்கு எதிராக தேர்தலில் விவசாய சங்கங்கள் களமிறங்கும்!' - அய்யாக்கண்ணு
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் தொகுதிகளில் விவசாய சங்கங்களின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக கூறுகிறார் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு.
திருச்சியில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு ``விவசாயக் கடன் தள்ளுபடி, தனி நபர் காப்பீடு, விளைபொருள்களுக்கு உரிய விலை உள்ளிட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் நேரில் சென்று வலியுறுத்துவோம்.
இக்கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக பா.ஜ.க அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், பிரதமர் மோடி போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும், தலா 111 விவசாயிகள் மனுத்தாக்கல் செய்வார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை, எங்களது கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளை எதிர்த்து வேலை செய்வோம்" என்றார். பிரதமர் மோடியை எதிர்த்து விவசாய சங்கங்கள் போட்டியிடுவது என முடிவெடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.