Published:Updated:

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: இந்த 20 முக்கிய விஷயங்களை கவனிச்சீங்களா?

இன்று தாக்கலான வேளாண் பட்ஜெட்டின் 20 முக்கிய அம்சங்கள் இங்கே...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டுக்கு இது புதுசு. அப்படி இன்று தாக்கலான வேளாண் பட்ஜெட்டின் 20 முக்கிய அம்சங்கள் இங்கே...

1.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்

பல துறைகள் சேர்ந்து ஒரு கிராமத்தின் வளர்ச்சியை மேற்கொள்ளும் பொருட்டு, கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஐந்தில் ஒரு கிராம பஞ்சாயத்தைத் தேர்ந்தெடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். கிராமங்களை தன்னிறைவு பெற்றதாக மாற்றவே இத்திட்டம்.

Farmer (Representational Image)
Farmer (Representational Image)
AP Photo / Rajesh Kumar Singh

2.இளைஞர்களை வேளாண்மைக்கு கொண்டுவருதல்

இளைய தலைமுறையினருக்கு கணினியைப் பற்றி தெரியும் அளவுக்கு கழனியைப் பற்றி தெரிவதில்லை. இதனால் இளைஞர்கள் வேளாண்மையில் ஈடுபடுவது குறைந்துள்ளது. இதை மாற்ற `ஊரக இளைஞர் வேளாண் மேம்பாட்டு திட்டம்’ இந்த ஆண்டு 5 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். முதல்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு இந்த ஆண்டு இதற்காக பயிற்சிகள் வழங்கப்படும்.

3. பனை பாதுகாப்பு 

பனைமரத்தின் பரப்பு குறைந்து வருவதை அறிந்து நடப்பாண்டில் பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும். இதோடு பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் விதைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிள்ளிக்குளம் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் பனை மரம் பற்றிய ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதோடு பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவை.

4.நெல் கொள்முதல் ஆதார விலை உயர்வு

தற்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு, சன்ன ரகம் ரூ.1960க்கும், சாதாரண ரகம் ரூ.1940க்கும் வழங்கப்படுகிறது. இனி சன்ன ரகத்திற்கு 2060-ம், சாதாரண ரகத்திற்கு 2015-ம் வழங்கப்படும்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: Live Updates: ``நம்மாழ்வார் மையம், தமிழ்வழியில் வேளாண் படிப்பு!"

5.சிறுதானிய இயக்கம்

சாமை, தினை, வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க, ரூ.12.44 கோடியில் சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும். இந்த இயக்கம் கடலூர், திண்டுக்கல், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். நீலகிரி மாவட்டத்தில் சிறுதானிய தானியங்களை பதப்படுத்தல் மையமும் அமைக்கப்படும். விருதுநகரில் சிறுதானிய சாகுபடியை பற்றி கற்க மையம் அமைக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

6. வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக் கென்று தனிப் பிரிவு தொடங்கப்படும். இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தப்படும். இதன்மூலம் இந்தாண்டில் இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும்.

வேளாண்மை பல்கலைக்கழகம்
வேளாண்மை பல்கலைக்கழகம்

7. நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்

பல்வேறு பயிர்களின் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் `நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ தொடங்கப்படும்

8. பல மாவட்டங்களில் உள்ள 50 உழவர் சந்தைகளை ஆராய்ந்து மக்கள் வந்து செல்லும் இடமாக மேம்படுத்திட 12.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

9. கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, வேலூர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சியில் புதிய உழவர் சந்தைகள் தொடங்கப்படும்.

10. நாளுக்கு நாள் காய்கறிகளின் தேவை அதிகரித்து வருவதால், காய்கறி, கீரைச் சாகுபடியை அதிகரிக்க மானியம் அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.95 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

11. மாடித்தோட்டங்கள் நகர்ப்புறங்களில் பரவலாகி வருவதால், அதை இந்த ஆண்டிலும் நடைமுறைப்படுத்த நகர்ப்புறங்களில் 6 வகை காய்கறி விதைகள் அடங்கிய 1 லட்சம் மாடித்தோட்ட தளைகள் வழங்கப்படும்.

12. விவசாய நிலங்களில் நிலத்தடி நீரை அதிகரிக்கும் பொருட்டும் பாசன வசதியை மேம்படுத்தும் பொருட்டும் 100 சதவிகித மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

13. தமிழகத்தில் பாரம்பர்ய நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாக்கும் பொருட்டு, அரசு விதைப்பண்ணைகளில் பாரம்பர்ய நெல் விதைகளைப் பயிரிட்டு விவசாயிளுக்கு வழங்கப்படும்.

14. பயறு வகைகளின் உற்பத்தி குறைந்து வருவதால் அதைப் பெருக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. இதோடு ரேஷன் கடைகளிலும், மதிய உணவுத் திட்டத்திலும் பயறு வகைகளை வாங்கி பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நெல் வயல்
நெல் வயல்

15. நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய எண்ணெய் வித்து பயிர்களை தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். இதனால் உள்நாட்டு எண்ணெய் வகைகளின் பயன்பாடு அதிகரிக்கும்.

16. விலைவீழ்ச்சியால் விவசாயிகள் தவிப்பதைத் தவிர்க்கவும், விளைபொருள்களை சேமித்து வைக்கவும் ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இரு இடங்களில் ரூ.10 கோடி செலவில் புதிய குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.

17. கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.150 வழங்கப்படும். இதன்மூலம் ஒரு டன் கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்கும்.

18. உழவர்கள் பற்றிய உண்மைகளைப் பற்றியும், வேளாண்மையின் மகத்துவத்தைப் பற்றியும் இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்வது அவசியம். இதற்காக சென்னையில் வேளாண்மைக்கு என தனி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

வேளாண் பட்ஜெட்
வேளாண் பட்ஜெட்

19. டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகளுக்காக தஞ்சாவூரில் தென்னை மதிப்புக்கூட்டு மையம் துவக்கப்படும். இதனால் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பம் எளிதாக கிடைக்கும்.

20. நீலகிரி மாவட்டம், எடப்பள்ளியில் ஒருங்கிணைந்த வேளாண் கிராம சந்தை ரூ.2 கோடியில் அமைக்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் கிராமங்களில் விளையும் விளைபொருள்களை அந்தப் பகுதியிலேயே விற்பனை செய்து கொள்ள முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு