Published:Updated:

ஒரு கிலோ 200 ரூபாய்! - கொத்தமல்லியையும் விட்டுவைக்காத தண்ணீர்ப் பஞ்சம்

கடந்த வாரம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த கொத்தமல்லியின் விலை, தற்போது கிலோ 200 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கொத்தமல்லி வாங்குவதை தவிர்த்துவருகிறார்கள்.

ஒரு கிலோ 200 ரூபாய்! - கொத்தமல்லியையும் விட்டுவைக்காத தண்ணீர்ப் பஞ்சம்

தேனி மாவட்டத்தில், சீலையம்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய முல்லைப்பெரியாறு ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள பகுதிகளில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மொத்த சாகுபடி பரப்பு எனப் பார்த்தால், சுமார் 60 ஏக்கருக்கு மேல் இருக்கும். இந்நிலையில், கேரளாவில் பருவமழை ஆரம்பித்தாலும், கேரளாவையொட்டிய தமிழக மாவட்டமான தேனி போன்ற இடங்களில் மழை இல்லை. இதனால், முல்லைப்பெரியாறு ஆற்றிலும் போதிய தண்ணீர் இல்லை.

ஒரு கிலோ 200 ரூபாய்! - கொத்தமல்லியையும் விட்டுவைக்காத தண்ணீர்ப் பஞ்சம்

இதன் காரணமாக, விவசாயிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முதல்போக சாகுபடி செய்ய முடியாமல் தவித்துவருகிறார்கள். இவை ஒருபுறம் என்றால், கொத்தமல்லி சாகுபடிக்குப் போதிய தண்ணீர் இல்லாததாலும், கடும் வெயில் வாட்டி வதைப்பதாலும், விவசாயிகள் பலர் கொத்தமல்லியை விதைக்கவில்லை. எனவே, கொத்தமல்லியின் விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே கொத்தமல்லி, மதுரையில் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ 200 ரூபாய்! - கொத்தமல்லியையும் விட்டுவைக்காத தண்ணீர்ப் பஞ்சம்

தேனி உழவர் சந்தைக்கு தினசரி 300 கிலோ கொத்தமல்லி வந்து இறங்கும். ஆனால், தற்போது வெறும் 50 கிலோ கொத்தமல்லி மட்டுமே வருகிறது. மேலும், விலை அதிகம் என்பதால், மக்கள் கொத்தமல்லி வாங்குவதை தவிர்த்துவருகிறார்கள். இதனால், வியாபாரிகளும் விவசாயிகளும் வேதனை தெரிவிக்கிறார்கள். ``பருவ மழை பெய்தால் மட்டுமே தேனி மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும்” என்கின்றனர் விவசாயிகள்.