Published:Updated:

`எம்.எல்.ஏ என்கிற முறையில் இதைச் செய்தால் மகிழ்ச்சி!’ - ஓ.பி.எஸ்ஸுக்கு போடி விவசாயிகளின் கோரிக்கை

`எம்.எல்.ஏ என்கிற முறையில் இதைச் செய்தால் மகிழ்ச்சி!’ - ஓ.பி.எஸ்ஸுக்கு போடி விவசாயிகளின் கோரிக்கை
`எம்.எல்.ஏ என்கிற முறையில் இதைச் செய்தால் மகிழ்ச்சி!’ - ஓ.பி.எஸ்ஸுக்கு போடி விவசாயிகளின் கோரிக்கை

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடியில் உள்ள விவசாயிகள் நேற்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். ஓ.பன்னீர்செல்வம் ஊரில் இல்லாததால், கலெக்டரை சந்தித்ததாக கூறும் அந்த விவசாயிகளிடம், மனு குறித்து கேட்டோம்.

`எம்.எல்.ஏ என்கிற முறையில் இதைச் செய்தால் மகிழ்ச்சி!’ - ஓ.பி.எஸ்ஸுக்கு போடி விவசாயிகளின் கோரிக்கை

நம்மிடம் பேசிய விவசாயி சீனிராஜ், ``போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நாங்கள். எங்கள் பகுதி மூலவைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயமே எங்களின் பிரதான தொழில். மழை இன்றி மூலவைகை காய்ந்து போனதால், நிலத்தடி நீர் இல்லாமல், கிணறுகள் வற்றிவிட்டன. குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமத்தைச் சந்தித்திருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்றால், மூலவைகை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைத்து அதைப் பயன்படுத்தலாம். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

`எம்.எல்.ஏ என்கிற முறையில் இதைச் செய்தால் மகிழ்ச்சி!’ - ஓ.பி.எஸ்ஸுக்கு போடி விவசாயிகளின் கோரிக்கை

இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தோம். அதைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் ஜூலை மாதம் பொதுப்பணித்துறை திட்டம் மற்றும் வடிவமைப்புக் கோட்ட மதுரை செயற்பொறியாளர் தலைமையிலான குழுவினரை எங்கள் பகுதிக்கு அனுப்பி, ஆய்வுகள் மேற்கொண்டனர். அதோடு சரி, இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக சட்டப்பேரவை கூட்டப்பட்டுள்ள நிலையில், மூலவைகையில் தடுப்பணை கட்டப்படுவது குறித்து போடி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் பேசி, அதற்கான நிதி ஒதுக்கினால் மக்கள் நிறைவாக இருப்பார்கள்” என்றார். பரபரப்பான அரசியல் சூழலில், தனது சொந்தத் தொகுதியில் உள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்துவாரா ஓ.பி.எஸ்?

Vikatan