Published:Updated:

வீட்டில் இருக்க வேண்டிய 20 மூலிகைகள்!

 மூலிகை
பிரீமியம் ஸ்டோரி
மூலிகை

பயிற்சி

வீட்டில் இருக்க வேண்டிய 20 மூலிகைகள்!

பயிற்சி

Published:Updated:
 மூலிகை
பிரீமியம் ஸ்டோரி
மூலிகை
சுமை விகடன் வழங்கிய, ‘நல்மருந்து: தெரிந்த மூலிகைகள்... தெரியாத பயன்கள்’ குறித்த நேரலைக் கட்டணப் பயிற்சி, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வாசகர்கள் கலந்து கொண்டனர். சித்த மருத்துவத்தில் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி அளித்தார்.

நேரலையில் பேசியவர், “ ‘குடும்ப மருத்துவர்’ என்ற ஒரு அமைப்பு மாறி, ‘சிறப்பு மருத்துவர்’ கலாசாரம் பரவத் தொடங்கிவிட்டது. நகரத்துக்குச் சென்று விலை உயர்ந்த மருத்துவப் பரிசோதனைகள் செய்து, விலையுயர்ந்த மருந்துகளை விலையுயர்ந்த மருத்துவமனையில் வாங்கிச் சாப்பிட்டால் மட்டுமே தனது வியாதி குணமாகும் என்றொரு சிந்தனை மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டுவிட்டது. அதன் காரணமாக, எளிய மருந்துகள் மீதுள்ள நம்பிக்கையும் மக்களிடம் மறைந்துவிட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு மூலிகை களைக் கொண்டே தங்களுக்குத் தாங்களே மருத்துவம் பார்த்து வந்தனர் நம் முன்னோர்கள். நோயின் தீவிரம் அதிகமான பிறகுதான் மருத்துவரை அணுகியுள்ளனர். இன்று மருத்துவமனையிலும் மருந்தகங்களிலும்தான் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. அன்று வயல்வெளிகள், மரம், செடிகள், கொடிகள் என எங்கெங்கும் காணப்பட்ட எளிதாகப் பலவகை மூலிகை களைக்கூட, நம்மில் பலரால் அடையாளம் காணப்படாததாகவே உள்ளது.

நேரலையில மைக்கேல் ஜெயராசு
நேரலையில மைக்கேல் ஜெயராசு

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வீட்டுத்தோட்டம், மாடித்தோட்ட வளர்ப்பில் மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அனைவரும் குறைந்தபட்சம் 50 வகையான மூலிகைகளையும், அவற்றின் பயன்களையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதே நேரத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் அழகுக்காக விலை கொடுத்து வாங்கிச் செடிகளை வளர்க்க வேண்டாம். விலைமதிப்பில்லா மூலிகைச் செடிகளை வளருங்கள், அது வாழ்நாள் முழுவதும் பலனளிக்கும்” என்றவர், சுமார் 60 மூலிகைகளை அடையாளம் காட்டி அவற்றின் பயன்களை விளக்கினார்.

வீட்டில் இருக்க வேண்டிய 20 மூலிகைகள்!

இறுதியாக, ஒவ்வொரு வீட்டிலும் துளசி, தூதுவேளை, சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலை, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, ஆடாதொடை, நொச்சி, பூனைமீசை, தழுதாழை, அறுகம்புல், செம்பருத்தி உள்ளிட்ட 20 வகையான மூலிகைகள் அவசியம் இருக்க வேண்டியவை எனக் கூறியதுடன், அவற்றின் மூலம் செய்யப்படும் கை மருந்துகள், பயன்கள் குறித்தும் விளக்கினார். பயிற்சியின் இறுதியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கும் மருத்துவர் விளக்கம் அளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism